நாம் செல்லும் பாதைகளில் ஷைத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்; மிகக் கவனமாகப் பயணிப்போம்


           இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“மனிதன் செல்லும் பாதை எதுவாக இருந்தாலும் அதிலே ஷைத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றான். அப்பாதை, நல்ல பாதையாகவோ அல்லது கெட்ட பாதையாகவோ இருப்பினும் சரியே! (அவன் செல்வது) நல்ல பாதையாக இருந்தால், அதில் செல்வதை விட்டும் அவனைத் தடுப்பதற்காக அதில் ஷைத்தான் உட்கார்ந்து கொண்டிருப்பான்; தீய பாதையாக இருந்தால், அதில் செல்ல அவனைத் தூண்டுவதற்காக அதிலே அவன் உட்கார்ந்து கொண்டிருப்பான்!.*

                நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இவ்வாறு  கூறினார்கள்: *“மனிதன் செல்லும் (நல்ல) பாதைகளில்  (அவனை வழிகெடுப்பதற்காக) நிச்சயமாக  ஷைத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றான்.....!”*(நூல்கள்: 'முஸ்னத் அஹ்மத்' 3/483, 'ஷுஅபுல் ஈமான்' லில் பைஹகீ 4/21, 'அல்முஸன்னfப்' லிப்னி அபீ ஷைபா 5/293)

           எனவே, நாம் எச்சரிக்கையாக இருந்துகொள்வோம்! ஷைத்தானிலிருந்து அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!!

[ http://al-badr.net/muqolat/3340 ]


            قال الشيخ عبدالرزاق البدر حفظه الله تعالى :-

       *{ ما من طريق يسلكه إبن آدم إلاّ والشّيطان قاعد فيه سواء كان الطريق طريق خير أو طريق شرّ ؛ فإن كان طريق خير قعد فيه ليصدّه عن المضي فيه، وإن كان طريق شرّ قعد فيه ليستحثه على المضي فيه... قال صلّى الله عليه وسلم: « إنّ الشيطان قعد لابن آدم بأطرقه »* ( مسندالإمام أحمد ٣/٤٨٣، شعب الإيمان للبيهقي ٤/٢١، المصنّف لابن أبي شيبة ٥/٢٩٣)

           *فلنكن على حذر ،  أعاذنا الله منه! }*

[ http://al-badr.net/muqolat/3340 ]

🛣🛣👇👇👇👇👇👇🛣🛣

🎯 *“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள்  ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். எவன் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றானோ அவனுக்கு நிச்சயமாக (ஷைத்தான்) மானக்கேடான செயலையும், வெறுக்கத்தக்கதையுமே ஏவுவான். அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் உங்களுக்கு இல்லை என்றிருந்தால் உங்களில் எவரும் எப்போதும் தூய்மையடைந்திருக்கமாட்டார். எனினும், தான் நாடுவோரை அல்லாஹ் தூய்மைப்படுத்துகின்றான். அல்லாஹ் செவியுறுபவன்; நன்கறிந்தவன்”.*

(அல்குர்ஆன், 24: 21)

⛱➖➖➖➖➖➖➖➖⛱

               *✍தமிழில்✍*

                     அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم