யாரிந்த ஹூதிகள்

எமனில் ஈரானினால் உருவாக்கப்பட்ட ஆயுதக்குழுவான ஹூதிகள் ஷீஆக்களின் ஸைதிய்யா பிரிவிலிருந்து தோற்றம் பெற்றவர்களாகும்...

ஷீஆக்களின் பல்வேறு பிரிவுகளில் ஸைதிய்யா என்பதும் ஒன்றாகும். இந்தப் பிரிவே ஷீஆப் பிரிவுகளில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மிகவும் நெருக்கமான பிரிவு என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பிரிவும் கூட நான்கு பிரிவுகளாக பிரிந்துள்ளது.

01. அல் ஹாதவிய்யா
02. அஸ்ஸாலிஹிய்யா
03. அஸ்ஸுலைமானிய்யா
04. அல் ஜாரூதிய்யா

இதில் அல்-ஹாதவிய்யா என்ற குழுவே அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு மிக நெருக்கமானவர்கள் அவர்களே எமனில் உள்ள ஷீஆக்களில் அதிகமானவர்கள் அபுபக்ர் (ரழி), உமர் (ரழி) அவர்களின் ஆட்சியை ஏற்றுக்கொள்பவர்கள்.

 ஏனைய மூன்று பிரிவினரும் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு மிகவும் தூரமானவர்கள் இதில் அல்ஜாரூதிய்யா என்ற பிரிவு அஹ்லுஸ் ஸுன்னாவுக்கு  மிகவும் தூரமான பிரிவாகும்  இது ஈரானின் ஆட்சிக்கொள்கையாகிய ராபிழா இஸ்னா அஷரிய்யாவின் கொள்கைக்கு ஒத்த கொள்கையை கொண்ட ஓர் பிரிவு.

ஸஹாபாக்களை காபிர்கள் என்று விமர்சிப்பது, அலி (ரழி) அவர்களைத் தவிர ஏனைய ஹலீபாக்களின் ஆட்சியை நிராகரிப்பது போன்ற ஷீஆ ராபிழாக்களின் பல கொள்கைகளை கொண்டுள்ளனர். 

இவர்களிலிருந்தே ஹூதிகள் உருவானார்கள். அதனால் அவர்களை ஈரான் பரிபாலிக்கிறது. ஸைதிய்யாவின் மற்றொரு பிரிவான மிதவாத ஹாதவிய்யாக்கள் இவர்களை ஏற்பதில்லை.
Previous Post Next Post