உமர் (ரழி) அவர்களின் பார்வையில் மாதவிடாய் ஏற்படும் ஆண்கள்!!

ஹர்ஷத் இப்னுல் ஹுர் (ரஹ்) கூறுகின்றார்கள்: - 

         உமர் (ரழி) அவர்களை நான் பார்த்தேன். தனது கீழாடையை கரண்டைக் காலுக்குக் கீழ் இழுத்துச் சென்ற இளைஞனொருவனைக் கண்ட அவர்கள்  அவனை அழைத்து,  "மாதவிடாய் ஏற்படும் மனிதனா நீ?" என்று அவனிடம் கேட்டார்கள். "அமீருல் முஃமினீன் அவர்களே! ஆணுக்கு மாதவிடாய் ஏற்படுமா?" என அவன் ஆச்சரியத்தோடு கேட்டான். அதற்கு கலீபா உமர் (ரழி) அவர்கள்: "உனது கீழாடையை உனது பாதங்கள் இரண்டுக்கும் மேலால் இழுத்துச் செல்கின்றாயே! உனக்கு என்ன நடந்து விட்டது?" என்று சொல்லி விட்டு, கூர்மையான கத்தியொன்றை வரவழைத்து, அவனது கீழாடையின் ஓரங்களை ஒன்று சேரப் பிடித்து இரு கரண்டைக்கும் கீழால் தொங்கிய அந்த ஆடையின் பகுதியை வெட்டி விட்டார்கள்.

{ நூல்: 'இப்னு அபீ ஷைbபா', 5/167 }

🌿➖➖➖➖➖➖➖➖🌿

قال خرشة بن الحر رحمه الله: " رأيت عمر بن الخطاب رضي الله عنه ومر به فتى قد أسبل إزاره وهو يجره، فدعاه فقال له: أحائض أنت؟ قال: يا أمير المؤمنين! وهل يحيض الرجل؟ قال: فما بالك قد أسبلت إزارك على قدميك؟ ثم دعا بشفرة، ثم جمع طرف إزاره فقطع ما أسفل الكعبين!".

{ رواه إبن أبي شيبة، ٥/١٦٧}

🌿➖➖➖➖➖➖➖➖🌿

குறிப்பு:

➖➖➖

கரண்டைக் காலுக்குக் கீழ் ஆடை அணிவதற்கு பெண்களுக்கு மாத்திரமே இஸ்லாத்தில் அனுமதி உண்டு.

              ✍தமிழில்✍

              அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)


أحدث أقدم