தாயின் பொறுப்புணர்ச்சிக்கும், தந்தையின் பொடுபோக்கிற்கும் மத்தியில் பிள்ளை வளர்ப்பு


           மதிப்பிற்குரிய எமது ஆசான், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் சொல்லத் தான் கேட்டதாக அவரது மாணவர்  அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:-

          “தமக்குள் பிரச்சினைப்பட்டுக்கொண்ட கணவன்-மனைவி இருவர் தமது சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பு விடயமாக நீதிபதியிடம் முரண்பட்டுக்கொண்டனர். அப்போது, அவ்விருவரில் எவரின் பராமரிப்பில் இருப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் உரிமையை நீதிபதி சிறுவனுக்கு வழங்கினார். சிறுவனோ தந்தையைத் தெரிவு செய்துகொண்டான். அப்போது நீதிபதியிடம் அவனின் தாய், *“என்ன காரணத்திற்காக அவனின் தந்தையை அவன் தெரிவு செய்தான்?”*என்று அவனிடம் கேளுங்கள் என்றாள்.

           நீதிபதியும் அச்சிறுவனிடம் கேட்டார். அதற்கு அவன், *“ஒவ்வொரு நாளும் என்னை எனது தாய் இஸ்லாத்தின் ஆரம்ப விடயங்களும், அல்குர்ஆனும் படித்துத் தரப்படும் 'குர்ஆன் மத்ரசா'வுக்கு அனுப்பி வைக்கின்றாள். அங்கே விளக்கம் சொல்லித் தருபவர் எனக்கு அடிக்கின்றார். ஆனால், எனது தந்தையோ என்னை சிறுவர்களோடு விளையாடுவதற்கு விட்டு விடுகின்றார்!”*என்று சொன்னான். இதைக்கேட்ட நீதிபதி, தாயின் பராமரிப்பிலலேயே சிறுவன் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கிவிட்டு, *“இச்சிறுவனைப் பராமரிக்க நீர்தான் அதிக உரிமையுடையவர்!”* என்றும் அத்தாய்க்குக் கூறினார்கள்.

{ நூல்: 'ஸாதுல் மஆத்', 5/475 }

🌿➖➖➖➖➖➖➖➖🌿

            قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-

          [ وسمعت شيخنا - يعني شيخ الإسلام إبن تيمية - رحمه الله تعالى يقول: تنازع أبوان صبيّا عند بعض الحكام، فخّيّره بينهما، فاختار أباه.

*فقالت الأم:* سله: لأيّ شيئ إختار أباه؟ فسأله - يعني القاضي.

*فقال الصبيّ:* "أمي تبعثني كل يوم للكتّاب والفقيه يضربني! وأبي يتركني ألعب مع الصّبيان..!"

             فقضى به للأم وقال: "أنت أحقّ به !".

{ زاد المعاد ، ٥/٤٧٥ }

🌿➖➖➖➖➖➖➖➖🌿

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم