பொறுமை ஓர் பொக்கிஷம்; அது ஒர் நோய் நிவாரணி

         அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-

         *“ பொறுமை (الصبر) எனும் இந்த மூன்று எழுத்துக்களுக்குக் கீழே இருக்கும் புதையலை ஒரு மனிதன் அறிந்து விட்டால் அதை (எடுப்பதை) விட்டும் பின்வாங்கமாட்டான்!*

{ நூல்: 'தரீகுல் ஹிஜ்ரதைன்', 1/266 }


            قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-

             *[ لو علم العبد الكنز الذي تحت هذه الأحرف الثلاثة أعني إسم (الصبر) لما تخلّف عنه ]* {طريق الهجرتين، ١/٢٦٦}

➖➖➖➖➖➖➖➖➖➖

❇👉🏿 அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள்  இன்னொரு இடத்தில் கூறுகின்றார்கள்:-

          *“அதிகளவிலான உடல், உள நோய்கள் பொறுமையின்மையால்தான் ஏற்படுகின்றன. உள்ளங்கள், உடல்கள், உயிர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியம் பொறுமையைப் போன்ற வேறு எந்த ஒன்றின் மூலமும் பாதுகாக்கப்பட்டதாக இருப்பதில்லை! ஆகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதும், சிறந்ததோர் மருந்தாக இருப்பதும் இந்த பொறுமைதான். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்; அவனது நேசமும் அவர்களுக்குத்தான் உண்டு; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களை நேசிக்கின்றான்; அவன் உதவியும் அவர்களுக்குத்தான் உண்டு; பொறுமையுடன்தான் உதவி இருக்கிறது; பொறுமையாளர்களுக்கு இதுதான் சிறந்ததாகும். அல்லாஹ் கூறுகிறான்: 'நீங்கள் பொறுமையுடன் இருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும்' (அல்குர்ஆன், 16:126) ”*

{ நூல்: 'ஸாதுல் மஆத்', 4/306 }


             قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-

           *[ أكثر أسقام البدن والقلب، إنّما تنشأ عن عدم الصبر، فما حفظت صحةالقلوب والأبدان والأرواح بمثل الصبر! فهو الفاروق الأكبر، والتّرياق الأعظم، فإن الله مع الصابرين، ومحبّته لهم، فإن الله يحبّ الصابرين، ونصره لأهله، فإن النصر مع الصبر، وإنه خير لأهله، قال تعالى: « ولئن صبرتم لهو خير للصّابرين »  ]*  { زاد المعاد،  ٤/ ٣٣٣ }

👇👇👇👇⚜⚜👇👇👇👇

👉🏿  அதாஃ இப்னு அபீ ரபாbஹ் (ரஹ்) கூறுகின்றார்கள்:

          இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் என்னிடம், “சுவர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அதற்கவர்கள், “இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். (ஒருமுறை) அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், *“நீர் நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உமக்கு சுவர்க்கம் கிடைக்கும்.*நீர் விரும்பினால் உமக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்!” என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, *“நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன்!*. ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

        அதாஃ இப்னு அபீ ரபாbஹ் (ரஹ்) கூறுகின்றார்கள்: “நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர்தான் கறுப்பான, உயரமான அப்பெண் ஆவார்!.

{ நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் - 5652 }

☘➖➖➖➖➖➖➖➖☘

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم