வாழ்க்கைத் துணைவராக வரவிருப்பவர் மார்க்கமுடையவரா? என்பதில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்


        அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “பெண்ணொருவள்,  தன்னை மணம் முடிக்க விருப்பம் கேட்டு வருபவரை வாழ்க்கைத் துணைவராக எடுத்துக்கொள்ள முற்பட்டால் அவரிடம் மார்க்கம், நற்பண்பு ஆகிய இவ்விரு மிக முக்கிய பண்புகள் இருக்கின்றனவா?  என்று கட்டாயம் அவள் பார்க்க வேண்டும். சொத்துப்பத்து, வம்சம் என்ற இவ்விடயமெல்லாம் பார்க்கப்பட வேண்டியது இரண்டாம் பட்சமாகத்தான்! எனவே, மணம் முடிக்க வருபவர் மார்க்கமுடையவராகவும் நற்பண்புடையவராகவும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கிய விடயமாகும்.

      ஏனெனில், மார்க்கவாதியாகவும், நற்பண்புடையவராகவும் இருப்பவரைக் கணவராகப் பெற்ற ஒரு  பெண், அவரிடமிருந்து எதையும் இழந்துவிடமாட்டாள். அவளை மனைவியாக வைத்துக்கொண்டாலும் நல்ல முறையில்தான் அவர்  வைத்துக்கொள்வார்; மணவிலக்குச் செய்து பிரித்து விடுவதாக இருந்தாலும் அழகிய முறையில்தான் பிரித்து விடுவார். அத்தோடு, அவளுக்கும் அவளது பிள்ளைகளுக்கும் அருள்பாலிக்கப்பட்ட ஒருவராகவும் அவர்  இருந்துகொண்டிருப்பார். அவரிடமிருந்து நற்பண்புகளையும், மார்க்கத்தையும் அவள் படித்துக்கொள்வாள்.

        மணம் முடிக்க பெண் கேட்டு வருபவர் இதற்கு மாற்றமானவராக இருப்பின், குறிப்பாக தொழுகையை நிறைவேற்றுவதில் பொடுபோக்குக் காட்டுபவர்களில்  உள்ளவராக, அல்லது மதுபானம் அருந்துபவர் என அறியப்பட்டவராக அவர் இருப்பின் அவரை விட்டும் அவள் தூரமாகிவிட வேண்டும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 

         முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், ஒரு பெண் தன்னை மணம் முடிக்க வருபவரின் நற்பண்பு மற்றும் மார்க்கம் குறித்த விடயத்தை நன்கு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: *“மார்க்கம், நற்பண்பு ஆகியவற்றில் நீங்கள் திருப்திப்படும் ஒருவர் உங்களிடம் (பெண் கேட்டு) வந்தால் அவருக்கு நீங்கள் திருமணம் முடித்துக் கொடுங்கள்!”* 

{ நூல்: 'fபதாவல் மர்ஆ அல்முஸ்லிமா', 02/702 }

🌹➖➖➖➖➖➖➖➖🌹

         قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

         { أهمّ الأوصاف التي ينبغي للمرأة أن تختار الخاطب من أجلها هي الخلق والدّين. أما المال والنسب فهذا أمر ثانوي، لكن أهمّ شيئ أن يكون الخاطب ذا دين وخلق.

         لأن صاحب الدين والخلق لا تفقد المرأة منه شيئا إن أمسكها أمسكها بمعروف، وإن سرّحها سرّحها بإحسان. ثم إن صاحب الدين والخلق يكون مباركا عليها وعلى ذرّيّتها، تتعلّم منه الأخلاق والدّين.

           أما إن كان غير ذلك: فعليها أن تبتعد عنه لا سيما بعض الذين يتهاونون بأداء الصلاة، أو من عرف بشرب الخمر - والعياذ بالله! - والمهمّ أن تركز المرأة على الخلق والدّين، قال صلّى الله عليه وسلم: *« إذا أتاكم من ترضونه دينه وخلقه فأنكحوه »*

[ فتاوى المرأة المسلمة، ٢/٧٠٢ ]

🌹➖➖➖➖➖➖➖➖🌹

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post