மனைவிமார்கள் தமது கணவன்மார்களுக்குத்தான் பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்


          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         *“தமது தாய்மார்களுக்குப் பணிவிடை செய்யக்கூடியவர்களாக தமது மனைவிமார்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற  சில கணவன்மார்களுக்கு உபதேசமாக நான் கூறுகின்றேன்: 'நிச்சயமாக இது தெளிவான  தவறொன்றாகும். மனைவி தனது  கணவனின் தாய்க்கோ, அல்லது கணவனின் தந்தைக்கோ பணிவிடை செய்யும் ஓர் வேலைக்காரி அல்ல; கணவனின் தாய், அல்லது தந்தைக்கு அவள் செய்யும் பணிவிடை (விரும்பி) அவள் செய்கின்ற நன்மையான காரியமாகவும், உபகாரமாகவுமே இருக்கும். மாறாக, இது அவள் மீது கடமையாக்கப்பட்ட ஒன்றாக இருக்கவேமாட்டாது!*

             *எனவே, கணவன் தனது தாய்க்கோ, அல்லது தனது தந்தைக்கோ பணிவிடை செய்யுமாறு தனது மனைவியைக் கட்டாயப்படுத்துவதும் கூடாது; அல்லது, அவ்வேலையை அவள் செய்யவில்லை என்பதற்காக அவள் மீது கோபம் கொள்வதும் கூடாது. இது விடயத்தில் கட்டாயம் அவன் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும்!”*

{ நூல்' 'fபதாவா நூருன் அலத் தர்ப்', பக்கம்: 43 }


🔮➖➖➖➖➖➖➖➖🔮

           قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

              *{ إني أنصح بعض الأزواج الذين يريدون من زوجاتهم أن يكنّ خدما لأمهاتهم فإن هذا غلط محض. فالزوجة ليست خادمة لأم الزوج ولا لأبي الزوج. وخدمتها لأم الزوج وأبي الزوج معروف منها وإحسان، ليس مفروضا عليها!*

        *لا يجوز للزوج أن يلزم زوجته بخدمة أمه أو أبيه، أو أن يغضب عليها إذا لم تقم بذلك، وعليه أن يتقي الله! }*

[ فتاوى نور على الدرب، ص - ٤٣ ]

🔮➖➖➖➖➖➖➖➖🔮

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم