🎯ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: *“நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் (கத்னா) செய்யப்படாதவர்களாகவும் ஒன்று திரட்டப்படுவீர்கள்”* என்று இறைத்தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்.
உடனே நான், *“இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே!?”* என்று கேட்டேன்.
அதற்கு நபியவர்கள், *“அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்”* என்று கூறினார்கள். (நூல்: புகாரி - 6527, முஸ்லிம் - 5491,5492)
இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
“மனிதர்கள் மண்ணறைகளிலிருந்து செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் (கத்னா) செய்யப்படாதவர்களாகவும் எழுந்து வருவார்கள் என்று இந்த நபிமொழி கூறுகின்றது.
⚡ *செருப்பு அணியாதவர்கள் என்பதன் கருத்து:* அவர்களின் பாதங்களில் செருப்புகளோ, காலணிகளோ (SHOES), காலுறைகளோ இருக்காது என்பதாகும்.
*⚡நிர்வாணமானவர்கள் என்பதன் பொருள்:* அவர்கள் மீது ஆடைகள் இருக்காது. கட்டாயம் மறைக்கப்பட வேண்டிய அவர்களின் மறைவிடப் பகுதிகள் (அவ்ரத்துகள்) மறைக்கப்படாமல் வெளியே தெரிந்துகொண்டிருக்கும். தமது தாய்மார்களின் வயிறுகளிலிருந்து எவ்வாறு அவர்கள் (ஆடைகளின்றி) வெளிவந்தார்களோ அது போன்றே பூமிக்குள் இருந்தும் அவர்கள் வெளிவருவார்கள். இந்நிலையை அல்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது. “எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் *படைப்புக்களை முதலாவதாக நாம் ஆரம்பித்து உருவாக்கியது போன்றே மீண்டும் அதனை நாம் மீட்டுவோம்*”. (21:104)
*⚡விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள் என்பதன் பொருள்:*
உலகில் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது ஆணுறுப்பின் மேல்பகுதியில் வெட்டப்பட்டிருந்த அந்த தோல் துண்டு மறுமை நாளன்று மீண்டும் அவ்விடத்திற்கு மீட்டிக் கொண்டுவரப்படும். முடிவில், மனிதர்கள் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக தமது தாய்மார்களின் வயிறுகளிலிருந்து வெளிவந்தது போல் தமது மண்ணறைகளிலிருந்து வெளியேறி வருவார்கள்.
மறுமை நாளன்று மனிதர்கள் தமது மண்ணறைகளிலிருந்து அகிலத்தாரின் இரட்சகனிடம் வெளியேறி வருவது இவ்வாறுதான் இருக்கும்”.
{ 'சில்சிலது பfதாவா நூருன் அலத் தர்ப்' - இறுவட்டு இலக்கம்: 271 }
🎯 عن عائشةَ، رضي اللَّه عنها قَالَتْ: سمعتُ رَسُول اللَّه ﷺ، يقول: *« يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حُفَاةً عُراةً غُرْلًا »*، قُلْتُ: يَا رَسُول اللَّه! *«الرِّجَالُ وَالنِّسَاءُ جَمِيعًا يَنْظُرُ بَعْضُهُمْ إِلى بَعْضٍ؟»*، قَالَ: *« يَا عَائِشَةُ! الأَمرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُم ذلكَ »*.
🖊 قال الشيخ محمد بن صالح العثيمين رحمه الله تعالى :
◉ يـقوم الـناس مـن قبـورهم :
(❶) *حــفـاةً*
(❷) *عـــراةً*
(❸) *غـــرلاً*
❍ أمـا *حـفاةً* فمـعناه : أنـه ليـس فـي أقـدامهم نعـالٌ، ولا خفـاف ، ولا جـوارب
❍ وأما *عـراةً* مـعناه : أنـه لـيس علـيهم ثيـاب ، الـعورات بـادية كمـا خـرجوا مـن بطـون أمهـاتهم يـخرجون مـن بطـون الأرض، كـما قـال الله تعالـى : *{ يَوْمَ نَطْوِي السَّمَاءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ ۚكَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ ۚ}*َ « سورة الأنبياء، الآية - ١٠٤ ».
❍ *غُـــرلا ً*: أي غـير مـختونين أي أن الغـلفة التـي تقـطع فـي الـختان فـي الدنيـا ، وهـي الجـلدة التـي علـى رأس الـذكر تعـاد يـوم القـيامة حـتى يـخرج الـناس مـن قـبورهم كمـا خرجـوا مـن بـطون أمـهاتهم غـير مختونين
👈 هـكذا يـخرج الـناس مـن قـبورهم لـرب العـالمين جـل وعلا.
📓المصـــدر : سـلسلة فـتاوى نـور علـى الـدرب 📼 الشـريط رقـم [271]
⚡♾♾♾♾♾♾♾♾⚡
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.