கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் ரழியின் முகத்தில் அறைந்தவனின் கையின் நிலை

(الرجل الذي صفع عثمان رضي الله عنه على خده)
என்ற தலைப்பில் அரபி மூலமான ஒரு டுவிட்டர் பதிவு படித்தேன். அதன் விபரம் பின்வருமாறு:
عن محمد بن سيرين قال:
كنت أطوف بالكعبة، وإذا رجل يقول: اللهم اغفر لي، وما أظن أن تغفر لي.
فقلت: يا عبد الله، ما سمعت أحدا يقول ما تقول.
قال: كُنتُ أعطيت لله عهدا إن قدرت أن ألطم وجه عثمان إلا لطمته، فلما قُتِل وُضِع على سريره في البيت والناس يجيئون يصلون عليه، فدخلت كأني أصلي عليه، فوجدت خلوة، #فرفعت الثوب عن وجهه، ولحيته، ولطمته وقد يبست يميني .
قال ابن سيرين: فرأيتها يابسة كأنها عود).
 تاريخ دمشق لابن عساكر (39/ 444).
முஹம்மத் பின் சீரீன் என்ற சிறந்த தாபியீ அவர்கள் கூறுகின்றார்கள்.
நான் கஃபாவை தாவாஃப் செய்து கொண்டிருந்த போது ஒரு மனிதன், 
اللهم اغفر لي، وما أظن أن تغفر لي.
யா அல்லாஹ் ! நீ என்னை மன்னிப்பாயாக! நீ என்னை மன்னிப்பாய் என நான் நினைக்கவில்லை எனக் கூறிக் கொண்டிருந்தான். 
நான் அவனை அணுகி : அல்லாஹ்வின் அடிமை ஒன்றின் தந்தையே! நீ பிரார்த்திக்கின்ற முறையில் ஒருவரும் பிரார்த்திக்க நான் அவதானிக்கவில்லையே!  என்ன விஷயம்? எனக் கேட்டேன்.  அதற்கு அவன் சந்தர்ப்பம் கிடைத்தால் உஸ்மானுக்கு கன்னத்தில் அறைவேன்; என்பதை அல்லாஹ்வோடு உறுதி மொழியாகக் கொடுத்திருந்தேன். அவர் படு கொலை செய்யப்பட்டுக் கிடந்த தருனம் பார்த்து அவர் வீட்டினுள் சென்று அவர் புடவையால்  போர்த்தப்பட்டுக் அவரது கட்டிலில் கிடத்தப்பட்டுக் கிடந்ததை அவதானித்தேன். மக்கள் அவருக்கு தொழுவதற்காக வந்து சென்றார்கள். நானும் தொழுபவன் போல நடித்து உள் நுழைந்தேன் (சுத்தும் பார்த்தேன்). ஒருவரும் இருக்க வில்லை. உடனே அவரது முகத்திலும் தாடியை சுற்றியும் கிடந்த புடவையை  நீக்கி அவரது கன்னத்தில் ஓங்கி   அறைந்தேன். உடனே எனது இந்தக் கையும் இயக்கத்தை இழந்து சூகையானது ; என்ற திடுக்கிடும் சரித்திரத்தை அறிவிக்கும் சிறந்த தாபியீக்களில் ஒருவரான இமாம் முஹம்மத் பின் ஸீரீன் (ரஹி) அவர்கள்: உடனே நான் அவனது கையைப் பார்த்தேன். அது காய்ந்த குச்சி போல இருந்ததை அவதானித்தேன் எனக் கூறுகின்றார்கள். ஆதார நூல்: தாரீகு திமஷ்க்- 33/444 ) முற்றும்.

விளக்கம்:
-
நபித்தோழர்கள்  விஷயத்தில் தேவையற்ற விமர்சனங்களை அவர்கள் உயிர் வாழும் போதும் சரி, அவர்கள் மரணித்த பின்னாலும் சரி தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் வழியில் நடப்போர் அதனை மீறுவது ஒழுக்கமான செயலும் கிடையாது. 

அவர்களை தேவையற்ற விதத்தில் விமர்சித்த
சிலருக்கு அவர்களின் மரண வேளையிலும் அது சாபத்தை தேடிக் கொடுத்த வரலாறுகளும் உண்டு.

நபியிடம் நேரடியாகப் பாடம் படித்தவர்களை தாமே அறிவாளிகள்  போல நடக்கும்  பித்அத்வாதிகள், அவ்லியா வழிபாடு செய்பவர்களோடு அவர்களை விடவும் குர்ஆன், ஹதீஸ் நமக்கு விளங்கும் எனக் கூறி தமது வழிகெட்ட சிந்தனைகளில் அப்பாவி முஸ்லிம்களை சிக்க வைக்கும் நவீன அழைப்பாளர்கள் பலர் உருவாகி இருப்பதை நாம் அறிவோம்.
السكوت عما شجر بينهم
அவர்கள் மத்தியில் நிகழ்ந்த சில கசப்பான நிகழ்வுகள் பற்றிப் பேசாது மௌனம் காத்தல் என்ற அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் போட்ட கோட்டை தாண்டிய சில தாயிக்களின் உள்வீட்டு ரகசியங்கள் கூட வெளியில் வந்து நாறிப்போன வரலாறும் உண்டு. 

ஷஹீத் என இறைத் தூதரால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட கண்ணிமிக்க ஸஹாபியை பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறிக்  கொடூரமான முறையில் கொலை செய்ததை நியாயம் பேசும் குர்ஆன், ஹதீஸ் பெயரில் உருவான கழிசடை தாயிக்கள் சிலர்     நபித்தோழர்கள் விஷயத்தில் தமது நாக்குகளை நலைத்து வாழ்கின்றனர்.
  
ஸஹபாக்களை காஃபிர் எனக் கூறும் ஷீஆக்கள், கவாரிஜ்கள் போன்றோரின் வழியில் செல்லும் ஒவ்வொருக்கும் இதிலும் பெரிய படிப்பினை உண்டு என்பதை மறுக்க முடியாது.

- எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
أحدث أقدم