அஷ்ஷெய்க் அப்துஸ்ஸலாம் பின் பbர்ஜஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
*“மிகச் சொற்ப தொகையினரால் நிச்சயமாக நாம் இக்காலத்தில் சோதிக்கப்பட்டு விட்டோம். நிறையப்பேர் இல்லாமல் மிகக் கொஞ்சப்பேர் என்ற வகையில் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உண்டாகட்டும். இந்தச் சிலர் என்ன செய்கின்றார்கள் என்றால் ஒரு நூல், அல்லது இரு நூல்களை இவர்கள் வாசிக்கின்றார்கள்; மார்க்கச் சட்ட விவகாரம் ஒன்றை, அல்லது இரண்டை இவர்கள் மனனம் செய்து விடுகின்றார்கள்; பின்னர், கல்வித் தேடலில் ஈடுபாடு காட்டும் தமது அக்காலப் பகுதிக்குள் ஒரு நாள், அல்லது இரு நாட்களின் பின்னர் 'முஜ்தஹித்கள்' எனும் மார்க்க சட்ட வல்லுனர்களாக இவர்கள் மாறிப்போய் விடுகின்றார்கள். உணர்வற்ற இந்த கற்பனைச் சிந்தனை மீது தமது நிலைப்பாட்டை இவர்கள் சுருக்கிக்கொண்டிருந்தால் பரவாயில்லை! மாறாக, பிற அறிஞர்களையும், குறிப்பாக கல்வித் தேடலில் ஈடுபடுவோர் மற்றும் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வோரையும் இவர்கள் சிறுமைப்படுத்தி குறைத்தல்லவா மதிப்பீடு செய்கின்றார்கள்! அத்தோடு, உயர்வான இடமொன்று தமக்கு இருப்பதாகவும், அவ்விடத்தை எவருமே அடைய முடியாது என்பதாகவும் இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ஆடைகளிலும், இவர்களது நடையிலும், இவர்களின் பேச்சுக்களிலும் இது தெளிவாகவே வெளிப்படுகிறது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! இவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!”*
{ நூல்: 'அவாயிகுத் தலப்b', பக்கம்: 40 }
📚➖➖➖➖➖➖➖➖📚
قال الشيخ عبدالسلام بن برجس رحمه الله تعالى:-
{ وقد بلينا في هذا الزمان بشرذمة قليلة - ولله الحمد - يقرؤون كتابا أو كتابين، ويحفظون مسألة أو مسألتين، ثم بعد يوم أو يومين من أعمارهم في الطلب يصبحون مجتهدين! وليتهم يقتصرون على هذا الخيال الكاسد؛ بل يستصغرون غيرهم من العلماء، بل طلبة العلم والدّعاة. ويرون لأنفسهم مكانا عاليا لا يصل إليه أحد، ويظهر ذلك على ملابسهم ومشيهم وكلامهم، فإنا للّه وإنا إليه راجعون! نسأل الله تعالى أن يهديهم سواء السّبيل }
[ عوائق الطلب، ص - ٤٠ ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
💢📚📚📚📚📚📚📚📚💢