ஆணைப் போன்று பெண்ணுக்கும் சமத்துவம் வேண்டும்' எனும் கோஷம் வெறும் வேஷமே

 

         “1972-ம் மரணித்த எமன் நாட்டு அறிஞரும், 'இஸ்லாஹுல் முஜ்தமஃ' (சமுதாய சீர்திருத்தம்) எனும் நூலின் ஆசிரியருமான அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்பைஹானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கும், (இஸ்லாத்தைக் குறை காணும்  பெண்ணிலைவாதச் சிந்தனையை உள்வாங்கி) ஆணைப் போன்றே பெண்ணுக்கும் சமத்துவம் வேண்டும் ௭ன்று வாதிட்ட நபரொருவருக்குமிடையில் விவாதம் ஒன்று இடம்பெற்றது.

           அந்த மனிதர் பேச ஆரம்பித்தார்; அல்பைஹானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பின்னர் அல்பைஹானீ அவர்கள் அவரிடம், *“இப்போது நீர் மெளனமாக இரும்; நான் பேசுகிறேன்!”* (என்று ஆணை விழித்துக் கூறும் ஆண்பால் வார்த்தைப்  பிரயோகத்தில் இல்லாமல், பெண்ணை விழித்துக் கூறும் வார்த்தைப் பிரயோகமான *فاسكتي*) என்று கூறினார்.

          இதைக் கேட்ட உடனேயே, *“பெண்ணை விழித்துக் கூறும் வார்த்தைப் பிரயோகத்தில் என்னுடன் நீங்கள் பேசுகின்றீர்களா?”* என்று அம்மனிதர் கோபத்தோடு கேட்டார்.

          அப்போது அல்பைஹானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அம்மனிதரிடம், *“பெண்ணை விழித்துக் கூறும் வெறும் பிரதிப் பெயர்ச் சொல்லிலேயே அவளுக்கு சமத்துவத்தை விரும்பாத நீ, பெண்ணுக்கு சமத்துவம் வேண்டும் என்று எப்படி வாதாட முடியும்?”* என்று கேட்டார்.

          விவாதித்தவர் தன் பேச்சை இடைநிறுத்திக் கொண்டார்; மக்களும் அவரைப் பார்த்து சிரித்துவிட்டனர்!”

{ நூல்: 'அரீஜுல் அஸ்ஹார் பிஜம்இல் fபவாஇத் வத்தராயிfப் வல் அஷ்ஆர்', பக்கம்:13 }

📚➖➖➖➖➖➖➖➖📚

         { نقل عن الشيخ محمد بن صالح البيحاني اليمني صاحب كتاب "إصلاح المجتمع" - رحمه الله- (ت ١٩٧٢م)، أنه جرت بينه وبين رجل يدعو إلى مساواة الرّجل بالمرأة مناظرة.

فجعل ذلك الرّجل يتكلّم والبيحاني ساكت...

ثمّ قال له البيحاني: *« أما الآن فاسكتي وأنا أتكلّم »*.

فغضب الرّجل، وقال: *« تخاطبني بخطاب المرأة؟! »*

فقال البيحاني: *« كيف تدعو إلى مساواتها وأنت لا ترضى أن تساويها في مجرّد ضمير المخاطبة؟؟ »*

           فانقطع المناظر، وضحك عليه النّاس }.

[ كتاب " أريج الأزهار بجمع الفوائد والطرائف والأشعار"، ص - ١٣ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post