நேரம் ஓர் அருட்கொடை! அதை நாசமாக்கி விடாதீர்கள்!


           அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

           *“பயனுள்ள, பிரயோசனமான எதையும் நீ  பெற்றுக் கொடுக்காதிருக்கும் நிலையில் உனது நேரம் கழிந்து, உனது வாழ்நாளும் போய்க்கொண்டிருக்கிறது என்று நீ கண்டு கொண்டு, நேரத்தில் அபிவிருத்தியையும் நீ பெற்றுக்கொள்ளவில்லையென்றால் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தின் எச்சரிக்கை உன்னை வந்தடைந்து விட்டது எனப் புரிந்து அதில் நீ ஜாக்கிரதையாக இருந்து கொள்!* 

            *“எம்மை நினைவுகூர்வதை விட்டும் எவனது உள்ளத்தை நாம் மறக்கடிக்கச் செய்து, அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றி விட்டானோ அவனை (நபியே) நீர் பின்பற்றாதீர். அவனது விடயம் வரம்பு மீறியதாகவே உள்ளது”*(அல்குர்ஆன், 18:28 )

{ நூல்: 'தப்fஸீரு சூரதில் கஹ்ப்f' }



           قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى: *[ إذا رأيت وقتك يمضي وعمرك يذهب وأنت لم تنتج شيئا مفيدا ولا نافعا، ولم تجد بركة فى الوقت، فاحذر أن يكون أدركك قوله تعالى: « ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتّبع هواه وكان أمره فرطا » ]*

{ تفسير سورة الكهف }

➖➖➖➖➖➖➖➖➖➖

❇👉🏿  அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் மேலும்  கூறுகின்றார்கள்:-

         *ஓய்வு நேரத்தைப் பயனற்ற விதத்தில் கழித்தல் என்ற இவ்விடயம் வாலிபர்களின் நெறி பிறழ்வுக்குரிய மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஓய்வு நேரத்தைப் பயனற்ற விதத்தில் கழித்தலானது சிந்தனையையும்,  புத்தியையும்,  சக்திகளையும் கொலை செய்து விடுகின்ற ஒரு நோயாகும். ஏனெனில், ஆன்மாவுக்கு அசைவும், செயலும் அவசியமானதாக இருக்கின்றது!. இவற்றிலிருந்து இது நீங்கி விட்டால் சிந்தனை தடுமாற்றம் அடைந்து, புத்தி வரண்டுபோய், ஆன்மாவின் அசைவும் பலவீனமடைந்து, உள்ளத்தின் மீது தவறான ஊசலாட்டங்களும் மோசமான சிந்தனைகளும் ஆதிக்கம் செலுத்தி விடும்!!”*

{ நூல்: 'மின் முஷ்கிலாதிஷ் ஷபாப்', பக்கம்:14 }

 

            قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى: *[ إن من أهم أسباب انحراف الشباب الفراغ! فالفراغ داء قتال للفكر والعقل والطاقات،إذ النفس لا بدّ لها من حركة وعمل، فإذا كانت فارغة من ذلك تبلّد الفكر وثخن العقل وضعفت حركة النفس واستولت الوساوس والأفكار الرديئة على القلب ]*

{ من مشكلات الشباب،  ص - ١٤ }

🍁➖➖➖➖➖➖➖➖🍁

                *✍தமிழில்*

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم