உடல் வலிமை இல்லாவிட்டாலும் உள வலிமையோடு வாழ்பவர்தான் உண்மையான முஃமின்


           ஷுமைத் பின் அஜ்லான் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

    *“இறைவிசுவாசியான முஃமினின் பலத்தை அவரது உள்ளத்தில்தான் அல்லாஹ் வைத்திருக்கின்றான்; அவரது உடல் உறுப்புகளில் அதை அவன் வைக்கவில்லை.   வயோதிபர் ஒருவர் (உடல்) பலவீனமுள்ளவராக இருந்தும்கூட கடும் வெப்பமான பகல் பொழுதில் அவர் நோன்பு நோற்று இரவில் அவர் நின்று வணங்குவதையும், இதைச் செய்வதற்கு  இளைஞனுக்கு  முடியாமல் போவதையும் நீங்கள் பார்க்கவில்லையா?”*

{ நூல்: 'ஷுஅபுbல் ஈமான்' லில்பைஹகீ - 2905 }

🔅 அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் அல்பbத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) அவர்கள் இதை இவ்வாறு விளக்கப்படுத்திக் கூறுகின்றார்கள்:-

           *“உடல் ரீதியான பலவீன நிலையில் இருக்கும் வயது முதிர்ந்த சிலரைப் பார்க்கின்றபோது சிலவேளை மனிதனுக்கு ஆச்சரியமாக இருக்கும்! (முதியோர்களான) அவர்களில் ஒருவர், தனது ஊன்றுகோலின் உதவியுடன் தாங்கி நின்றுகொண்டு தனது கால்கள் இரண்டையும் இழுத்துக்கொண்டு செல்பவராக   சிரமப்பட்டுக்கொண்டிருப்பார். என்றாலும்,  அல்லாஹ்வின் வீடுகளான பள்ளிவாசல்களில் ஐநேரத் தொழுகைகளைத் தொழுவதற்குப் பிந்தாதவராக அவர்  காணப்படுவார். இத்தகைய  முதியவர்களுக்கு, அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் கொடுத்திருக்கும் ஈமானிய பலம்தான் இதற்குக் காரணமாக இருக்கின்றது என்பதை அறிந்துவிட்டால் மனிதனிடம் காணப்பட்ட அந்த ஆச்சரியம் அவனை விட்டும் இல்லாமலே போய்விடும்!.*

             *இதற்கு மாற்றமாக, உள்ளங்கள் பலவீனமாக இருப்போரில் ஒருவர்  மனிதர்களிலேயே மிக உடல் வலிமையுள்ளவராக  இருந்தாலும்,  விரைவாகத் தொழுகைக்குச் செல்வதற்கே முடியாதவராக அவர் இருந்துகொண்டிருப்பார்!”*

{ ஷெய்க் அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது }



         عن شميط بن عجلان رحمه الله قال: *« إن الله عزّ وجلّ جعل قوّة المؤمن في قلبه، ولم يجعلها في أعضائه. ألا ترون الشيخ يكون ضعيفا يصوم الهواجر، ويقوم اللّيل؛ والشّباب يعجز عن ذلك »*

{ المصدر: 'شعب الإيمان' للبيهقي - ٢٩٠٥ }

🔅 قال الشيخ عبدالرزاق البدر حفظه الله تعالى: *« قد يتعجب المرء وهو يرى بعض كبار السّنّ بأبدانهم الضّعيف يتحامل الواحد منهم على نفسه متّكأ على عصاه يجرّ قدميه لا يتخلّف عن الصّلوات الخمس في بيوت الله، ويزول عنه هذا العجب إذا علم أن هذا عائد إلى ما آتاهم الله من قوّة إيمان في قلوبهم، بخلاف ضعيفي القلوب لا يتمكن الواحد منهم من النهوض إلى الصلاة ولو كان أقوى النّاس بدنا! والله المستعان..!! »* 

{ منقول من الموقع الرسمي لفضيلة الشيخ }

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم