விதி விடயத்தில் வழிகெட்ட கூட்டத்தினரும் - அஹ்லுஸ் ஸுன்னாவினரும்..!

1) " 'விதி' என்று எதுவுமே கிடையாது; மனிதனே தன் செயலை உருவாக்குகிறான்" என்ற கொள்கை வழிகெட்ட கத்ரிய்யாக்களுடையது.!

2) "அல்லாஹ்தான் மனிதனை நிர்பந்தத்திற்கும் - கட்டாயத்திற்கும் உட்படுத்துகிறான்; மனிதனுக்கு எவ்வித சுய விருப்பமும் இல்லை.! எல்லாமே விதிப்படிதான்." என்பது வழிகெட்ட ஜபரிய்யா கொள்கையாகும்..!

3) "மனிதன் தன் சுய விருப்பத்துடன் செயலாற்றும் ஆற்றல் பெற்றவன்; ஆனாலும் அவனது விருப்பம் இறைவனின் நாட்டத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது".என்பது அஹ்லுஸ் ஸுன்னா எனும் நபிவழி நடப்போரின் கொள்கையாகும்; இதுதான் விதி பற்றிய மிகச்சரியான நிலைப்பாடாகும்.

மூல நூல் : இஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை (அத்துமீறாமலும், அலட்சியப்படுத்தாமலும்) | அஷ்ஷெய்க். அப்துல்லாஹ் அல்-ஜப்ரின் رحمه الله


விதி பற்றிய கூடுதல் விளக்கங்கள் : 

اِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ‏ 
நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும், (நிர்ணயிக்கப்பட்ட) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் 54:49)

وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏ 
இன்னும், அவனிடமே மறைவானவற்றின் சாவிகள் இருக்கின்றன,  அவற்(றிலுள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியார்,  மேலும், கரையிலும், கடலிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான்,  அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை,  பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருள்களில் (புதைந்து) கிடக்கும் வித்தும் பசுமையானதும், உலர்ந்ததும் (அவனுடைய) தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.
(அல்குர்ஆன் : 6:59)

விதி விடயத்தை நம்ப வேண்டிய முறைகள் : 
  
அஹ்லுஸ் ஸுன்னா வல்-ஜமாஆ விதி விடயத்தை எப்படி நம்புகிறார்களோ அதுவே சரியான கொள்கையாகும்.

இதில் 4 அடிப்படைகள் உள்ளன : 

1) அல்லாஹ்வின் அறிவு (அலிமஹு) : 
அல்லாஹ்விற்கு அனைத்தைப் பற்றிய அறிவும் உள்ளது.

  اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏ 
 நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும்  நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 4:32)

2) அல்லாஹ்வின் எழுத்து (கதபஹு) : 
அல்லாஹ் வானம், பூமி படைக்கப்படுவதற்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்பே விதியை எழுதிவிட்டான்; இவ்வுலகில் நடக்கும் அனைத்தும் 'லவ்ஹுல் மஹ்பூல்' எனும் ஏட்டில் பதியப்பட்டுள்ளது.

ஆதாரம் : 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­லியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்­லிம் (5160)

3) அல்லாஹ்வின் நாட்டம் (ஷாஅஹு): இப்பூமியில் எது நடந்தாலும் அது அவனது நாட்டப்படியே நடக்கிறது. 

ஆதாரம் :

وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا  ‏ 
எனினும், அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மையையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 76:30)

4) அல்லாஹ்வின் படைப்பு (ஹலக்கஹு) :
அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன். மனிதர்களாகிய நம்மைப் படைத்தவனும் அவன்தான். நாம் செய்கின்ற செயல்களைப் படைத்தவனும் அவன்தான்.!

اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌  
அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்.
(அல்குர்ஆன் 39:62)

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ‏ 
“உங்களையும், நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்” (என்றார்).
(அல்குர்ஆன் 37:96)


அல்லாஹ்வின் நாட்டம் :

இது இரு வகைப்படும்.

1) கவ்னிய்யா :

• உலக நியதியை சார்ந்தது.
• இது அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும்; ஆனால் இந்த நாட்டம் அல்லாஹ்வுக்கு விருப்பமானதாக  இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆதாரம் :

 وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ‏

"....அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்வாறு) அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ் தான் நாடியவைகளையே செய்வான்.
(அல்குர்ஆன் 2:253)

2) ஷர்யிய்யா : 

• இது மார்க்க நியதியை சார்ந்தது. 
• இது அல்லாஹ்வுக்கு விருப்பமானதாக இருக்கும்; எனினும் இந்த நாட்டம் நிகழாமல் போகலாம்.  (உதாரணம் : மனிதன் தொழ வேண்டுமென அல்லாஹ் விரும்புகிறான். ஆனால் சிலர் தொழுவதில்லை).

குறிப்பு : நிகழாமல் போகும் செயல்களை பற்றியும் அல்லாஹ்வுக்கு  முன்கூட்டியே தெரியும். 

ஆதாரம் : 

وَاللّٰهُ يُرِيْدُ اَنْ يَّتُوْبَ عَلَيْكُمْ وَيُرِيْدُ الَّذِيْنَ يَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِيْلُوْا مَيْلًا عَظِيْمًا‏ 
மேலும், அல்லாஹ் உங்களது தவ்பாவை (பாவமன்னிப்பை) நாடுகின்றான்,  இன்னும், (முற்றிலும்) மன இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ, நீங்கள் (நேர்வழியிலிருந்து) முற்றிலும் சாய்ந்து விடுவதையே நாடுகின்றனர்.
(அல்குர்ஆன் 4:27)

மனிதனின் செயல் சுதந்திரம் : 

அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்து செயல்களும் நடைபெறுகின்றது என்பதை நம்பிக்கை கொள்வதுடன் அல்லாஹ் தன் அடியார்களுக்கு சுய விருப்பத்தையும், ஆற்றலையும் வழங்கியிருக்கிறான்; அவர்கள் அவற்றை கொண்டே தங்கள் செயல்களைச் செய்கிறார்கள் என்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஆதாரம் : 

وَلَوْ اَرَادُوْا الْخُـرُوْجَ لَاَعَدُّوْا لَهٗ عُدَّةً وَّلٰـكِنْ كَرِهَ اللّٰهُ انبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِيْلَ اقْعُدُوْا مَعَ الْقٰعِدِيْنَ‏ 
அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்;

(அல்குர்ஆன் 9:46)
Previous Post Next Post