வணக்கசாலி 'ஹபீப் பின் முஹம்மத் அல்அஜமீ (ரஹ்) அவர்கள், ஆரம்பத்தில் ஓர் வர்த்தகராக இருந்து வட்டிக்குப் பணத்தைக் கொடுப்பவர்களாகக் காணப்பட்டார்கள். ஒரு நாள், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்குப் பக்கத்தில் அவர் நடந்து சென்றபோது *“வட்டி உண்பவர் வந்திட்டாரு!”* என்று அச்சிறுவர்களில் சிலர் இவரைப் பார்த்துக் கூறினர். இதைச் செவிமடுத்த ஹபீப் அவர்கள் வெட்கத்தால் தன் தலையைக் கீழே தொங்கப்போட்டுக்கொண்டு, *“என் இரட்சகனே! என் ரகசியத்தை இச்சிறுவர்களுக்கே நீ தெரியப்படுத்தி விட்டாயா!?* என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்கள்.
பின்னர் அவர், கம்பளியினாலான நீண்ட ஆடையொன்றை அணிந்து தன் கையை அதற்குள் போட்டுக்கொண்டு தனக்கு முன்னால் தனது பணத்தையெல்லாம் கொண்டுவந்து வைத்து, *“என் இரட்சகனே! இப்பணத்தின் மூலம் என்னை நான் உன்னிடமிருந்து வாங்கிக்கொள்கின்றேன். எனவே, என்னை நீ உரிமையிட்டு விடு!”*எனச் சொல்லிக்கொண்டார்கள். காலையான போது அப்பணம் முழுவதையும் அவர்கள் தர்மம் செய்தும் விட்டார்கள். அதன் பின்னர் அவர் வணக்க வழிபாட்டில் ஈடுபட ஆரம்பித்து ஓர் நோன்பாளியாக, அல்லது இரவில் நின்று வணங்குபவராக, அல்லது அல்லாஹ்வை திக்ர் செய்பவராக, அல்லது தொழக்கூடிய ஒருவராகவே பார்க்கப்பட்டார். இப்படியிருக்க ஒரு நாள் ஹபீப் அவர்கள்,“வட்டி உண்பவர்!” என தன்னைப் பழித்த அதே சிறுவர்களுக்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்தார்!. அவரைப் பார்த்த அச்சிறுவர்களில் சிலர் மற்றவர்களிடம், *“வணக்கசாலி ஹபீப் வந்துவிட்டார்; அமைதியாய் இருங்கள்!”* என்று கூறினர். இதைக்கேட்ட
ஹபீப் பின் முஹம்மத் அல்அஜமீ (ரஹ்) அவர்கள் அழுதுவிட்டார்கள்.
{ நூல்: 'தஹ்தீபுbல் கமால்', 5/390 }
☘➖➖➖➖➖➖➖➖☘
[ كان حبيب بن محمد العجمي رحمه الله تعالى رجلا تاجرا يعير الدراهم، فمرّ ذات يوم بصبيان يلعبون، فقال بعضهم: قد جاء آكل الربا ! فنكس رأسه، وقال: يا ربّ! أفشيت سرّي إلى الصبيان. فرجع فلبس مدرعة من شعر وغلّ يده، ووضع ماله بين يديه، وجعل يقول: يا ربّ! إني أشتري نفسي منك بهذا المال فأعتقني! فلما أصبح تصدق بالمال كله،وأخذ فى العبادة. فلم ير إلا صائما أو قائما أو ذاكرا أو مصليا. فمرّ ذات يوم بأولئك الصبيان الذين كانوا عيّروه بآكل الرّبا، فلما نظروا إليه قال بعضهم: *"أسكتوا فقد جاء حبيب العابد!"*، فبكى ].
{ تهذيب الكمال، ٥ / ٣٩٠ }
☘➖➖➖➖➖➖➖➖☘
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா