இமாம் அஹ்மது பின் யஹ்யா அந்நஜ்மீ (ரஹ்) கூறுகின்றார்கள்:
*“சில வேளைகளில் மனிதன் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்துகிறான்! குறிப்பாக, ஈமானிய பலவீனமுடையவனாகவும், திக்ருகளைக் கொண்டும் அல்லது அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ்களில் வந்துள்ள துஆக்களைக் கொண்டும் குறைந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்பவனாகவும் அம்மனிதன் இ்ருக்கின்றபோது அவன் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தி விடுகின்றான்! அம்மனிதனைப் படைத்தும், பரிபாலித்தும் கொண்டிருக்கின்ற அவனது இரட்சகன் விடயத்தில் சில வேளை ஷைத்தான் அவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி, இறாஞ்சிக்கொண்டு செல்லக்கூடியவனாகவும் அவனை அவன் ஆக்கி விடுகின்றான். அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்! மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும் அல்லாஹ்விடம் நாம் கேட்போமாக!!*
*ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவதை முறையாகப் பேணிக் கடைப்பிடித்தல், சுன்னத்தான தொழுகையையும், அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள துஆக்களையும் முறையாகப் பேணிக் கடைப்பிடித்தல், அல்குர்ஆன் ஓதுவதை அதிகப்படுத்தல் என்பன போன்ற வணக்க வழிபாடுகளை அதிகமதிகம் செய்து இசைக்கருவிகள், இசைகள், பாடல்கள், திரைப்படங்கள், நாடகங்கள் போன்ற பாவங்களை விட்டும் தூரமாகி இருத்தலும்தான் இவற்றுக்கான சிகிச்சையாகும்.*
*இவை போன்ற விடயங்களிலிருந்து மனிதன் விலகி, கட்டாயமாகப் பேணிக் கடைப்பிடிக்கும்படி முன்னால் கூறப்பட்டுள்ள விடயங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் அவனை விட்டும் நிச்சயமாக ஷைத்தான் தூரப்போய் விடுவான்; அவனை நெருங்கவும் மாட்டான்; அம்மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தவும் அவனுக்கு முடியாமல் போய்விடும்!!”*
{ நூல்: 'அல்கவ்லுல் ஹஸீஸ் அலா அகீததி அஹ்லில் ஹதீஸ்', பக்கம்: 142 }
🍀➖➖➖➖➖➖➖➖🍀
قال الإمام أحمد بن يحي النجمي رحمه الله تعالى:-
*[ الشيطان يتسلّط على الإنسان أحيانا، وبالأخص إذا كان الإنسان ضعيف الإيمان، قليل التّحرّز بالأوراد أو الأدعية القرآنية والنبوية فيتسلّط عليه الشيطان، وقد يشكّكه في ربّه وخالقه، ويجعله يتخبّط... والعياذ بالله! نسأل الله العفو والعافية!!*
*وعلاج ذلك: أن يكثر من الطاعات؛ كالمحافظة على الصلاة في الجماعة، والمحافظة على صلاة النافلة، والمحافظة على الأوراد القرآنية والأوراد النّبوية، والإكثار من قراءة القرآن، والبعد من المعاصي؛ كالبعد عن آلات اللّهو، والأغاني، والتّمثيليّات وما أشبه ذلك.*
*فإذا ابتعد عن مثل هذه الأمور، وحافظ على ما يجب حفظه ممّا سبق ذكره؛ فإن الشيطان يبتعد عنه، ولا يقربه، ولا يستطيع عليه ]*
{ القول الحثيث على عقيدة أهل الحديث، ص - ١٤٢ }
🍀➖➖➖➖➖➖➖➖🍀
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா