தெரிந்த சுன்னாவை மக்களுக்கு எற்றி வையுங்கள்


         அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

         *“கல்வித் தேடலில் ஈடுபடும் மாணவன், கல்வித் தேடலில் ஈடுபடாதிருக்கும் சாதாரண மனிதன் ஆகிய இவர்களில் நபியின் சுன்னாவை அறிந்து வைத்துள்ள ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு  பொருத்தமான  சந்தர்ப்பத்திலும் (மக்களுக்கு) விளக்கப்படுத்திச் சொல்ல வேண்டியது அவசியமாகும். 'நான் ஆலிம் இல்லை' என்று மட்டும் சொல்லாதே. நீ ஆலிம் இல்லைதான்! இருந்தாலும் உன்னிடம் அறிவு இருக்கிறது. ஏனெனில்,  'என்னிடமிருந்து ஒரு விடயத்தை நீங்கள் அறிந்தாலும் அதை எற்றிவைத்து விடுங்கள்!' என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.*

           *எனவே, இதுபோன்ற விவகாரங்களில் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மனிதனுக்கு அவசியமாகும். ஆதலால்,  சுன்னாவைப் பரப்பும் பணியைச் செய்வதற்கு சந்தர்ப்பம் இடம் தரும் போதெல்லாம் அதைப் பரப்பும் பணியை நீ செய்துவிடு! அதற்கான கூலி உனக்கு இருப்பதோடு மறுமை நாள் வரைக்கும் அதைக்கொண்டு செயல்படுகின்றவர்களின் கூலியும் உனக்குக் கிடைக்கும்!”*

{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 4/215 }


               قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:

*[ ينبغي لطالب العلم وغير طالب العلم؛ كل من علم سنّة ينبغي أن يبيّنها في كل مناسبة، ولا تقل أنا لست بعالم، نعم لست بعالم! لكنّ عندك علم. قال النبيّ صلّى الله عليه وسلم  « بلّغوا عنّي ولو آية »، فينبغي للإنسان في مثل هذه الأمور أن ينتهز الفرص كلّما سمحت الفرصة لنشر السنة فانشرها يكن لك أجرها وأجر من عمل بها إلى يوم القيامة ]*

{ شرح رياض الصالحين، ٤/٢١٥ }

👇👇👇👇🔹🔹👇👇👇👇


❇👉🏿  அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

          *“தான் செய்துவந்த நற்செயல் தனது மரணத்தின் பின்னரும் முறிந்து விடாமல் தொடர வேண்டும் என்று விரும்புபவர் கல்வி போதிக்கும் பணியைச் செய்யட்டும்!”*

{ நூல்: 'அத்தஸ்கிரா',பக்கம்:55 }


                  قال العلامة إبن الجوزي رحمه الله تعالى:- 

  *[ من أحبّ أن لا ينقطع عمله بعد موته فلينشر العلم ]*

{ التذكرة ، ص - ٥٥ }

🌻➖➖➖➖➖➖➖➖🌻

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

أحدث أقدم