பெண்ணுக்குப் பெருமை சேர்த்து கண்ணியம் பெற்றுக்கொடுக்கும் வாழ்க்கை எது?


          அல்லாமா, அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         *“இஸ்லாமிய ஒழுக்க வரம்புகளுடன் பெண் வாழ்கின்றபோது குறிப்பாக தன்னளவில்  சிறப்பும் கண்ணியமும் பொருந்திய வாழ்க்கையை அவள் வாழ்ந்து வரும் அதேநேரம், சமுதாய மட்டத்திலும் கண்ணியவான்களின் வாழ்க்கையையும், சிறப்புமிக்கவர்களின் வாழ்வையுமே அவள் வாழ்ந்துகொண்டிருப்பாள். இவள் குழப்பத்திற்குள்ளாக்கப்பட்டு, குழப்பத்துக்கு அழைப்பு விடுக்கும் அழைப்பாளர்களுடனும்,  தீமை மற்றும் மோசமான விடயங்களின்பால் அழைக்கும் அழைப்பாளர்களுடனும் செல்வாளாக இருந்தால் அந்நேரம் தானும் அழிந்து போவதோடு பிறரின் அழிவுக்கும் அவள் காரணமாகி விடுவாள்.*

         *எனவே, என்றோ ஒரு நாள் இவ்வுலக வாழ்க்கைக்கு விடை கொடுத்து (மறுமை நோக்கி) தான் புறப்பட்டுச் செல்லவுள்ளேன்  என்பதை  இவள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும்! அழகிய தன் உடலுடனும், குழப்பத்துக்குத் தூண்டும் தன் அலங்காரங்களுடனும், தன்னை அந்நிய ஆடவர் பார்க்கும்படியாக  அலங்கரித்து, அவர்களின் குழப்பத்திற்கு இவள் காரணமாக இருக்கின்ற வேளையில் (மரணம் சம்பவிக்கின்ற) ஒரு நாள் இவளுக்கு வரும். அப்போது இவள்:*

*🔹மண்ணறைக் குழிக்குள் வைக்கப்படுவாள்!*

*🔹அவள் மீது மண் கொட்டப்படும்!*

*🔹புழுக்கள் அவளைச் சாப்பிடும்!*

*🔹அவளின் அழகும் வசீகரமும் அவளை விட்டும் போய் விடும்!*

*🔹அந்நேரம் (இவ்வுலகில் புரிந்த) தன் செயல்களின் அடைமானத்தோடு அக்குழிக்குள் அவள் இருந்துகொண்டிருப்பாள்!*

          *இத்தகைய இப்பெண்ணுக்கு முன்னர் பல பெண்கள் இருந்துள்ளனர். அவர்கள், (மறுமையின் சொகுசுக் குடியிருப்புக்குத் தேவையான) மாளிகைகளை (இவ்வுலகிலேயே) நிர்மாணித்துக்கொண்டனர். அதன் பின்னரே மண்ணறைகளில் சென்று அவர்கள் குடியிருந்தனர். எனவே, முஸ்லிம் பெண் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளட்டும்! அத்துடன்,  அந்நாளுக்குத் தேவையான தனது  கட்டுச்சாதத்தையும் அவள் தயார் செய்து வைத்துக்கொள்ளட்டும்!*

{ நூல்: 'மவ்இழதுன் நிசா', பக்கம்: 39 }

🌹➖➖➖➖➖➖➖➖🌹

        قال العلّامة الشيخ عبدالرزاق البدر حفظه الله تعالى:-

       { إن المرأة إن عاشت مع آداب الإسلام عاشت حياة كريمة فاضلة في نفسها خاصة وفي مجتمعها حياة الكرماء وعيش الأفاضل النبلاء. وإن فتنت ومضت مع دعاة الفتنة ودعاة الشر والفساد هلكت في نفسها وكانت سببا لهلاك غيرها.

      ولتتذكر أنها يوما من الأيام ستغادر هذه الحياة، وأنها بجسمها الجميل ومحاسنها الفتنة وتزيينها لنفسها وفتنتها للرجال سيأتي عليها يوم:

🔹تدرج في حفرة!

🔹ويهال عليها التراب!

🔹وتأكلها الديدان!

🔹ويذهب عنها رونقها وجمالها!

🔹وتكون في تلك الحفرة رهينة أعمالها!

         فقد كانت قبلها نساء عمرن القصور ثم سكنّ القبور. فلتتّق الله المرأة المسلمة، ولتعدّ لهذا اليوم عدّته !! }

[ موعظة النساء، ص - ٣٩ ]

🌹➖➖➖➖➖➖➖➖🌹

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم