அளந்து பேசாத வார்த்தைகள் ஆபத்தில் கொண்டுபோய் சேர்க்கும்!

🎯  இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழியழ்ழாஹு அன்ஹு)  அவர்கள் அறிவிக்கின்றார்கள்: *“ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்”.* 

[ நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் - 6478 ]


*✍ விளக்கவுரை:*

          நல்ல வார்த்தை பேசியதற்குப்  பயனாகக் கிடைக்கும் நற்கூலி, தீய பேச்சு பேசியதற்காகக் கிடைக்கும் தண்டனை என நாம் பேசும் வார்த்தை ஏற்படுத்தும் தாக்கத்தை இப்பொன்மொழியில் நபிகள் நாயகம் ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். 

            அல்லாஹ் திருப்திப்பட்டு அவன் விரும்பும் வார்த்தையொன்றை அவனின் அடியான் பேசுகிறான். அது, அற்பமான சாதாரண விடயம் என்பதற்காக அவனது உள்ளமோ, சிந்தனையோ அதை ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை; அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவுமில்லை. என்றாலும், பேசிய அம்மனிதனின் அவ்வார்த்தைக்காக சுவர்க்கத்தில் அந்தஸ்துகளை அவனுக்கு அல்லாஹ்  உயர்த்துகிறான். அதேநேரம், இன்னொரு மனிதன் அல்லாஹ் கோபித்து, வெறுத்து, திருப்திப்படாத ஒரேயொரு வார்த்தையைத்தான்  பேசுகிறான். அது, அற்பமான விடயம் என்பதற்காக அவனது உள்ளமும் சிந்தனையும் அதை ஏறெடுத்தோ, முக்கியத்துவப்படுத்தியோ நோக்கவுமில்லை. என்றாலும் அவன், நரகப் படுகுழிகளில் போய் விழுந்து விடுகின்றான்.

           'மனிதன் பேசுகின்ற பேச்சு என்ற இந்த விடயம்தான், அது தோற்றுவிக்கும் விளைவையே வரையறுக்கிறது. எனவேதான்,  முஸ்லிமான ஒருவர் (ஈமானுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்படிப்)  பேசுகின்ற ஒரு வார்த்தையின் காரணத்தால் இஸ்லாத்திலிருந்தே அவர் வெளியேறி விடுகிறார். இன்னும் சிலபோது, அவர் பேசும் ஒரு வார்த்தையைக்கொண்டு இஸ்லாத்திற்கு அல்லாஹ் உதவியும் செய்து விடுகிறான்!' என்பதுவும் இந்த நபிமொழியில் எமக்குக் கிடைக்கின்ற படிப்பினையாக இருக்கிறது.

*{* Omyma Abdelaziz Mahmoud & 

                مجموعة طريق التوبة 

ஆகிய முகநூல் பக்கங்கள் *}*


🎯  عن أبي هريرة رضي الله عنه قال، قال النّبي صلّى الله عليه وسلم: *[ إنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بالكَلِمَةِ مِن رِضْوانِ اللَّهِ، لا يُلْقِي لها بالًا، يَرْفَعُهُ اللَّهُ بها دَرَجاتٍ، وإنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بالكَلِمَةِ مِن سَخَطِ اللَّهِ، لا يُلْقِي لها بالًا، يَهْوِي بها في جَهَنَّم ]*َ.

 ( المصدر : صحيح البخاري، 

رقم الحديث - 6478 )

 

*🌷شرح الحديث 🌷*

         « بَيَّن النبيُّ صلَّى الله عليه وسلَّم أثرَ الكلمةِ وما يترتَّب عليها مِن أجْرٍ أو وِزر، حتَّى إنَّ العبدَ لَيتكلَّم بالكلمةِ مِمَّا يَرْضاه الله ويحبُّه، لا يَلتفِت لها قلبُه وبالُه لِقِلَّةِ شأنِها عندَه؛ يَرْفَعه الله بها درجاتٍ في الجنَّةِ، وإنَّه لَيتكلَّم بالكلمةِ الواحدةِ مِمَّا يَسْخَطه ويَكْرَهه اللهُ ولا يَرْضاه، لا يَلتفِت بالُه وقلبُه لعِظَمِها؛ فيَهْوِي بها (أي: يَنزِل ويَسقُط بسببِها) في دَرَكاتِ جَهَّنَمَ.

وفي الحديثِ: أنَّ موضوعَ الكلامِ هو مَا يُحدِّد أثرَه المترتِّب عليه، فقد يَخرُج المُسلِمُ من إسلامِه بسَببِ كلمةٍ، وقد يَنصُر اللهُ الإسلامَ بكلمةٍ ».

⭕➖➖➖➖➖➖➖➖⭕

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி) 

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

             

أحدث أقدم