மார்க்கத்தைப் படிப்பதில் சோர்வடையாதீர்கள்


🔅அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         *“(மார்க்கக்) கல்வியைத் தேடுவதில் சோர்வடையாதே! கல்வியை நீ தேடு; நீ பெற்றுக்கொண்டது சொற்பமாக இருந்தாலும் சரியே! சொற்பமான கல்வி நற்செயலுடன் சேர்கின்றபோது அதிலே 'பரக்கத்' எனும் அருள்வளமும் இருக்கும்; நலவும் இருந்துகொண்டிருக்கும். கல்வித் தேடலை இடைவிடாது தொடர்தல் என்பதைப் பொறுத்தமட்டில், அது நலவேதான் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. மார்க்க அறிவைத் தேடிப் படிப்பது ஓர் வணக்கமாகும்; இது,  உபரியான தொழுகையை விட  மிகச்சிறந்ததுமாகும்!”.*

{ நூல்: 'அல்இஜாபாதுல் முஹிம்மா', பக்கம்: 84 }

🔅அஷ்ஷெய்க் முஹம்மத் அமான் அல்ஜாமீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         *“ஒலி-ஒளி நாடாக்கள் மூலமாகவும், ஒலி-ஒளிபெருக்கி சாதனம் மூலமாகவும் மார்க்கக் கல்வி இன்று உன் வீட்டிற்குள் உன்னிடம் வந்துவிட்டது. பிரச்சினைகளுக்கான அறிவுசார் தீர்வுகள், இஸ்லாமிய பfத்வாக்கள் ஆகியனவும் உன்னிடம் வந்தடைந்துவிட்டன.*

            *ஆண்களோ,  பெண்களோ யாராக இருந்தாலும்,  இந்நேரம்  படித்துக்கொள்வதில்  யார் குறைவு செய்கிறாரோ அவர்தான் உண்மையில் குறைவு செய்தவராவார். இவர்  எங்கிருந்தாலும் (மார்க்க அறிவைக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்று) மிகச்சிறிய காரணம் ஒன்றைக்கூடச் சொல்லிக்கொள்ள ஒருபோதும் இவருக்கு அனுமதி இல்லை. எதுவரை என்றால்,  முஸ்லிம் அல்லாத நாடுகளிலே வாழக்கூடிய முஸ்லிமாக இருந்தாலும் அங்கே அவரிடமும் இந்த அறிவு போய் சேர்ந்துதான் இருக்கின்றது!”*

{ நூல்:'ஷர்ஹு அஸ்பாபி இன்ஷிராஹிஸ் ஸத்ர்' லிப்னில் கைய்யிம், பக்கம்: 52 }


🔅قال العلّامة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-

        *« لا تملّ من طلب العلم؛ أطلب العلم ولو كان إدراكك قليلا. والقليل مع العمل الصالح فيه بركة، وفيه خير، ومواصلة طلب العلم لا شك أنها خير، وطلب العلم عبادة. طلب العلم أفضل من صلاة النافلة »*.

{ الإجابات المهمة، ص - ٨٤ }

🔅قال الشيخ محمد أمان الجامي رحمه الله تعالى:-

         *« العلم دخل عليك في بيتك بواسطة الأشرطة والمذياع. دخلت عليك المسائل العلمية، والفتاوى الإسلامية.*

        *من قصّر في هذا الوقت في التعليم رجالا ونساءا فهو المقصّر، ليس له أدنى عذر أبدا أينما كان. حتى المسلم الذي يعيش في غير بلاد المسلمين، العلم يلحقه هناك »*.

{ 'شرح أسباب انشراح الصدر' لابن القيم، ص - ٥٢ }

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم