சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் அல்பbத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
மதீனாவுக்குக் கிழக்கேயுள்ள சிறு கிராமமொன்றில், வீடு ஒன்றிலிருந்து பள்ளிவாயல் வாசல் வரைக்கும் கயிறு ஒன்று கட்டப்பட்டிருந்ததை நான் கண்டேன். இது குறித்து நான் கேட்ட போது, *“இது, கண்பார்வை அற்ற வயோதிபர் ஒருவரின் வீடு; வழிகாட்டி யாரும் அவருக்கு இல்லை. எனவே, ஒவ்வொரு தொழுகையின் போதும் பள்ளிவாயலுக்கு அவர் செல்வதற்கும், தன் வீட்டிற்குத் திரும்புவதற்கும் இந்தக் கயிற்றைத்தான் அவர் பிடித்துக்கொண்டு செல்வார்!”*என்று எனக்குச் சொல்லப்பட்டது.
{ நூல்: 'தஃழீமுஸ் ஸலாத்', பக்கம்: 67 }
قال الشيخ عبد الرزاق البدر حفظه الله تعالى:-
وقد رأيت في قرية صغيرة شرق المدينة حبلا مشدودا من بيت إلى باب المسجد فسألت عنه؛ فقيل: *[ هذا بيت رجل كبير السّنّ، كفيف البصر ليس له قائد! فيمسك بهذا الحبل عند كل صلاة ذهابا للمسجد، وإيابا لبيته... ]*
{ تعظيم الصلاة، ص - ٦٧ }
🔹🔹👇👇👇👇👇👇🔹🔹
❇👉🏿 அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:
*“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கண் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை!' என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்ற போது அவரை அழைத்து, 'பாங்கு சப்தம் உமக்குக் கேட்கிறதா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்! (கேட்கிறது) என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அப்படியானால் அதற்கு நீர் விடையளிப்பீராக!' (அதாவது, ஜமாஅத் தொழுகையில் சென்று கலந்து கொள்வீராக!) என்று கூறினார்கள்”.*
{ நூல்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் - 1157 }
☘➖➖➖➖➖➖➖➖☘
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா