عن أبو هريرة رضي الله عنه، قال: سَمِعْتُ النبيَّ ﷺ يقولُ: لا يَصُومَنَّ أحَدُكُمْ يَومَ الجُمُعَةِ، إلّا يَوْمًا قَبْلَهُ أوْ بَعْدَهُ.
البخاري (١٩٨٥) واللفظ له، ومسلم (١١٤٤)
1. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்க வேண்டாம். எனினும் அதற்கு முன்னால் அல்லது பின்னால் ஒரு நாள் (சேர்த்து) நோன்பு நோற்றாலே தவிர.
அறிவிப்பவர்: அபூஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு)
புகாரி 1985, முஸ்லிம் 1144
عن جويرية بنت الحارث رضي الله عنها، أن النبي صلى الله عليه وسلم دخل عليها يوم الجمعة وهي صائمة، فقال : " أصمت أمس ؟ ". قالت : لا. قال : " تريدين أن تصومين غدا ؟ ". قالت : لا. قال : " فأفطري ".
2. நபி ﷺ அவர்களின் மனைவி ஜுவைரிய்யஹ் (றளியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்:
நபி ﷺ அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது என்னிடம் வந்தார்கள். 'நேற்று நோன்பு வைத்தீரா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை!' என்றேன். 'நாளை நோன்பு நோற்க விரும்புகிறீரா?' என்று கேட்டார்கள். அதற்கும் 'இல்லை!' என்றேன். (இதைக் கேட்ட) நபி ﷺ அவர்கள் 'அப்படியானால் நோன்பை முறித்து விடுவீராக!' என்றார்கள்.
மற்றொரு அறிவிப்பில்:
'நபி ﷺ அவர்களின் கட்டளைப்படி, தான் நோன்பை முறித்து விட்டதாக ஜுவைரிய்யஹ் (றளியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்.
புகாரி 1986.
عن محمد بن عباد، سألت جابر بن عبد الله رضي الله عنهما - وهو يطوف بالبيت - أنهى رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم الجمعة ؟ فقال : نعم، ورب هذا البيت.
البخاري 1984، ومسلم 1143 واللفظ له.
قال البخاري: زاد غير أبي عاصم: أن ينفرد بصوم.
3. முஹம்மத் இப்னு அப்பாத் கூறினார்:
நபி ﷺ அவர்கள் வெள்ளிக் கிழமை நோன்பு வைப்பதைத் தடை செய்தார்களா என்று ஜாபிர் (றளியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்டேன். 'ஆம்', இந்த (கஃபஹ்) ஆலயத்தின் இரட்சகனின் மீது சத்தியமாக! என்றார்கள்.
- மற்றோர் அறிவிப்பில்: வெள்ளிக் கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்க நபி ﷺ அவர்கள் தடை செய்ததாக அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
புகாரி 1984, முஸ்லிம் 1143.
عن أبي هريرة رضي الله عنه، عن النبي ﷺ: لا تَخْتَصُّوا لَيْلَةَ الجُمُعَةِ بقِيامٍ مِن بَيْنِ اللَّيالِي، وَلا تَخُصُّوا يَومَ الجُمُعَةِ بصِيامٍ مِن بَيْنِ الأيّامِ، إِلّا أَنْ يَكونَ في صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ.
مسلم ١١٤٤
4. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை நின்று வணங்குவதற்காக விசேடமாகத் தேர்ந்தெடுக்காதீர்கள். பகல்களில் வெள்ளிக்கிழமைப் பகலை நோன்பு பிடிப்பதற்காக விசேடமாகத் தேர்ந்தெடுக்காதீர்கள். ஆனால், உங்களில் ஒருவர் (வழமையில்) நோற்கும் நோன்பில் வெள்ளிக்கிழமை அமைந்தாலே தவிர.
அறிவிப்பவர்: அபூஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு)
முஸ்லிம் 1144.
விளக்கக் குறிப்புகள்:
பின்வரும் இரண்டு நிலைகளில் தவிர வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பது மேற்படி ஹதீஸ்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
1. வியாழன் அல்லது சனியுடன் சேர்த்து வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2. ஒருவர் வழமையாக நோற்று வரும் நோன்பு நாட்களில் வெள்ளிக்கிழமை இடம்பெறுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக: நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பு போன்று ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பவர், அறஃபஹ், தாஸூஆஃ, ஆஷூறாஃ நோன்புகள் நோற்பவர் போன்றவர்கள் வெள்ளிக்கிழமையில் அவர்களது நோன்பு அமைந்தால் அந்நாளில் தனியாக அந்த நோன்பை நோற்க முடியும்.
பல அறிஞர்கள் மேற்படி நான்காவது இலக்க ஹதீஸை அடிப்படையாக வைத்து, வெள்ளிக்கிழமையில் அது வெள்ளிக்கிழமை என்ற விஷேடத்திற்கல்லாது வேறு காரணங்களுக்காக நோன்பு நோற்பது தவறில்லை என்று கருதுகின்றனர். உதாரணமாக ஒருவருக்கு வேலைப்பளு காரணமாக வெள்ளிக்கிழமையில் மாத்திரம் தான் நோன்பு நோற்க வசதி இருந்தால் அவர் அந்த நாளில் நோன்பு நோற்கலாம் என்று கூறுகின்றனர். அல்லாஹ் மிக அறிந்தவன்.
உசாத்துணைகள்:
- فتح الباري لابن حجر
- المنهاج شرح صحيح مسلم للنووي
- عون المعبود للعظيم آبادي
- القول التمام في شرح أحاديث النهي عن إفراد الجُمُعة والسبت بالصيام للشيخ فركوس.
ஸுன்னஹ் அகாடமி:
Sunnah Academy:
facebook.com/Sunnah.Acad
instagram.com/sunnah_academy
youtube.com/@Sunnah_academ
Telegram:
t.me/sunnah_academy
WhatsApp:
chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp