பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உபகாரம் பெற்றோர்களின் மரணத்தோடு முடிந்துவிடக்கூடியதல்ல


        இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

        “தாய் தந்தையரின் மரணத்தின் பின்னர் அவர்களுக்கு உபகாரம் செய்தல் என்பது அவர்கள் இருவருக்காகவும் பிரார்த்தித்தால் போதும் என்று சுருக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு விடயம் அல்ல.  எனவே,  தாய் தந்தையர் இருவருமே  மரணித்து, அல்லது அவ்விருவரில் ஒருவர் மரணிக்கும்போது  அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய நோன்பு அவர்களுக்கு கட்டாயக் கடமையாக இருந்தது என்ற விடயம்  எங்களில்  ஒருவருக்குத் தெரிந்திருக்குமாக இருந்தால் அந்நோன்பை அவர் அவர்களுக்காகப் பிடிக்க வேண்டும். வசதியிருந்த நிலையில் ஹஜ் செய்யாது அவர்கள் மரணித்திருந்தால் அவர்களுக்காக அவர் ஹஜ் செய்ய வேண்டும். இதுகுறித்து அவ்விருவரும் வஸிய்யத் செய்யாதிருந்தாலும் சரியே! மரணித்த தாய் தந்தையருக்காக இவ்விரு கடமைகளையும் பிள்ளைகள் நிறைவேற்றுகின்றபோது அல்லாஹ்வுக்கு முன்னால் அவர்கள் இருவரின் பொறுப்பும் நீங்கிவிடுகிறது. அத்துடன்,  அவ்விருவரின் நன்மைகளிலும் அதிகரிப்பும் ஏற்படுகிறது. அக்கடமையை மேற்கொண்ட பிள்ளையின் நற்கூலியிருந்து எதுவுமே  குறைந்துவிடவுமாட்டாது.  

         புரைதா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:

*“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப்பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப்பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள், "(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப்பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது" என்று சொன்னார்கள். அப்பெண்மணி, "என் தாயார்மீது ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள், "அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக்கொள்" என்றார்கள். அப்பெண்மணி, "என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?" என்று கேட்டதற்கு, "அவருக்காக நீ ஹஜ் செய்"* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள் கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் - 2112)

          எனதருமைச் சகோதரர்களே! நீங்கள் சிறுபராயத்தில் இருந்தபோது உங்கள் நிம்மதிக்காக பெற்றோர் உங்களுக்கு பணத்தைச்  செலவழித்தார்கள். எனவே, மண்ணறைகளில் இருக்கும் அவர்களுக்காக தர்மம் என்ற அடிப்படையில் பணத்தைச் செலவழித்து மகிழ்ச்சியை அவர்களுக்கு ஊட்டுங்கள்! இது,  மண்ணறைகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும். இப்னு அப்பாஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்:   

*“ஸஅத் இப்னு உபாதா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அவரின் தாயார் இறந்துவிட்டார். அப்போது அவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்தபோது இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக தருமம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?' என்று கேட்டார்கள்.  நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள், 'ஆம் (பயனளிக்கும்!)' என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத்(ரழியழ்ழாஹு அன்ஹு)அவர்கள், 'நான் என்னுடைய மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தருமம் செய்துவிட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்”* என்று கூறினார்கள். 

(ஸஹீஹுல் புகாரி, ஹதீஸ் இலக்கம் - 2756)

[ நூல்: 'அல்முஹ்தார் லில்ஹதீசி பீf ஷஹ்ரி ரமழான்', பக்கம்:238,239 ]

🎁➖➖➖➖➖➖➖➖🎁

               

🖊 قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:

                   « وليس برّ الوالدين مقصورا بعد موتهما على الدعاء لهما فحسب، فإذا علم أحدنا أن على والديه أو أحدهما دينا من صيام قضاه عنهما، وإذا لم يحجّا حجّ عنهما ولو لم يوصيا بذلك. وقيام الولد بأداء هذين الفرضين عنهما يزيل مسؤوليتهما أمام الله تعالى بعد موتهما ويزيد في حسناتهما ولا ينقص من أجره شيئ، فعن بريدة رضي الله عنه قال: *« بينا أنا جالسٌ عنْدَ رسولِ اللهِ صَلَّى اللهُ عَليهِ وَسلَّمَ؛ إذ أتتهُ امرأةٌ، فقالتْ: إنِّي تصدَّقتُ على أُمِّي بجاريةٍ وإنَّها ماتَتْ، قالَ: فقالَ: «وجبَ أجرُكِ، وردَّها عليكِ الميراثُ» قالتْ: يا رسولَ الله؛ إنَّهُ كانَ عليها صومُ شهرٍ أفأصومُ عَنْها؟ قالَ: «صومي عَنْها» قالتْ: إنَّها لمْ تَحُجَّ قطُّ، أفحُجُّ عَنْها؟ قالَ: «حجِّي عَنْها».*  (رواه مسلم، رقم الحديث - ٢١١٢ )

           إخواني! لقد بذل الآباء المال في حال صغركم لراحتكم، فأدخلوا السرور عليهم في القبور ببذل المال صدقة عنهم، فإن ذلك ينفعهم في قبورهم. فعن ابْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : *(أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا ، أَيَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا؟ قَالَ : نَعَمْ .قَالَ : فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِيَ الْمِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا)* رواه البخاري (رقم الحديث - 2756) 

[ المختار للحديث في شهر رمضان يستفيد منه الواعظ والخطيب، ص - ٢٣٨،٢٣٩ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

     

أحدث أقدم