🎯 *“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்!🔅இவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி, திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால் உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக் கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது; (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாகமாட்டீர்கள்!”* (அல்குர்ஆன், 02: 278,279)
அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்)
கூறுகின்றார்கள்:-
*“வட்டிப் பரிமாற்ற நடவடிக்கையைத் தடுக்கும் எச்சரிக்கைகள் அடங்கிய வாசகம் இவ்வசனங்களில் இருக்கின்றன...*
*👉🏿 ஒன்று: “நம்பிக்கை கொண்டோரே!”* என்று அல்லாஹ் தனது அடியார்களை விசுவாசப் பெயர் சூட்டி அழைக்கின்றான். *“நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால்..”* என்றும் அவன் கூறுகிறான். இது, வட்டிப் பரிமாற்ற நடவடிக்கை இறைவிசுவாசிக்குப் பொருத்தமற்றதும் தகுதியற்றதும் என்பதைத் தெரிவிக்கிறது.
*👉🏿 இரண்டு:*
*“அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்!”* என்று அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான். இது, வட்டிப் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவன் அல்லாஹ்வைப் பயப்படாதவனாகவும், அவனை அஞ்சி நடக்காதவனாகவும் இருக்கின்றான் என்பதைத் தெரிவிக்கிறது.
*👉🏿 மூன்று:* இங்கே அல்லாஹ், *“வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்!”* என்று கூறுகிறான். இது, வட்டியை (எடுக்காது) விட்டுவிடும்படியான ஏவலாகும். (எடுக்காது விட்டுவிட வேண்டும்) என்ற இந்த ஏவல் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்தையே தெரிவிக்கிறது. எனவே, (இதை மீறி) ஒருவன் வட்டிப் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவன் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கண்டிப்பாகவே மாறு செய்துவிட்டான்.
*👉🏿 நான்கு:* வட்டித் தொடர்பாடலை விட்டுவிடாதவன் போர்ப்பிரகடனம் செய்துவிட்டதாக அல்லாஹ் அறிவிக்கின்றான். *“(வட்டியை விட்டு விடுகின்ற வேலையை) நீங்கள் செய்யவில்லையானால்...”* ௭ன்று அல்லாஹ் இங்கு குறிப்பிட்டு விட்டு, *“அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள்!”* அதாவது, “அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் நீங்கள் போராடுகிறீர்கள் எனப் புரிந்து கொள்ளுங்கள்!” எனக் கூறுகிறான்.
*👉🏿 ஐந்து:* வட்டித் தொடர்பாடலில் ஈடுபடுபவன் “அநியாயக்காரன்” என்பதாக இங்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது, *“உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக் கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது; (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாகமாட்டீர்கள்!”* என்ற அல்லாஹ்வின் இக்கூற்றில் வந்திருக்கின்றது.
எனவே, உங்கள் கொடுக்கல்- வாங்கல்களில் வட்டி வந்து நுழைந்துகொள்வது குறித்தும், உங்கள் சொத்து செல்வங்களோடு அது கலந்துவிடுவது குறித்தும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்! காரணம், வட்டிப் பணத்தில் சாப்பிடுவதும், வட்டிப் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதும் பெரும்பாவங்களில் ஒன்றாகும். எந்த சமூகத்தில் வட்டியும், விபச்சாரமும் பகிரங்கமாக இடம்பெறுமோ அந்த சமூகத்தில் வறுமையும், குணப்படுத்துவதற்குக் கஷ்டமான நோய்களும், ஆட்சியாளரின் அநியாயமும் வெளிப்படையாகவே இடம்பெறும். வட்டி என்பது சொத்து செல்வங்களை அழித்து, அருள்வளங்களையும் இல்லாமலாக்கி விடும்!”.
{ நூல்: 'அல்முலஹ்ஹஸுல் fபிக்ஹீ ', 02/41 - 43 }
🌠➖➖➖➖➖➖➖➖🌠
👈🏿 قال الله تعالى: *{ يا أيها الذين آمنوا اتّقوا الله وذروا ما بقي من الرّبا إن كنتم مؤمنين🔅فإن لّم تفعلوا فأذوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون }* (سورة البقرة : الآية ٢٧٨ - ٢٨٠)
قال العلّامة صالح بن فوزان الفوزان حفظه الله:-
*{ففي هذه الآية الكريمة جملة تهديدات عن تعاطي الرّبا....*
*👈🏿 أولا:* أنه سبحانه نادى عباده باسم الإيمان : *« يا أيها الذين ءامنوا »*، وقال: *« إن كنتم مؤمنين »*. فدلّ على أن تعاطي الرّبا لا يليق بالمؤمن.
*👈🏿 ثانيا:* قال تعالى: *«إتّق الله»*، فدلّ على أن الذي يتعاطى الرّبا لا يتّقي الله ولا يخافه.
*👈🏿 ثالثا:* قال تعالى: *«وذروا ما بقي من الرّبا»*، أي: أتركوا. وهذا أمر بترك الرّبا، والأمر يفيد الوجوب، فدلّ على أن من يتعاطى الرّبا قد عصى أمر الله.
*👈🏿 رابعا:* أنه سبحانه أعلن الحرب على من لم يترك التعامل بالرّبا؛ فقال تعالى: *«فإن لّم تفعلوا»*، أي: لم تتركوا الرّبا: *«فأذنوا بحرب من الله ورسوله»*، أي: إعلموا أنكم تحاربون الله ورسوله.
*👈🏿 خامسا:* تسمية المرابي ظالما، وذلك في قوله تعالى: *«فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون»*.
فاحذروا من دخول الرّبا في معاملاتكم، واختلاطه بأموالكم؛ فإن أكل الرّبا وتعاطيه من أكبر الكبائر، وما ظهر الرّبا والزّنى في قوم إلا ظهر فيهم الفقر والأمراض المستعصية وظلم السّلطان؛ والرّبا يهلك الأموال ويمحق البركات".
{ الملخص الفقهي، ٢/٤١،٤٣ }
🌠➖➖➖➖➖➖➖➖🌠
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா