அல் - அஸ்மாஉல் ஹுஸ்னா

பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்..

இதில் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 112 அவற்றின் 117 கருத்துக்களுடன் உள்ளன. இவை அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் மற்றும் ஷெய்க் யஹ்யா அல் ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் ஆகியோரின் அஸ்மாஉல் ஹுஸ்னா தொகுப்புகளிலிருந்து எடுக்கப்பட்டவை.


1.    அல்லாஹ் الله – வணக்கத்துக்குரியவன்

2.    அல்இலாஹ் الإله – வணங்கப்படத் தகுதியான நாயன்

3.    அல்ஹய்யு الحي – என்றும் உயிருடன் இருப்பவன்

4.    அல்கய்யூம் القيوم – என்றும் நிலைத்திருப்பவன்

5.    அர்ரப்பு الرب – அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிப்பவன்

6.    அர்ரஹ்மான் الرحمن – அளவற்ற அருளாளன்

7.    அர்ரஹீம் الرحيم – நிகரற்ற அன்புடையவன்

8.    அல்மலிக் الملك – ஆட்சியாளன்

9.    அல்குத்தூஸ் القدوس – பரிசுத்தமானவன்

10.   அஸ்ஸலாம் السلام – சாந்தியளிப்பவன்

11.   அல்முஃமின் المؤمن – தூதர்களுக்கு அற்புதங்களை வழங்கி உண்மைப்படுத்திப் பாதுகாப்பவன்

12.   அல்முஹைமின் المهيمن – கண்காணிப்பவன்

13.   அல்ஜப்பார் الجبار – அடக்கியாளுபவன்

14.   அல்முதகப்பிர் المتكبر – பெருமைக்குரியவன்

15.   அல்ஹாலிக் الخالق – படைப்பவன்

16.   அல்பாரி البارئ – தோற்றுவிப்பவன்

17.   அல்முஸவ்விர் المصور – உருவமைப்பவன்

18.   அல்அஸீஸ் العزيز – யாவற்றையும் மிகைத்தவன்

19.   அல்ஹகீம் الحكيم – ஞானமிக்கவன்

20.   அல்அவ்வல் الأول – முதலாமவன்

21.   அல்ஆகிர் الآخر – இறுதியானவன்

22.   அல்ழாஹிர் الظاهر – மேலானவன்

23.   அல்பாதின் الباطن – அந்தரங்கமானவன்

24.   அல்அலீம் العليم – யாவற்றையும் நன்கறிந்தவன்

25.   அல்கபூர் الغفور – மிக்க மன்னிப்பவன்

26.   அல்வதூத் الودود – மிக்க நேசிப்பவன்

27.   அல்மஜீத் المجيد – மேன்மைமிக்கவன்

28.   அர்ரஸ்ஸாக் الرزاق – உணவளிப்பவன்

29.   அல்கவிய்யு القوي – பலமிக்கவன்

30.   அல்மதீன் المتين – உறுதியானவன்

31.   அல்கய்ர் الخير – மிக சிறந்தவன்

32.   அல்ஹாபிழ் الحافظ – பாதுகாவலன்

33.   அல்ஹபீழ் ‎الحفيظ – யாவற்றையும் கண்காணிப்பவன்

34.   அல்ஆலிம் العالم – நன்கறிந்தவன்

35.   அல்கபீர் الكبير – மிகப் பெரியவன்

36.   அல்முதஆல் المتعال – மிக உயர்ந்தவன்

37.   அல்மாலிக் المالك – தீர்ப்பு நாளின் அதிபதி

38.   அல்மலீக் المليك – அரசன்

39.   அல்முக்ததிர் المقتدر – வலிமைமிக்கவன்

40.   அல்அஹத் الأحد – ஒருவன்

41.   அஸ்ஸமத் الصمد – எவ்வித தேவையுமற்றவன்

42.   அல்வாஹித் الواحد – தனித்தவன்

43.   அல்கஹ்ஹார் القهار – அடக்கியாளுபவன்

44.   அல்வலி الولي – பாதுகாவலன்

45.   அல்ஹமீத் الحميد – புகழுக்குரியவன்

46.   அல்மவ்லா المولى – பாதுகாவலனில் சிறந்தவன்

47.   அந்நஸீர் النصير – உதவி செய்பவனில் சிறந்தவன்

48.   அர்ரகீப் الرقيب – கவனிப்பவன்

49.   அஷ்ஷஹீத் ‎الشهيد – சாட்சியாளன்

50.   அஸ்ஸமீஉ السميع – செவியுறுபவன்

51.   அல்பஸீர் البصير – பார்ப்பவன்

52.   அல்ஹக்கு الحق – உண்மையாளன்

53.   அல்முபீன் المبين – தெளிவுபடுத்தக்கூடியவன்

54.   அல்லதீப் اللطيف – நுட்பமானவன்

55.   அல்ஹபீர் الخبير – நன்கறிந்தவன்

56.   அல்கரீப் القريب – அருகிலுள்ளவன்

57.   அல்முஜீப் المجيب – பதிலளிப்பவன்

58.   அல்கரீம் الكريم – மிக கண்ணியமானவன், கொடையாளன்

59.   அல்அக்ரம் الأكرم – மிக சங்கையானவன், மிக்க தாராளமானவன்

60.   அல்அலிய்யு العلي – மிக உயர்ந்தவன்

61.   அல்அழீம் العظيم – மிக்க மகத்துவமானவன்

62.   அல்ஹஸீப் الحسيب – போதுமானவன், கணக்கெடுத்து வைத்திருப்பவன், விசாரணை செய்பவன்

