புத்திசாலிகள் சிலவேளைகளில் புத்தி கெட்டுப்போய் விடுகின்றனர்


          அல்லாமா அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“புத்திசாலிகளில் அதிகம்பேர், சிலவேளை தமது புத்திசாலித்தனத்தின் காரணமாகவே  கெட்டுப்போய் விடுகின்றனர். மக்களை இழிவாகக் கருதி, (அறிவு, புத்திசாலித்தனம் ஆகிய) எதிலும் அவர்கள் இல்லை என்று ஒருவன் கருதுவதால் அவன் வழிகெட்டு அழிந்துபோய் விடுகின்றான். அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக! ஏனெனில் இவன் தன்னை, 'மற்றவர்களின் அறிவுக்கு மேலால் தனது அறிவுதான் இருக்கிறது என்றும், அவர்களின் விளக்கத்திற்கு மேலால் தனது விளக்கம்தான் இருக்கிறது என்றும்,  அவர்களின் புத்திசாலித்தனத்திற்கு மேலால் தனது புத்திசாலித்தனம்தான் இருக்கிறது!' என்றும்  (பெருமையாக) எண்ணிக்கொள்கிறான்!”*

{ நூல்: 'தஃலீகாத் அலர்ரிசாலா அல்ஹமவிய்யா', பக்கம்: 230 }

🌠➖➖➖➖➖➖➖➖🌠

          قال العلّامة عبدالعزيز بن عبدالله بن باز رحمه الله تعالى:-

        *{ وكثير من الأذكياء قد يتزندق بسبب ذكائه، ويحتقر النّاس ويرى أنهم ليسوا على شيئ فيضلّ ويهلك، نعوذ بالله! لأنه يرى: أن علمه فوق علمهم، وفهمه فوق فهمهم، وذكاؤه فوق ذكائهم }*

[ المصدر: ' تعليقات على الرسالة الجوزية' ص - ٢٣٠ ]

🌠➖➖➖➖➖➖➖➖🌠

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

                

🌐💠💠💠💠💠💠💠💠🌐

Previous Post Next Post