பெருமையை ஒழிக்கப் போராட வேண்டும்!


    அறிஞர் அஷ்ஷெய்க் ரபீbஃ பின் ஹாதீ அல்மத்ஹலீ (ஹபிfழஹுல்லாஹ்)  கூறுகின்றார்கள்:

           “பெருமையை விரட்டி அதிலிருந்து  விடுபட உன் உள்ளத்தோடு நீ போராடு! பெருமை  இறைமறுப்புக்கும், மக்களை இழிவாகக் கருதுவதற்கும், சத்தியத்தை மறுப்பதற்கும் இட்டுச்செல்கின்ற மோசமான பண்பாகும்.  இதனால்தான் இறை நல்லடியாரான லுக்மானுல் ஹகீம்  (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனது மகனுக்கு, *'பெருமைகொண்டு மக்களை விட்டும் முகத்தைத் திருப்ப வேண்டாம் என்றும், மனிதர்களிடம் கர்வத்துடன் நடக்க வேண்டாம்'* என்றும் உபதேசித்தார்கள். (அல்குர்ஆனின் 31-ம் அத்தியாயம், 18 வது வசனத்தில் இது கூறப்பட்டுள்ளது).

         உன்னோடு ஒருவர் உரையாடுகின்றார்; நீயோ அவரைப் புறக்கணித்து, உன்னை உயர்வாக நினைத்து பெருமையடித்துக்கொண்டிருக்கின்றாய்! இப்படிச் செய்யாது பணிவுடன் நீ நடந்துகொள்! நீ பரிதாபத்திற்குரியவன்; பலவீனமானவன்; (முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மண்ணால் படைக்கப்பட்டார்கள் என்ற வகையில்,) நீயும்  மண்ணிலிருந்தே படைக்கப்பட்டிருக்கின்றாய்; பின்னர், அருவருப்பான இந்திரியத் துளியிலிருந்து  படைக்கப்பட்டாய். மலம் கழிக்கின்றாய்; தினந்தோறும் பல தடவைகள் மலசலகூடத்திற்கும் செல்கின்றாய்! உனது நிலை இப்படியிருக்க எப்படி நீ உனக்குள்  பெருமையடிப்பாய்?  மக்களிடமும் எப்படி நீ பெருமையடித்துத் திரிவாய்? 

          நீ யார்? என்பதை சற்று சிந்தித்துப்பார்! முள் ஒன்று உனக்குத் தைத்துவிட்டால்கூட  அதற்காக நீ அழுகின்றாய். எனவே, எப்படி நீ மக்களிடம் பெருமையடித்துக்கொண்டிருக்க முடியும்?

         ஆதலால், உள்ளம் தன்னை உயர்வாக எண்ணி கர்வம் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும்போது அதைத் தரம் தாழ்த்தி இழிவாகப் பார்க்க வேண்டியதும், அதன் கேவலத்தன்மை மற்றும் மோசத்தன்மையை நினைவுபடுத்த வேண்டியதும்  மனிதனுக்குக் கட்டாயமானதாக  இருக்கிறது. 

      பெருமைக்காரர்களே மனிதர்களில் அதிக கேவலத்திற்குரியவர்கள். அல்லாஹ் மீது ஆணையாக! என்னைப் பொறுத்தமட்டில்  பெருமைக்காரர்களையும், பொய்யர்களையும் தவிர வேறு எவரையும் நான் இழிவாகப் பார்ப்பதில்லை. அல்லாஹ் மீது ஆணையாக! மனிதர்களில் ஆக பவீனமானவரை நான் பார்ப்பேன். அப்போது நான், 'என்னை விட இவரே மிகச்சிறந்தவர்' என்று எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன். பெருமைக்காரனை நான் பார்ப்பேன். அவன் என்ன படித்தரத்தில் உள்ளவனாக இருந்தபோதிலும் அல்லாஹ் மீது ஆணையாக என்னிடம் அவன் மனிதர்களில் ஆக இழிவானவனாகவும், தரம் குறைந்தவனாகவுமே இருப்பான். இவ்வகையில், பெருமைக்காரனைத் தவிர வேறு யாரையும் நான் இழிவாகப் பார்ப்பது கிடையாது. 

          இழிவும், பண்பாட்டு வீழ்ச்சியும் உள்ளவனைத் தவிர வேறு எவனும் பெருமையடிக்கமாட்டான்”

{ நூல்: 'மஜ்மூஉ குதுப் வ ரசாயில் வ பfதாவா ஷ்ஷைக் ரபீbஃ' 02/485 }


         

🖊 قــال شيخنا ربيع بن هادي المدخلي حفظه الله :

.

      *«* حارب نفسك من الكبر ،

خلق خبيث يدفع إلى الكفر وإلى احتقار الناس وإلى رد الحق .

لهذا هذا الحكيم وصّى ابنه ألا يصعِّر خده للناس ، ألا يتكبر على الناس .

يكلمك أحد وأنت شامخ معرض عنه ، تواضع ❗

️أنت إنسان مسكين ، ضعيف ،

خُلِقت من تراب ، خُلِقت من منِيٍّ قذر. و تتغوط وتزور الحمام مرات كل يوم ، كيف تتكبر؟

كيف تتكبر على الناس وأنت هذا حالك؟  من أنت؟

ثم لو تصيبك شوكة تبكي منها ، كيف تتكبر على الناس ️!

           فيجب على الإنسان أن يهين نفسه إذا تكبرت وشمخت ،

يذكَّرها بحقارتها ودناءتها وأن من أحقر الناس المستكبرون.

والله أنا في نفسي ما أحتقر إلا المستكبرين والكذابين، 

والله أرى أضعف الناس

فأقول :هذا أحسن مني

وأرى المتكبر مهما كان من أي طبقة والله من أتفه الناس وأحقر الناس عندي .

ولا أحقر من المتكبر؛ 

ولا يتكبر إلا من دناءة وانحطاط خلقي *»*.

.

📙  { شرح وصايا لقمان لابنه »  مجموع كتب ورسائل وفتاوى الشيخ ربيع ٢/  ٤٨٥ }

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                     அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

       

أحدث أقدم