இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“இவ்வுலகில் தனது நிலையையும், தனது இறுதி முடிவையும் ஞாபகப்படுத்திப் பார்ப்பது மனிதனுக்கு அவசியமாகும். இவ்வுலக வாழ்க்கையின் முடிவு என்பது முடிவே அல்ல. மாற்றமாக, இதற்குப் பின்னால் இதைவிட மிகப்பெரிய குறிக்கோள் ஒன்று இருக்கிறது. அதுதான் மறுமையாகும்!. எனவே, மனிதன் எப்போதும் மரணத்தை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அன்புக்குரியவர்களுக்காக வேண்டியோ, மன விருப்பை ஏற்படுத்தும் வழமையான விடயங்களுக்காக வேண்டியோ பிரிவதாக அந்தப் பிரிவின் அடிப்படை இருக்கக் கூடாது. இப்படிப் பார்க்கும் பார்வை குறைபாடான பார்வையேயாகும். என்றாலும், மறுமைக்காக வேண்டிச் செய்த செயல், அதற்காகப் பயிரிட்டது என்பதற்கான பிரிவாகவே அப்பிரிவின் அடிப்படை இருக்க வேண்டும். இந்தப் பார்வையைப் பார்க்கும் மனிதன்தான் மறுமைக்குத் தயாராகி, அதற்கான செயல்பாட்டில் அதிகமாக ஈடுபடுவான். முதல் பார்வையாக இவன் பார்த்தால் கவலைப்படுவான்; விடயமும் மோஷமாகி விடும். மரணத்தை மறுமைக்கான பிரிவாகப் பார்க்காது, உலகத்தின் பிரிவாக மட்டும் பார்க்கும இவனது இந்தக் கண்ணோட்டமானது கைசேதத்தையும் கவலையையுமே அதிகப்படுத்தும். ஆனாலும் அவன், மறுமைக்காகச் செயல்பட்டு, அதற்காகத் தயாராகுவதற்காக வேண்டி மரணத்தை ஞாபகப்படுத்தினான் என்ற அமைப்பில் சிந்தித்துச் செயல்படுபவனாக இருந்தால் அவனுக்கு அது கவலையை அதிகப்படுத்தாது; அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கிச் செல்வதைத்தான் அது அவனுக்கு அதிகப்படுத்தும்!.
மனிதன் தனது இரட்சகன் பக்கம் முன்னோக்கிச் சென்றுவிட்டால், அவனது நெஞ்சு (இஸ்லாமிய விளக்கத்தின்) விரிவாக்கத்தாலும், அவனது உள்ளம் அமைதியாலும் அதிகரித்து விடும்!”.
{ நூல்: 'அஷ்ஷர்ஹுல் மும்திஃ அலா ஸாதில் முஸ்தக்னிஃ', 5/298,299 }
🍁➖➖➖➖➖➖➖➖🍁
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
[ وينبغي للإنسان أن يتذكر حاله ونهايته في هذه الدنيا، وليست هذه النهاية نهاية، بل وراءها غاية أعظم منها وهي الآخرة. فينبغي للإنسان أن يتذكر دائما الموت لا على أساس الفراق الأحباب والمألوف؛ لأن هذه نظرة قاصرة، ولكن على أساس فراق العمل والحرث للآخرة. فإنه إذا نظر هذه النظرة استعد وزاد في عمل الآخرة، وإذا نظر النظرة الأولى حزن وساءه الأمر، فيكون ذكره على هذا الوجه لا يزداد به إلا تحسرا وندما. أما إذا ذكره على الوجه وهو أن يتذكر الموت ليستعد له ويعمل للآخرة فهذا لا يزيده حزنا،وإنما يزيده إقبالا إلى الله عز وجل. وإذا أقبل الإنسان على ربه فإنه يزداد صدره إنشراحا، وقلبه إطمئنانا ].
🍁➖➖➖➖➖➖➖➖🍁
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா