இமாம் புஹாரியை ஏமாற்றி, அவர் பணத்தைப் பறிக்க நினைத்து ஏமாந்து போன ஏமாளி ஒருவனின் கதை !!!

இமாம் அப்துஸ்ஸலாம் அல்முபாரக்பூரி (ரஹ்) அவர்கள்,தனது,'சீரதுல் இமாம் அல்புஹாரீ' எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்:- 

        இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள்,தனது கல்வித் தேடல் காலப் பகுதியில் ஒரு தடவை கடல் பயணம் மேற்கொண்டார்கள். 1000 தீனார் பணமும் அவர்களிடம் இருந்தது. 1000 தீனார் என்ற அத்தொகை,அக்காலத்தில் பெரிய தொகைப் பணமாகவே இருந்தது!

       அப்போது,கப்பல் சொந்தக்காரர்களில் ஒருவன் அவரிடம் வந்தான்; வந்து தனது நேசத்தையும் அன்பையும் அவரிடம் வெளிப்படுத்தினான்; அவருடன் நெருக்கமாகி,  கூடவே அவருடன்  இருக்கலானான். தன் மீதுள்ள அவனின் அன்பையும்,நேசத்தையும் கண்ட இமாமவர்கள், அவனுடன் நெருக்கமாகி விட்டார்கள். பல சந்திப்புக்களுக்குப் பின்னர், தன்னிடமிருந்த தீனார்கள் குறித்த செய்தியையும் அவனிடம்  தெரிவித்து விட்டார்கள்.

    ஒரு நாள், தூக்கத்திலிருந்து எழுந்த இமாமவர்களின் அந்த கப்பல் தோழன் அழலானான்; தனது ஆடைகளைக் கிழித்து, தன் முகத்திலும் தலையிலும் அடித்துக் கொண்டு கூக்கிரலிட்டான்.மக்கள் இந்நிலையைப் பார்த்த போது,திடுக்கமும் தடுமாற்றமும் அவர்களைப் பிடித்துக் கொண்டது.அவனிடம் அவர்கள் காரணம் கேட்க ஆரம்பித்தது மட்டுமன்றி கேள்வியில் அவனிடம் அழுத்தத்தைப் பிரயோகித்து கெஞ்சிக் கேட்டனர்.அப்போது அவன் அவர்களுக்கு,"என்னிடம்  பணப் பை ஒன்றிருந்தது.அதற்குள் 1000 தீனார் பணம் இருந்தது; அது தொலைந்து போய் விட்டது!" என்று சொன்னான்.

        உடனே மக்கள்,கப்பல் பயணிகளை ஒருவர் ஒருவராகச் சோதனையிட ஆரம்பித்தனர். அந்நேரம் இமாம் புஹாரி அவர்கள்,தனது தீனார்கள் இருந்த பையை யாருக்கும் தெரியாமல் வெளியில் எடுத்து அதைக் கடலில் வீசி விட்டார்கள். இமாமவர்களை வந்தடைந்த பரிசோதகர்கள், அவரையும் பரிசோதித்தனர்.முடிவில், கப்பல் பயணிகள் அனைவரையும் பரிசோதித்து முடிந்து விட்டது! எனினும்,எதையும் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.அப்போது பணப் பை தொலைந்ததாகக் கூக்கிரலிட்டவனிடம் திரும்பி வந்த அப்பரிசோதகர்கள், அவனைக் குறை கூறி, அவனைக் கடுமையாகப் பழிக்கவும் செய்தனர்.

       பரிசோதனை முடிந்து கப்பலிலிருந்து மக்களெல்லாம் இறங்கிய போது, இமாம் புஹாரியிடம் வந்த அவன், "தீனார்கள் இருந்த அப்பையை என்ன செய்தீர்கள்?" என்று கேட்டான். "அதைக் கடலில் வீசி விட்டேன்!" என்றார்கள்  இமாமவர்கள்!.

    "பாரிய அத்தொகைப் பணம் வீணாகிப் போனதற்காக எப்படி நீங்கள் பொறுமையாக இருக்கின்றீர்கள்?" என்று அவன் கேட்டான். அதற்கு இமாம் புஹாரி, "மடையா! எனது வாழ்நாள் முழுவதையும்  றசூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஒன்று திரட்ட நான்  அர்ப்பணித்து விட்டேன்; என் நம்பிக்கையை இவ்வுலகமே அறிந்து விட்டது என்பது உனக்குத் தெரியாதா? எனவே,   திருட்டுக் குற்றச்சாட்டுக்கு என்னை ஆளாக்க எனக்கு எப்படி முடியும்?! என் வாழ்வில் நான்  பெற்றிருக்கும்  (நம்பிக்கை,நேர்மை) எனும் பெறுமதியான இந்த முத்தை, குறிப்பிட்ட சில தீனார்களுக்காக நான் வீணாக்கி விடுவேனா?!!" எனப் பதில் கூறினார்கள்.

{ நூல்: 'சீரதுல் இமாம் அல்புஹாரீ, 1/122,123 } 

🍀➖➖➖➖➖➖➖➖🍀

ذكر الإمام عبد السلام المباركفوري رحمه الله في كتابه "سيرة الإمام البخاري:-

    أن الإمام البخاري ركب البحر مرة في أيام طلبه، وكان معه ألف دينار! - وكانت الألف دينار مبلغ طائل في ذاك الزمان - فجاءه رجل من أصحاب السفينة، وأظهر له حبه ومودته، وأصبح يقاربه ويجالسه. فلما رأى الإمام حبه  وولاءه مال إليه! وبلغ الأمر أنه بعد المجالسات أخبره عن الدنانير الموجودة عنده.

    وذات يوم قام صاحبه من النوم فأصبح يبكي ويعول ويمزق ثيابه ويلطم وجهه ورأسه، فلما رأى الناس حالته تلك أخذتهم الدهشة والحيرة وأخذوا يسألونه عن السبب، وألحوا عليه فى السؤال، فقال لهم: عندي صرة فيها ألف دينار وقد ضاعت!...

    فأصبح الناس يفتشون ركاب السفينة واحدا واحدا، وحينئذ أخرج البخاري صرة دنانيره خفية وألقاها فى البحر، ووصل المفتشون إليه وفتشوه أيضا، حتى انتهوا من جميع ركاب السفينة! ولم يجدوا شيئا فرجعوا إليه ولاموه ووبخوه توبيخا شديدا.

     ولما نزل الناس من السفينة جاء الرجل إلى الإمام البخاري وسأله ماذا فعل بصرة الدنانير؟ فقال: ألقيتها فى البحر ..!

قال: كيف صبرت على ضياع هذا المال العظيم؟

فقال له الإمام: يا جاهل!.. أتدري أنني أفنيت حياتي كلها في جمع حديث رسول الله صلى الله عليه وسلم! وعرف العالم ثقتي، فكيف كان ينبغي لي أن أجعل نفسي عرضة لتهمة السرقة؟!... وهل الدرة الثمينة (الثقة والعدالة) التي حصلت عليها في حياتي أضيعها من أجل دراهم معدودة؟! .

{ سيرة الإمام البخاري،  ١/ ١٢٢، ١٢٣} 

🍀➖➖➖➖➖➖➖➖🍀

              ✍தமிழில்✍

              அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

أحدث أقدم