உலக இன்பத்தில் மயங்கிக் கிடக்கும் எம் சமூகம் மயக்கம் தெளிவது எப்போது


            இஸ்லாமியப் பேரறிஞர் கலாநிதி ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

           *“உலக நன்மைகள் தவறிப்போய் விடுமோ என்ற அச்சத்தில் உலகைத் தேடி ஓடுவதில் விரைவு காட்டும் எத்தனையோ மனிதர்களை நாம் பார்த்து வருகின்றோம். இவர்கள் உலகத் தேவைகளுக்காக உட்கார்ந்து கொண்டு, மார்க்கத்தின் தூணாக இருக்கின்ற ஐவேளைத்  தொழுகைகளை நிறைவேற்ற பள்ளிவாசல்களுக்கு சமூகமளிக்கப் பிந்தி விடுவதையும் நாம் காண்கின்றோம்!*

         *பாதைகளிலும், கடைகளிலும் பல மணி நேரங்கள் உட்கார்ந்திருக்கும் எத்தனையோ பேரையும் இவர்களில் நாம் பார்க்கின்றோம். இதற்காக கடும்  உஷ்ணத்தை (கஷ்டத்தை) எல்லாம் இவர்கள் தாங்கிக் கொள்கின்றனர்! இதற்கிடையில், தொழுகையை நிறைவேற்றுவதற்காக, அல்லது அல்குர்ஆனை ஓதுவதற்காக குறிப்பிட்ட சில நிமிடங்கள் உட்கார்ந்து கொள்வதற்கு பொறுமை இல்லாதவர்களாக இவர்கள் இருப்பதையும் நாம் பார்க்கக்கூடியதாகத்தான் இருக்கிறது.*

        *“மேலும், இஸ்லாமிய இளைஞர்களில் எத்தனையோ பேர் கரப்பந்து, கால்பந்து விளையாட்டு மைதானங்களுக்குச் செல்வதற்கு போட்டி போடுகின்றனர்; இதற்காக மைதான நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள பணங்களைக் கொடுத்து, பின்னர் பல்லாயிரக்கணக்கில் பெருந்திரளாக அதில் ஒன்று கூடுகின்றனர்.*

           *“சிலவேளை இவர்கள் பகல் பொழுதை இப்படி (வீணாக)க் கழித்து, இரவில் விழித்திருந்து, கால் கடுக்க நின்றவர்களாக தமது பார்வைகளை விளையாட்டிலேயே லயிக்க வைத்து, தமது உடல்களை நிமிர்த்தி  வைத்துக்கொண்டு, சத்தங்களை அதிகரித்தவர்களாக யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று விளையாட்டு வீரர்களையே பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.*

          *ஷைத்தானின் பாதையில் இவ்வனைத்து  சிரமங்களையும் இவர்கள் தாங்கிக் கொள்கின்றனர்.  'தாெழுகைக்கு விரைந்து வாருங்கள்; வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்!' என்று பள்ளிவாசல்களில் தொழுகைகளுக்கு சமூகம் தரும்படி அழைப்பு விடுக்கப்பட்டால் குருடர்களாகி விடுகின்றனர்; செவிடர்களாகியும் விடுகின்றனர்.  இவர்களை முஅத்தின் சிறைச்சாலைக்கு அழைப்பதைப் போலவும், அல்லது இவர்களிடமிருந்து அவர் முக்கியமான ஒன்றைக் கேட்பது போலவும் புறக்கணித்து புறமுதுகிட்டு ஓடுகின்றனர்.*

          அல்லாஹ் கூறுகிறான்: “றுகூஃ செய்யுங்கள் என அவர்களிடம் கூறப்பட்டால் அவர்கள் றுகூஃ செய்யமாட்டார்கள். பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்”.(அல்குர்ஆன், 77:48,49)

         மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “கெண்டைக்கால் வெளிப்படுத்தப்பட்டு, அவர்கள் சுஜூது செய்ய அழைக்கப்படும் ஒரு நாளில் அவர்கள் (அதற்கு) சக்தி பெறமாட்டார்கள்.

          அவர்களது பார்வைகள் தாழ்ந்திருக்க, இழிவு அவர்களை மூடிக்கொள்ளும். நிச்சயமாக அவர்கள் நலமாக இருந்த வேளையில் சுஜூது செய்ய அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்”.(அல்குர்ஆன், 68:42)

        *“முஸ்லிம்களே! நிறைய பேரின் நிலை இன்று இதுவாகத்தான் இருக்கிறது!. இவர்கள் உலகத்தின்பால் முன்னோக்கி, மறுமையைப் பின்னுக்குத் தள்ளி விட்டனர். எமக்கு முன் வாழ்ந்து சென்றவர்களை நாம் படிப்பினையாக் கொள்ளாதிருக்கின்றோம்; எம்மைச் சூழ உள்ளவர்களையும் நாம் சிந்தித்துப் பார்க்காதிருக்கின்றோம்;  எந்த உபதேசத்தைக்  கொண்டும் தாக்கமெதுவும் பெறாருக்கின்றோம்; ஒரு நினைவூட்டலைக் கொண்டும் பயனடையாதும் இருக்கின்றோம்; இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!!*

{ நூல்: 'அல்ஹுதபுbல் மிம்பரிய்யா', 1/313,314 }

🎇➖➖➖➖➖➖➖➖🎇

              قال العلاّمة صالح بن فوزان الفوزان حفظه الله تعالى:

            *[ كم نرى الناس يتراكضون لطلب الدنيا مسرعين يخافون أن تفوتهم، ونراهم يقعدون ويتأخرون عن حضور المساجد لأداء الصلوات الخمس التي هي عمود الدين.*

            *كم نراهم يجلسون فى الشوارع والدّكاكين السّاعات الطويلة وقد يقاسون شدة الحر لطلب الدنيا، بينما لا نراهم يصبرون على الجلوس دقائق معدودة فى المسجد لأداء الصلاة أو تلاوة القرآن.*

           *كم نرى من شباب المسلمين يتسابقون إلى ملاعب الكرة ويدفعون الدراهم للحصول على تذاكر الدخول ثم يحتشدون فيها ألوافا مؤلفة*.

             *وربما يقضون النهار ويسهرون الليل واقفين على أقدامهم شاخصة أبصارهم ناصبة أبدانهم مبحوحة أصواتهم يشاهدون اللّاعبين لمن تكون الغلبة منهم...*

             *يتحملون كل هذه المتاعب في سبيل الشيطان، وإذا دعوا إلى حضور الصّلوات فى المساجد بحيّ على الصلاة وحيّ على الفلاح عموا وصموا وولّوا وأعرضوا كأن المؤذن يدعوهم إلى سجن أو كأنه يطلب منهم مذمة.*

             قال الله تعالى: « وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يّومئذ لّلمكذبين » ، وقال الله تعالى: « يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون، خاشعة أبصارهم ترهقهم ذلّة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون ».

             *أيها المسلمون! هذه حالة الكثير منا اليوم إقبال على الدنيا وإدبار عن الآخرة؛ لا نعتبر بمن سبقنا !! ولا ننظر إلى من حولنا !! ولا تتأثر بموعظة !! ولا ننتفع بذكرى !! فإنا لله وإنا إليه راجعون !!!*

{ الخطب المنبرية، ١/ ٣١٤،٣١٤ }

🎇➖➖➖➖➖➖➖➖🎇 

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

أحدث أقدم