மக்களிடம் அநாதரவான இவர்கள், படைத்தவனின் சுபசோபனத்திற்குரியவர்கள்


          நவீனகால ஹதீஸ் கலை மேதை இமாம் நாஸிருத்தீன் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “தவ்ஹீதைப் பற்றி நீ பேசினால் இணைவைப்பாளர்கள் உன்னை மதிக்காமல்  தூக்கி வீசுவார்கள்; நபியின் சுன்னாவைப் பற்றி நீ பேசினால், மார்க்கத்தின் பெயரால் நூதன செயல்களைச் செய்யும் 'பித்அத்'வாதிகள் உன்னைக் கணக்கெடுக்காமல் தூக்கி வீசுவார்கள்; ஆதாரம், அத்தாட்சி குறித்து நீ பேசினால் மத்ஹப் வெறி பிடித்தோரும், ஸூfபிகளும், அறிவீனர்களும் உன்னை மதிக்காமல்  தூக்கி வீசுவார்கள்; நன்மையான விடயங்களில் ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுவதோடு அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்து உபதேசம் செய்ய வேண்டும் என்று  நீ கூறி, (இது விடயத்தில்) அஹ்லுஸ்ஸுன்னாக்களின் கொள்கையை நீ பேசினால், 'ஹவாரிஜ்'கள் என்ற வழிகெட்ட பிரிவினரும் இயக்கவெறியர்களும் உன்னைக் கணக்கெடுக்காது தூக்கி எறிந்து விடுவார்கள்; இஸ்லாத்தையும், அதை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தியும் நீ பேசினால் மதச்சார்பற்றவர்களும், (கட்டுப்பாடற்ற) சுதந்திரத்திற்காகக் கூப்பாடு போடுபவர்களும்,  வாழ்க்கையை விட்டும் மார்க்கத்தைப் பிரிக்க வேண்டும் என்று விரும்புகின்ற இவர்கள் போன்றவர்களும்  உன்னைக் கணக்கெடுக்காமல் தூக்கி எறிந்து விடுவார்கள்!.

           குர்ஆன், சுன்னாவை முறையாகக் கடைப்பிடித்து வாழும் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு இது ஓர் கடுமையான ஆதரவற்ற அநாதரவான நிலையாகும். இவ்வகையில்,  அனைத்து வகையான தொடர்பு சாதனங்களைக்கொண்டும் எம்மோடு அவர்கள் போராடுகின்றார்கள். ஒலி- ஒளி மற்றும் எழுத்து மூலமான சாதனங்கள் மூலமும் எம்முடன் அவர்கள் போராடுகின்றார்கள். அல்லாஹ்வின் வேதத்தையும், அவனுடைய தூதரின் சுன்னாவையும் பற்றிப்பிடித்து வாழ்கின்ற இந்த ஆதரவற்றவரோடு குடும்பம் மற்றும் நண்பர்கள் வரைக்கும் அவருடன் யுத்தம்  செய்கின்றார்கள். இது இப்படியிருக்க, ஆதரவற்ற அநாதரவான இந்த நிலையுடன் நாம் சந்தோசமானவர்களாகவும், அதைக்கொண்டு பெருமைப்படக்கூடியவர்களாகவுமே  இருந்துகொண்டிக்கின்றோம். காரணம், ஆதரவற்று அநாதரவாக இருக்கும் இவர்களை நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இவ்வாறு  புகழ்ந்திருக்கிறார்கள்: *“இஸ்லாம் அநாதரவான நிலையிலேயே ஆரம்பத்தில் இருந்தது. திரும்பவும் அது அநாதரவான நிலைக்கே செல்லும். எனவே, ஆதரவற்று அநாதரவாக இருப்போருக்கு நன்மாராயம் உண்டாகட்டும்! அப்போது நபியிடம், 'அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே!' என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள்,  'மக்கள் சீர்கெட்டிருக்கும்போது (தம்மை) சீர்திருத்திக்கொள்பவர்கள்தான் அவர்கள்!' எனப் பதிலளித்தார்கள்”.

{ நூல்: 'அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா', இலக்கம்: 1273 }


            قال الإمام المحدّث ناصر الدين الألباني رحمه الله:-

         { إن تكلّمت عن التوحيد نبذك أهل الشرك؛ وإن تكلّمت عن السّنّة نبذك أهل البدعة؛ وإن تكلّمت عن الدليل والحجة نبذك أهل التّعصّب المذهبي والمتصوّفة والجهلة؛ وإن تكلّمت عن طاعة ولاة الأمر بالمعروف والدعاء والنصح لهم وعقيدة أهل السنة نبذك الخوارج والمتحزّبة؛ وإن تكلّمت عن الإسلام وربطته بالحياة نبذك العلمانيّون واللّيبراليون وأشباههم ممّن يريدون فصل الدين عن الحياة.

          غربة شديدة على أهل السنة! حاربونا بجميع الوسائل؛ حاربونا بالإعلام المسموع والمرئي والمكتوب... حتى أصبح الأهل والأصحاب يحاربون هذا الغريب المتمسّك بكتاب الله وسنّة رسول الله. ورغم هذا، نحن سعداء بهذه الغربة ونفتخر بها، لأن رسول الله صلّى الله عليه وسلّم أثنى على هؤلاء الغرباء، فقال عليه السلام: *« إن الإسلام بدأ غريبا، وسيعود غريبا كما بدأ، فطوبى للغرباء! قيل: من هم يا رسول الله؟ قال: الذين يصلحون إذا فسد النّاس »* }

[ المصدر: 'السلسلة الصحيحة' ، رقم : ١٢٧٣ ]

➿📚📚📚📚📚📚📚📚➿

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم