அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறு, விஷக்கடி, சின்னம்மை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4421)
ஒன்றை கண்டு வியந்தால் கூறவேண்டிய துஆ :
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் தம் சகோதரரிடமோ அல்லது தம்மிடமோ அல்லது தமது செல்வத்திலோ வியக்கத்தக்க ஏதாவது ஒன்றைப் பார்த்து விட்டால். உடனே அதில் பரக்கத்தை வேண்டிப் பிரார்த்தித்து விடட்டும்' (அல்லாஹ் இதில் பரக்கத் செய்யட்டும்!) நிச்சயமாகக் கண்ணேறு உண்மையானதே!
بَارَكَ الله لَك بَارَكَ الله عَلَيك
பாரகல்லாஹு லக்க பாரக்கல்லாஹு அலைக்க
அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக!அல்லாஹ் உங்கள் மீது அருள்வளம் பொழிவானாக!
(நூல் : முஸ்னது அஹ்மது : 15550)
கண்ணேறுக்கு ஓதும் துஆக்கள் :
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
அஊது பிகலிமாத்தி ல்லாஹித் தாம்மாத்தி மின் குல்லி ஷைத்தானின் வஹாம்மாத்தின் வமின் குல்லி ஐனின் லாம்மாத்தின்
பொருள் : அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3371)
بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
‘ பிஸ்மில்லாஹி யுப்ரீக்க, வ மின் குல்லி தாயின் யஷ்ஃபீக்க, வ மின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத, வ ஷர்ரி குல்லி தீ அய்னின் ’
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (ஓதிப் பார்க்கிறேன்). அவன் உங்களுக்கு குணமளிப்பானாக! அனைத்து நோயிலிருந்தும் உங்களுக்குச் சுகமளிப்பானாக. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும் கண்ணேறு உள்ள ஒவ்வொருவரின் தீமையிலிருந்தும் காப்பானாக!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4402)
بِاسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ
‘ பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி ஷைஇன் யுஃதீக்க, மின் ஷர்ரி குல்லி நஃப்சின் அவ் அய்னின் ஹாசிதின், அல்லாஹு யஷ்ஃபீக்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க ’
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப்பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4403)
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! அத்ஹிபில் பஃஸ், வஷ்ஃபிஹி. வ அன்த்தஷ் ஷாஃபி லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக. ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்
பொருள் : இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்கி இவருக்குக் குணமளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணமில்லை. நோய் அறவே இல்லாதவாறு குணமளிப்பாயாக!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 5743)
اللَّهُمَّ اشْفِ،____ اللَّهُمَّ اشْفِ ____، اللَّهُمَّ اشْفِ ____
அல்லாஹும்மஷ்ஃபீ _________ அல்லாஹும்மஷ்ஃபீ _________ அல்லாஹும்மஷ்ஃபீ _________
#கோடிட்ட இடத்தில் நோயாளி பெயரை குறிப்பிடவும்!
பொருள் : இறைவா! (நோயாளி பெயரை குறிப்பிடவும்) குணமளிப்பாயாக! இறைவா! (நோயாளி பெயரை குறிப்பிடவும்) குணமளிப்பாயாக! இறைவா! (நோயாளி பெயரை குறிப்பிடவும்) குணமளிப்பாயாக!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 3352)
أَسْأَلُ اللهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيْكَ
அன்அலுல்லாஹல் அளீம ரப்பல் அர்ஷில் அளீமி அன் யஷ்ஃபீயக
பொருள்: மிகப்பெரியவனான, மாபெரும் அர்ஷின் அதிபதியான அல்லாஹ்விடம் உம்மை குணப்படுத்தும்படி கேட்கிறேன்
எண்ணிக்கை : ஏழு முறை கூறவேண்டும்!
(நூல் : சுனன் அபூதாவூத் : 3106)
اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபா அன்லா யுஃகாதிரு சகமன்
பொருள் : இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 5742)
நோயின் போது கூறவேண்டிய துஆ :
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَ اَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّ
லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் - லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ கலஹு - லாயிலாஹ இல்லல்லாஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து - லாயிலாஹ இல்லல்லாஹு வலாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிரவே யாரும் இல்லை! அல்லாஹ்வே மிகப்பெரியவன்! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை! அவன் தனித்தவன்! அவனுக்கு இணை இல்லை!
வணக்கத்திற்குரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை! அவனுக்கே ஆட்சி உரியது! அவனுக்கே புகழ் அனைத்தும்! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. எவ்வித திரும்புதலே ஆற்றலோ அல்லாஹ்விடமிருந்தே தவிர வேறு இல்லை!
துஆவின் சிறப்பு : தன் நோயின் போது இதை ஒருவர் கூறி மரணமாகி விட்டால். அவரை நரகம் தீண்டாது!
(நூல் : சுனன் திர்மிதி : 3430)
குழந்தைகளுக்கு கண்ணேறு விட்டு பாதுகாப்பு பெற ஓதும் துஆ :
أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ ، وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
[உஈதுக்குமா] பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வமின் குல்லி ஐனின் லாம்மத்தின்
பொருள் : அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3371)
குறிப்பு : குழந்தை ஒன்று என்றால் ‘உஈதுக்க’ என்று சொன்னால் போதும். நபி (ஸல்) இரு குழந்தைகளுக்கும் சேர்ந்து ஓதியதால், ‘உஈதுக்குமா’ என்றார்கள்!
கண்ணேறு விட்டு பாதுகாப்பு பெற ஓத வேண்டிய சூராக்கள் :
அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
ஃபலக், நாஸ் அத்தியாயங்கள் இறங்கும் வரை கண்ணேறு, ஷைத்தான் ஆகியவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரு வசனங்களும் இறங்கிய பின் அதை எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டு விட்டார்கள் !
(நூல் : சுனன் திர்மிதி : 2135)
@அல்லாஹ் போதுமானவன்