63.   அல்வகீல் الوكيل – பொறுப்பாளன்

64.   அஷ்ஷகூர் الشكور – நன்றி செலுத்துபவன்

65.   அல்ஹலீம் الحليم – சகிப்புத்தன்மையுடையவன்

66.   அல்பர் البر – பேருபகாரம் செய்பவன்

67.   அஷ்ஷாகிர் الشاكر – நன்றியுடையவன்

68.   அல்வஹ்ஹாப் الوهاب – கொடையாளன்

69.   அல்காஹிர் ‎القاهر – அடக்கி ஆள்பவன்

70.   அல்கப்பார் الغفار – மிக்க மன்னிப்பவன்

71.   அத்தவ்வாப் التواب – மிக்க மன்னிப்பவன்

72.   அல்பத்தாஹ் الفتاح – பூட்டிய கதவுகளை திறப்பவன், சிறந்த தீர்ப்பாளன், வெற்றியளிப்பவன்

73.   அர்ரஊப் الرءوف – கருணையாளன்

74.   அந்நூர்النور – பிரகாசமாவான்

75.   அல்முகீத் المقيت – கண்காணிப்பவன்

76.   அல்வாஸிஉ الواسع – விசாலமானவன்

77.   அல்வாரிஸு الوارث – உரிமையாளன்

78.   அல்அஃலா الأعلى – மிக உயர்வானவன்

79.   அல்முஹீத் المحيط – சூழ்ந்தறிபவன்

80.   அல்அல்லாம் العلام – மறைவானவற்றை மிக அறிந்தவன்

81.   அல்முஸ்தஆன் المستعان – உதவி தேடப்படுவதற்குரியவன் 

82.   அல்ஹாதி الهادي – நேரான வழியின் பால் செலுத்தக்கூடியன்

83.   அந்நாஸிர் الناصر – உதவி செய்பவன்

84.   அல்ஹல்லாக் الخلاق – அனைத்தையும் படைத்தவன்

85.   அல்அப்வு العفو – பிழை பொறுப்பவன்

86.   அல்ஹாகிம் الحاكم – தீர்ப்பளிப்பவன் 

87.   அல்கனிய்யு الغني – யாதொரு தேவையுமற்றவன்

88.   அல்கபீல் الكفيل – பொறுப்பாளன்.

89.   அல்ஹயிய்யு الحيي – வெட்கப்படுபவன்

90.   அஸ்ஸித்தீர் الستير – மறைப்பதை விரும்புபவன்

91.   அல்முஸக்கிர் المسعر – விலையைத் தீர்மானிப்பவன்

92.   அல்காபிழ் القابض – பற்றிப்பிடிப்பவன்

93.   அல்பாஸித் الباسط – விசாலப்படுத்துபவன்

94.   அர்ராஸிக் الرازق – உணவளிப்பவன்

95.   அல்முகத்திம் المقدم – முற்படுத்துபவன்

96.   அல்முஅஹ்ஹிர் المؤخر – பிற்படுத்துபவன்

97.   அல்கதீர் القدير – அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்தவன்

98.   அஸ்ஸுப்பூஹ் السبوح – அனைத்து விடயங்களை விட்டும் தூய்மையானவன்

99.   அர்ரபீக் الرفيق – மென்மையானவன்

100.   அத்தய்யிப் الطيب – சிறந்தவன்

101.   அல்ஹகம் الحكم – நீதி வழங்குபவன்

102.   அஷ்ஷாபி ‎الشافي – நோய் நிவாரணம் அளிப்பவன்

103.   அல்முஃதி المعطي – கொடுப்பவன்

104.   அல்வதர் الوتر – ஒற்றையானவன்

105.   அத்தபீப் الطبيب – நோய் நிவாரணிகள் பற்றி பூரண அறிவுள்ளவன். 

106.   அல்ஜமீல் الجميل – அழகானவன்

107.   அல்மன்னான் المنان – பெருமைப்படத்தக்க வகையில் வாரி வழங்குபவன்

108.   அஸ்செய்யித் السيد – தலைவன்

109.   அத்தய்யான் الديان – விசாரணை செய்பவன்

110. அல் ஹபீய் الحفي – மிக்க கிருபையாளன் 

111. அல் ஜவாத் الجواد – மிக்க பெருந்தன்மையானவன்

112. அல் முஹ்சின் المحسن  – முழுமையாக நன்மை (மட்டுமே) புரிபவன்

Previous Post Next Post