அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் பற்றிய சரியான அகீதா


தவ்ஹீத் அல்அஸ்மா வஸ்ஸிபாத் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் அணுகுமுறை பற்றிய ஒரு தெளிவு (சுருக்கமாக)

அல்லாஹ்வுடைய அழகான திருநாமங்களையும், உயர்வான பண்புகளையும் கற்கும் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் அணுகுமுறையே சிறந்த, நடுநிலையான அணுமுறையாகும். அல்லாஹ்வுடைய பண்புகளை மறுத்தும், அதற்கு அர்த்தங்களை வழங்காமல் இருந்தோருக்கும், அவற்றை ஏற்றுக்கொள்வதில் எல்லை மீறிச் சென்று, படைப்பாளனின் பண்புகளை குறையுடைய, இயலாமைக்குணம் கொண்ட படைப்புகளின் பண்புகளுடன் ஒப்பிட்டவர்களுக்கும் இடையில் நடுநிலையாக இருக்கும் ஓர் அணுகுமுறையாகும்.

இவ்வணுகுமுறை உறுதியான சில அத்திவாரங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. யார் அவற்றைப் பற்றிப் பிடிக்கின்றாரோ, அவர் வழிகேட்டின் பக்கங்களை விட்டும் அல்லாஹ்வின் உதவி கொண்டு தப்பித்துக்கொள்வார். இமாம் ஷன்கீதீ (ரஹ்) அவர்கள் அவற்றை தமது பெறுமதிமிக்க நூலாகிய, ‘மன்ஹஜு திராஸதில் அஸ்மாஇ வஸ்ஸிபாத்’ எனும் நூலில் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள். 

பின்வருமாறு அவர்கள் கூறுகின்றார்கள்: 
‘அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வுடைய பண்புகள் பற்றிய வசனங்கள் பற்றி ஆழமாக ஆராய்வதும், அவை பற்றி அதிக கேள்விகள் கேட்பதும் ஸலபுகள் வெறுத்த பித்அத்களில் உள்ளனவாகும்.

மேலும் அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வுடைய பண்புகள் பற்றிய தலைப்பு மூன்று அடிப்படைகள் மீது நிறுவப்பட்டிருக்கின்றது என்பதை அல்குர்ஆன் உணர்த்திக்கொண்டிருக்கின்றது. யார் அவையனைத்தையும் ஏற்றக்கொள்கின்றாரோ, அவர் சத்தியத்த அடைந்துவிட்டார். நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும், முன்சென்ற நல்லமக்களும் இருந்த கொள்கையை அடைந்துவிட்டார். இந்த மூன்று அடிப்படைகளில் ஒன்றையேனும் யாராவது தவறவிட்டால் அவர் வழிதவறி விடுவார்.

1. அல்லாஹ்வுடைய பண்புகளில் எந்தவொன்றும் அவனது படைப்புக்களின் எந்தப் பண்புகளுக்கும் ஒப்பாகமாட்டாது என தூய்மைப்படுத்தல். இந்த அடிப்படையை பின்வரும் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

‘அல்லாஹ்வைப் போன்று எந்தவொன்றும் இல்லை’,
‘மேலும் அவனுக்கு நிகராக யாரும் இல்லை’ , 
‘அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறாதீர்கள்’
(அல்குர்ஆன்)

2. அல்லாஹ் தன்னைப் பற்றி வர்ணித்திருப்பவற்றை ஈமான் கொள்ளுதல். ஏனெனில், அல்லாஹ்வை அவனை விட அறிந்து, வர்ணிப்பவர்கள் யாரும் கிடையாது. 

‘நீங்களா அறிந்தவர்கள்? அல்லது அல்லாஹ்வா?’ (அல்குர்ஆன்)

மேலும், அவனுடைய தூதர் அவனைப் பற்றி வர்ணித்திருப்பவற்றை ஈமான் கொள்வது. ஏனெனில் அல்லாஹ்விற்கு அடுத்தாக அவனது வர்ணனைகளை அதிகம் அறிந்தவர் நபி (ஸல்) அவர்களே! 

அவரைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான், ‘மேலும் அவர் தன் மனோஇச்சைப் பிரகாரம் பேசமாட்டார். அது அறிவிக்கப்படும் வஹியாகவே அன்றி வேறில்லை’ (ஸூரா அந்நஜ்ம் : 3,4)

எனவே, ஒவ்வொரு மனதினும் அல்லாஹ் அல்லது அவனது தூதர் அவர்கள் அவனைப் பற்றி வர்ணித்தவற்றை ஈமான் கொள்வதும், அவனது பண்புகளை படைப்புக்களின் பண்புகளுடன் ஒப்பிடாமல் தூய்மைப்படுத்துவதும் கட்டாயமாகும். 

யாராவது வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த அல்லாஹ்வின் ஏதாவதொரு பண்பு படைப்புக்களின் பண்புகளுக்கு ஒப்பாகும் என நினைத்தால் அவன் ஓர் அறிவற்ற மனநோயாளி அல்லது வழிகெட்ட இறைமறுப்பாளனே! 

யார் தனது ரப்புடைய பண்புகளை படைப்புக்களின் பண்புகளுடன் ஒப்பிடாமல் தூய்மைப்படுத்தியவனாக ஈமான் கொள்கின்றானோ, அவனே ஒப்பாக்குதல், மறுத்தல் போன்ற வழிகேடுகளிலிருந்து ஈடேற்றம் பெற்ற, தூய்மைப்படுத்தும் முஃமினாகும். 

இந்த மிகச் சரியான கருத்தையே ‘அவனைப் போன்று எதுவும் இல்லை. மேலும், அவனே கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்’ என்ற வசனம் உள்ளடக்கியுள்ளது. 

இவ்வசனத்தில் அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் விதமான, இவ்விகாரத்துடன் தொடர்புபட்ட அனைத்து அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் வழங்கும் விதமான மகத்தான போதனைகள் உண்டு. 

ஏனெனில் அல்லாஹ் தஆலா, ‘அவனைப் போன்று எந்தவொன்றும் இல்லை’ என்று கூறியதன் பின்னர், ‘மேலும், அவனே அதிகம் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்’ என்று கூறுகின்றான்.

3. அல்லாஹ்வுடைய பண்புகளின் விதங்கள் பற்றிய யதார்த்தங்களை புரிந்துகொள்ள முனையாமல் இருப்பது. ஏனெனில் அந்த யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதென்பத முடியாத ஒன்றாகும். 

அதனை அல்லாஹ் ஸூரா தாஹாவில் தொளிவாகக் கூறுகின்றான். ‘அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், பின்னால் இருப்பவற்றையும் அவன் அறிவான். அவர்கள் அவனை முழுமையாக சூழ்ந்தறியமாட்டார்கள். 

(பார்க்க : மன்ஹஜு திராஸதில் அஸ்மா வஸ்ஸிபாத்)

- சுவனப்பாதை
Previous Post Next Post