அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“ஷைத்தானுடன் புரியும் போராட்டம் இரண்டு படித்தரங்களைக் கொண்டிருக்கின்றது:
*ஒன்று:* மனிதனிடம் ஷைத்தான் போடுகின்ற வீண் குற்றச்சாட்டுகள், ஈமானில் பாதிப்பை ஏற்படுத்தும் சந்தேகங்கள் ஆகிவயவற்றைத் தடுத்து நிறுத்துவதற்காக அவனுடன் செய்யும் போராட்டம்.
*இரண்டு:* மனிதனிடம் ஷைத்தான் கொண்டுவந்து போடுகின்ற மோசமான எண்ணங்கள், மனோ இச்சைகள் ஆகியவற்றைத் தடுப்பதற்காக அவனுடன் புரிகின்ற போராட்டம்.
முதலாம் வகைப் போராட்டத்திற்குப் பின்னணித் தேவையாக இருக்க வேண்டியது (இஸ்லாம் பற்றிய தெளிவுடன் கூடிய) உறுதியாகும். இரண்டாம் வகைப் போராட்டத்திற்குப் பின்னணித் தேவையாக இருக்க வேண்டியது பொறுமையாகும். அல்லாஹ் கூறுகிறான்: *“அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, எமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தபோது எமது கட்டளைப் பிரகாரம் நேர்வழி காட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து நாம் உருவாக்கினோம்”* (அல்குர்ஆன், 32: 24)
மார்க்க ரீதியான தலைமைத்துவம், பொறுமையின் மூலமும் உறுதியின் மூலமும்தான் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதாக இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வகையில், மனோ இச்சைகளையும் மோசமான எண்ணங்களையும் பொறுமை தடுத்து விடுகிறது! சந்தேகங்களையும், வீண் குற்றச்சாட்டுகளையும் தெளிவுடன் கூடிய உறுதி தடுத்து விடுகின்றது!”.
{ நூல்: 'ஸாதுல் மஆத்', 03/10 }
🎯➖➖➖➖➖➖➖➖🎯
قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-
{ وأما جهاد الشيطان فمرتبتان:
*إحداهما:* جهاده على دفع ما يلقي إلى العبد من الشبهات والشكوك القادحة في الإيمان.
*الثانية:* جهاده على دفع ما يلقي إليه من الإرادات الفاسدة والشهوات.
فالجهاد الأول يكون بعده اليقين، والثاني يكون بعده الصبر. قال تعالى: *« وجعلنا منهم أئمّة يّهدون بأمرنا لمّا صبروا، وكانوا بآياتنا يوقنون »* (سورة السجدة، الآية: ٢٤). فأخبر أن إمامة الدين إنما تنال بالصبر واليقين؛ فالصبر يدفع الشهوات والإرادات الفاسدة، واليقين يدفع الشكوك والشبهات }.
[ المصدر: 'زاد المعاد' ، ٣/١٠ ]
🎯➖➖➖➖➖➖➖➖🎯
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா