உஸ்தாத் அஹ்மத் ஷுகைரீ என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கூறுகிறார்:-
“அத்தஹிய்யாத்தை நான் ஓதுகின்றபோது எனக்குள் நான் அதிகமாகக் கேட்டுக்கொண்ட கேள்வி இதுதான்: *“இறைவா! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்தது போல்,* முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்திடுவாயாக!” என்றும், *“இறைவா! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அருள் வளத்தை நீ பொழிந்தது போல்,* முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அருள் வளத்தை நீ பொழிவாயாக!” என்றும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பெயரை நாம் ஏன் கூறுகின்றோம்? ஏனைய இறைத்தூதர்கள் இருக்க, குறிப்பாக இவர்களின் பெயர் ஏன் மறுமை நாள் வரைக்கும் முஸ்லிம்களின் தொழுகையில் கூறப்பட வேண்டும்?
சிலவேளை, திடவுறுதி கொண்ட 'உலுல் அஸ்ம்' எனும் சிறப்புக்குரிய இறைத்தூதர்களில் ஒருவராக இவர் இருப்பதால்தான் இவர் நாமம் உச்சரிக்கப்படுகிறதாக இருக்கிறதோ! என்று எனக்குள் நான் சொல்லிக்கொள்வேன். சரி; அப்படியாக இருந்தால் மூசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும், ஈசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் போன்று இறைத்தூதர்களில் 'உலுல் அஸ்ம்' களில் உள்ளவர்கள் இல்லையா? என்றும் எனக்குள் நான் சொல்லிக்கொள்வதுண்டு!
கடைசியில், இதற்கான விடையை *“பின்வருபவர்களிடம் எனக்கு நற்புகழை ஏற்படுத்துவாயாக!”* என்று அல்குர்ஆனின் 26-வது அத்தியாயமான 'அஷ்ஷுஅரா' அத்தியாயத்தில் வருகின்ற இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பிரார்த்தனையில் நான் தெரிந்து கொண்டேன். அதாவது, *'எனக்குப் பின்னர் என்னை மறுமை நாள் வரைக்கும் மக்கள் நினைவுகூரும்படியாக அவர்களிடம் நற்புகழையும், நினைவூட்டலையும் ஏற்படுத்துவாயாக!'* என்பதுதான் இதன் விளக்கமாகும். அப்போது, அவரின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் விடையளித்தான். அல்லாஹ் கூறுகிறான்: *“பின்வருவோரில் அவர்மீது (புகழை) நாம் விட்டு வைத்தோம்”* (அல்குர்ஆன், 37:108). அதாவது, *'சிறப்பாகக் கூறுதல், நற்புகழ் ஆகியவற்றை அவருக்குப் பின்னர் மறுமை நாள் வரைக்கும் மக்களிடம் நாம் நிலைபெற வைத்தோம்!'* என்பது இதன் அர்த்தமாகும்.
அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனின் அழகுதான் என்ன!! அல்லாஹ் கூறுகிறான்: *“இது, வேத நூலாகும்; இதில் சந்தேகமே கிடையாது”* (அல்குர்ஆன், 02: 02)
[ முகநூல் பக்கம் :
[خواطر الأستاذ أحمد الشقيري
☪➖➖➖➖➖➖➖➖☪
قال الأستاذ أحمد الشقيري:-
{ كثيرا ما كنت أسأل في نفسي وأنا أقرأ التشهّد... لماذا نقول *"اللهم صلّ على محمد وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم"* و *"اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم"* ؟ لماذا إبراهيم عليه السلام من بين الرّسل بالأخص الذي يذكر إسمه في صلاة المسلمين إلى يوم القيامة؟
أرجع وأقول ربما هو من أولي العزم من الرّسل! وأرجع أقول: لا، طيب أليس هو موسى وعيسى من أولي العزم من الرّسل كذلك....؟
حتى عرفت الإجابة في سورة الشعراء دعوة إبراهيم: *« واجعل لي لسان صدق في الآخرين »* (الآية - ٨٤)، لسان صدق في الآخرين؛ يعني: 'ذكر وثناء حسن وجميل في النّاس من بعدي يذكرونني به إلى يوم القيامة!' ، فاستجاب الله تعالى لدعائه وقال سبحانه: *« وتركنا عليه في الآخرين »* (الآية - )، يعني: وأبقينا على إبراهيم ذكرا جميلا وثناءا حسنا في النّاس من بعده إلى يوم القيامة.
ما أجمله كتاب الله! قال الله تعالى: *« ذلك الكتاب لا ريب فيه »* }
[ فيس بوك: صفحة "خواطر الأستاذ أحمد الشقيري" ]
☪➖➖➖➖➖➖➖➖☪
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா