ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுபுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதை அனுமதிக்காத அல்ஹஸனுல் பஸரி (ரஹ்)

முஸ்லிம்களில் ஒரு குழுவினர் அல்ஹஸனுல் பஸரி (ரஹ்) அவ்களிடம் (கொடுங்கோல் ஆட்சியாளன்) ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுபுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு மார்க்க தீர்ப்பு கேட்டு வந்தார்கள்.
 ‍‍‍‍‍‍ ‍‍
அவர்கள் சொன்னார்கள்: அபூ ஸஈதே! அநியாயமாக இரத்தம் சிந்தி, அநியாயமாக சொத்துகளை அபகரித்து, மேலும் பல தீமைகளை செய்த இந்த கொடுங்கோலனுக்கு எதிராக யுத்தம் செய்வதை பற்றி என்ன கருதுகிறீர்கள்?
 ‍‍‍‍‍‍ ‍‍
அதற்கு அல்ஹஸன் (ரஹி) கூரினார்கள்: "அவருக்கு எதிராக யுத்தம் செய்யக்கூடாது என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. இது அல்லாஹ்வுடைய தண்டனைகளில் ஒன்றாக இருந்தால் அதை உங்களுடைய வாள்களால் ஒரு போது அகற்றிவிட முடியாது. இது அல்லாஹ்வுடைய சோதனைகளில் ஒன்றாக இருக்குமானால் நீங்கள் அல்லாஹ்வுடைய தீர்ப்பு வரும் வரை பொறுமையாக இருங்கள், தீர்ப்பு வழங்குபவர்களில் அவனே சிறந்தவன்." 
 ‍‍‍‍‍‍ ‍‍
அவர்கள் அல்ஹஸனை விட்டுவிட்டார்கள், அவருக்கு முரண்பட்டார்கள், ஹஜ்ஜாஜுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள், எனவே ஹஜ்ஜாஜ் அவர்கள் அனைவரையும் கொன்றான்.
 ‍‍‍‍‍‍ ‍‍
"அநியாயக்கார ஆட்சியாளரால் சோதிக்கப்படும் போது மக்கள் பொறுமை காப்பார்களானால் அல்லாஹ் அவர்களுக்கு அதிலிருந்து விடிவை கொடுக்க நீண்டகாலம் ஆகாது. ஆனால் அவர்கள் அவர்களுடைய வாள்களுக்கு விரைகிறார்கள், எனவே அவர்கள் அவர்களுடைய வாள்களோடே விடப்படுகிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆனையாக ஒரு நாளுக்கேனும் அவர்கள் நலவை கொன்டுவரவில்லை" என அல்ஹஸனுல் பஸரி (ரஹ்) சொல்லக்கூடியவராக இருந்தார்.
 ‍‍‍‍‍‍ ‍‍
தபகாதுல் குப்ரா, இப்னு ஸஅத் (7/163)
أحدث أقدم