ஸஹாபாக்களை ஏசி, குறை கூறுபவனுக்கான மார்க்கத் தீர்ப்புகள்

01. ஸஹாபாக்களுக்கு ஏசுபவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனே

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் -ரஹிமஹுல்லாஹ்- அவர்களது மகன் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத்-ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

" நான் எனது தந்தையிடம் (அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம்) நபியவர்களது ஸஹாபாக்களுக்கு ஏசும் ஒரு மனிதரைப் பற்றி வினவினேன், அப்பொழுது (இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்: இஸ்லாத்தில் இருப்பவராக அம்மனிதரை நான் கருதமாட்டேன் என்று பதிலளித்தார்கள்."

நூல்: அஸ்ஸூன்னஹ் லில் கல்லால் (1/493)



02. ஸஹாபாக்களுக்கு ஏசுவதானது நரகின் பால் கொண்டு சென்றுவிடும்

மைமூன் இப்னு மிஹ்ரான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

" இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் எனக்குக் கூறினார்கள்: "முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தோழர்களில்( ஸஹாபாக்களில்) ஒருவருக்கேனும் நீர் ஏசுவதை நான் (வன்மையாக) உன்னை எச்சரிக்கின்றேன், அவ்வாறு நீர் செய்தால் அல்லாஹ் உன்னை நரகில் முகம்குப்புற இழுப்பான்."

நூல்: ஷரஹுஸ் ஸுன்னஹ் லில் லாலகாஈ 3/663


03. ஸஹாபாக்களுக்கு ஏசுபவன் நயவஞ்சகனே!

அல்லாமா இப்னு உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்:

யாரை நயவஞ்சகம் மூழ்கடித்துவிட்டதோ அத்தகையவனைத் தவிர வேறு யாரும் ஸஹாபாக்களை-ரலியல்லாஹு அன்ஹும்- ஏசுவதற்கு தைரியம் பெறமாட்டார், அல்லாஹ் பாதுகாப்பானாக! அவ்வாறில்லையெனில் எவ்வாறு ஸஹாபாக்களுக்கு ஏசுவான்."

நூல்: நூருன் அலத் தர்ப் (375)


04. ஸஹாபாக்கள் விடயத்தில் நலவை மாத்திரம் உரைப்போம்

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: 

" நாம், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸஹாபாக்கள் விடயத்தில் நலவைத் தவிர்த்து வேறொன்றும் உரைக்கமாட்டோம்."

நூல்: அஸ்ஸுன்னஹ் லிஅபீ பக்ர் இப்னில் கல்லால் (2/346)


05. ஸஹாபாக்களை சாடுவது, ஏசுவது குற்றமாகும்

ஸஹாபாக்களுக்கிடையில் ஏற்பட்ட யுத்தம்,மோதலைப் பற்றி இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் வினவப்பட்டால் அவர்கள்: "அது ஓர் சோதனை (பித்னா), அதிலிருந்து அல்லாஹ் எமது கரங்களை (பாதுகாத்து) சுத்தப்படுத்தியுள்ளான், ஆதலால் நாம் அதிலிருந்து எமது நாவுகளை சுத்தப்படுத்த வேண்டாமா?" என்று பதிலளிப்பார்கள்.

நூற்கள்: ராஸி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரிய மனாகிபுஷ் ஷாஃபிஈ (1/449), அல் ஹில்யஹ் (9/114), ஜாமிஉ பயானில் இல்ம் (2/93), அல் பிக்ஹுல் அக்பர் (58), தபகாதுல் ஹனாபிலஹ் (2/272).

தமிழாக்கம்:
அ(z)ஸ்ஹான் ஹனீபா
Previous Post Next Post