🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணியாகவும், அருளாகவும் உள்ளவற்றையே இக்குர்ஆனில் நாம் இறக்கியுள்ளோம். அது, அநியாக்காரர்களுக்கு நஷ்டத்தைத் தவிர வேறெதையும் அதிகரிக்காது!”* (அல்குர்ஆன், 17: 82)
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு இதற்கு விளக்கம் கூறுகின்றார்கள்:-
*“உன் உள்ளத்திலுள்ள நோய் அகன்றுவிட வேண்டும் என்பதற்காக வைத்தியர்களிடம் சென்று சிகிச்சையளிக்கும்படி நீ எவ்வளவுதான் கேட்டுக்கொண்டாலும், அல்குர்ஆனைப் போன்ற ஒன்றை அதற்குரிய நிவாரணியாக உன்னால் பெற்றுக்கொள்ளவே முடியாது!”*
{ நூல்: 'ஷர்ஹுல் காfபியா அஷ்ஷாFபியா', 01/198 }
🎯 قال الله تعالى: *« وننزّل من القرآن ما هو شفاء وّرحمة لّلمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا »* (سورة الإسراء، الآية - ٨٢)
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى: *"مهما طلبت من الأطباء أن يزول عنك ما في قلبك فلن تجد مثل القرآن"*
{ شرح الكافية الشافية، ١/١٩٨ }
➖➖➖➖➖➖➖➖➖➖
🎯 “மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு *நல்லுபதேசமும், உள்ளங்களில் உள்ளவற்றிற்கு நிவாரணியும், நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், அருளும்* நிச்சயமாக வந்துவிட்டது!”. (அல்குர்ஆன், 10: 57)
*உபதேசம்- நோய் நிவாரணி- நேர்வழி- அருள்* ஆகிய இவையனைத்திற்கும் பின்னர், குர்ஆன் அல்லாத வேறு மாற்றீடு ஒன்றை எம்மால் விரும்பத்தான் முடியுமா...??!!
{முகநூல் : التصفية والتربية السلفية எனும் பக்கத்தில் }
🎯 قال الله تعالى: *« يا أيها الناس قد جاءتكم موعظة من رّبّكم وشفاء لما في الصّدور وهدى وّرحمة لّلمؤمنين »* (سورة يونس، الآية - ٥٧)
*موعظة-شفاء-هدى-رحمة*
أفبعد كلّ هذا نبتغي بغير القرآن بدلا...؟؟!
{ فيس بوك : 'التصفية والتربية السلفية' }
📝➖➖➖➖➖➖➖➖📝
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா