தவ்ஹீதின் மிகப்பெரும் சிறப்புகளும் மற்றும் அதனுடைய மகத்தான பலன்களும் (فضل التوحيد للسعدي)

 - அஷ்ஷைஃக் அப்துர் ரஹ்மான் பின் நாஸிர் அஸ்-ஸஅதி (ரஹீமஹுல்லாஹ்)


ومـن فضائله : أنه السبب الأعظم لتفريج كربات الدنيا والآخرة ، ودفع عقوبتهما :
1. அதன் சிறப்புகளிலிருந்து உள்ளதாவது: இம்மை மற்றும் மறுமையின் துன்பங்கள் அகற்றப்படுவதற்கும், அவ்விரண்டின் தண்டனைகள் தடுக்கப்படுவதற்கும், அதுவே மிகப்பெரும் காரணியாகும்.

ومن أجل فوائده : أنه يمنع الخلود في النار إذا كان في القلب منه أدنى مثقال حبة خردل .وأنه إذا كمل في القلب يمنع دخول النار بالكلية .
2. அதன் மகத்தான பயன்களிலிருந்து உள்ளதாவது: (ஒருவரின்) உள்ளத்தில் கடுகின் வித்தளவு (அத்)தவ்ஹீத் இருக்குமேயானால் அவர் நரகத்தில் நிரந்தரமாக (தங்கிவிடுவதை) விட்டும் அது தடுக்கும். அதுவே உள்ளத்தில் பரிபூரணம் அடையுமெனில் நரகத்தில் (அவர்) நுழைவதை விட்டும் முற்றிலுமாக தடுத்துவிடும்.

ومنها : أنه يحصل لصاحبه الهدى الكامل، والأمن التام في الدنيا والآخرة .
3. மேலும் (அதன் சிறப்புகளிலிருந்து) உள்ளதாவது: தவ்ஹீதை உடையவருக்கு, இம்மை மற்றும் மறுமை (என ஈருலகிலும்) பரிபூரணமான நேர்வழியும், முழுமையான பாதுகாப்பும் கிடைக்கும்.
 
ومنها : أنه السبب الوحيد لنيل رضا الله وثوابه، وأن أسعد الناس بشفاعة محمد ﷺ من قال : لا إله إلا الله خالصاً من قلبه
4. மேலும் (அதன் சிறப்புகளிலிருந்து) உள்ளதாவது: அதுவே அல்லாஹ்வின் திருப்பொருத்தம் மற்றும் அவனது (நற்)கூலியை அடைவதற்குறிய  ஒரே காரணியாகும்.
(மறுமையில்) நபியவர்களின் ﷺ பரிந்துரைக்கு மக்களிலிருந்து மிகவும் பாக்கியமானவர், "லாயிலாஹ இல்லல்லாஹ்" (வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற கலிமாவை) தனது உள்ளத்திலிருந்து இஃக்லாஸ் (மனத்தூய்மை) உடன் கூறியவர்தான்.

ومن أعظم فضائله : أن جميع الأعمال والأقوال الظاهرة والباطنة متوقفة في قبولها وفي كمالها وفي ترتـب الـثـواب عليها ـ على التوحيد ، فكلما قوي التوحيد والإخلاص لله كملت هذه الأمور وتمت .
5. அதன் மாபெரும் சிறப்புகளிலிருந்து உள்ளதாவது: எல்லா வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான செயல்கள் மற்றும் சொற்கள் யாவும் ஏற்கப்படுவதும், அவை பரிபூரணமடைவதும், அதன் மூலம் கூலி கிடைப்பதும் தவ்ஹீதைச் சார்ந்தே உள்ளது. எனவே, எப்போதெல்லாம்
(ஒருவரிடத்தில்) தவ்ஹீதும், அல்லாஹ்விற்காக இஃக்லாஸ் (என்னும் மனத்தூய்மையும்) வலுவடையுமோ, அப்போதெல்லாம் (மேற்கூறிய) இவ்விடயங்கள் யாவும் முழுமையும், பரிபூரணமும் அடைகின்றன.

ومن فضائله : أنه يسهل على العبد فعل الخير ، وترك المنكرات ، ويسليه عن المصيبات ، فالمخلص لله في إيمانه وتوحيده تخف عليه الطاعات ؛ لما يرجو من ثواب ربه ورضوانه، ويهون عليه ترك ما تهواه النفس من المعاصي؛ لما يخشى من سخطه وعقابه .
6. மேலும் அதன் சிறப்புகளிலிருந்து உள்ளதாவது: ஒரு இறையடியானுக்கு (தவ்ஹீதின் உறுதியின் காரணமாக) நன்மைகளைச் செய்வதும், தடுக்கப்பட்டவைகளைக் கைவிடுவதும் எளிதாகிவிடும். மேலும், (இந்த கலிமா) முஸீபத்களின்போது (சோதனைகளின்போது) ஆறுதலாகவும் அவனுக்கு அமையும். தன்னுடைய ஈமானிலும், தவ்ஹீதிலும் அல்லாஹ்விற்கு உளத்தூய்மையுடன் இருப்பவருக்கு அவர் தனது இறைவனின் நற்கூலி மற்றும் திருப்பொருத்தத்தை ஆதரவு வைப்பதால் நன்மைகள் (செய்வது) இலகுவாகிவிடும். மேலும், அவர் தனது இறைவனின் கோபம் மற்றும் தண்டனையை அஞ்சுவதால், பாவங்களிலிருந்து அவரது நஃப்ஸ்(உள்ளம்) விரும்புபவற்றைக் கைடுவிடுவதும் எளிதாகிவிடும்.

ومنها : أن التوحيد إذا كمل في القلب حبب الله لصاحبه الإيمان وزينه في قلبه، وكره إليه الكفر والفسوق والعصيان، وجعله من الراشدين .
7. மேலும் (அதன் சிறப்புகளிலிருந்து) உள்ளதாவது: தவ்ஹீத் ஒருவரது உள்ளத்தில் முழுமையடைந்துவிட்டால், அவருக்கு அல்லாஹ் ஈமானைப் பிரியமானதாக்கி அதனை அவரது உள்ளத்தில் அழகாக்கி விடுவான். இறைநிராகரிப்பு, பாவம் மற்றும் (அல்லாஹ் மற்றும் அவனது தூதருக்கு) மாறு செய்வதை வெறுப்பானதாக்கி விடுவான். மேலும் அவரை நேர்வழிபெற்றவர்களிலிருந்து (ஒருவராகவும்) ஆக்கி விடுவான்.

ومنها : أنـه يخفـف عـن العـبـد المـكـاره، ويهون عليـه الآلام، فبحسب تكميل العبد للتوحيد والإيمان يتلقى المكاره والآلام بقلب منشرح ، ونفس مطمئنة، وتسليم ورضا بأقدار الله المؤلمة .
8. மேலும் (அதன் சிறப்புகளிலிருந்து) உள்ளதாவது: (அல்லாஹ் விதித்ததினால் ஏற்படும்) கடினமான விடயங்களை ஒரு அடியானுக்கு எளிதாக்கிவிடும். வலிகளை அவனுக்கு இலகுவாக்கிவிடும். ஒரு அடியான் (தனது) தவ்ஹீத் மற்றும் ஈமானைப் பரிபூரணப்படுத்துவதிற்கேற்ப அவன் கடினமான (விடயங்களையும்), வலிகளையும் பரந்த உள்ளத்துடனும், அமைதியடைந்த மனதோடும் ஏற்றுக்கொள்வார். மேலும் வேதனை தரக்கூடிய அல்லாஹ்வுடைய விதிகளை ஏற்றுக்கொள்வதும், அவற்றைப் பொருந்திக்கொள்வதும் (இவரிடம்) ஏற்படும்.

ومن أعظم فضائله : أنه يحرر العبد من رق المخلوقين، والتعلق بهم، وخـوفـهـم ورجـائهـم، والعمـل لأجلهـم، وهـذا هـو العـز الحقيقي والشرف العالي . ويكون مع ذلك متألها متعبداً لله، لا يرجو سواه، ولا يخشى إلا إياه ، ولا ينيب إلا إليه، وبذلك يتم فلاحه، ويتحقق نجاحه .
9. மேலும் அதன் மாபெரும் சிறப்புகளிலிருந்து உள்ளதாவது: படைக்கப்பட்டவர்களுக்கு அடிமைப்பட்டிருத்தல், அவர்களைச்  சார்ந்திருத்தல், அவர்களை அஞ்சுதல், அவர்கள் மீது ஆதரவு வைத்தல், அவர்களுக்காக அமல்கள் செய்தல் ஆகியவற்றிலிருந்து ஒரு இறையடியானுக்கு விடுதலையளிக்கும். இது தான் உண்மையான கண்ணியமும், உயர்ந்த மகிமையுமாகும். அத்தோடு அல்லாஹ்வை (மட்டுமே) வணங்குபவராக அவனுக்கு (மட்டுமே) அடிமையானவராக ஆகிவிடுவார். அவனைத் தவிர வேறு யாரின் மீதும் ஆதரவு வைக்க மாட்டார். அவனைத் தவிர வேறு யாரையும் அஞ்ச மாட்டார். அவனைத் தவிர வேறு யாரை நோக்கியும் மீளமாட்டார். இதனைக் கொண்டு அவரது வெற்றி பரிபூரணம் அடைகிறது. மேலும் அவரது வெற்றி உறுதியாகிறது.

ومن فضائله التي لا يلحقه فيها شيء: أن التوحيد إذا تم وكمل في القلب وتحق تحققاً كامـلاً بالإخلاص التام - فإنه يصير القليل من عمله كثيراً، وتضاعف أعماله وأقواله بغير حصر ولا حساب، ورجحت كلمة الإخلاص في ميزان العبد، بحيث لا تقابلها السموات والأرض، وعمارها من جميع خلق الله،
10. இதன் தன்னிகரற்ற சிறப்புகளிலிருந்து உள்ளதாவது: (ஒருவரின்) உள்ளத்தில் தவ்ஹீத் முழுமையும் பரிபூரணமும் பெற்று, நிறைவான இஃக்லாஸுடன் முழுமையான உறுதிபெற்றால் நிச்சயமாக அவரது சிறிய அளவு அமல்கள் கூட (கூலியில்) அதிக அளவாக ஆகிவிடும். இவரது நற்செயல்களும், நற்சொற்களும் வரையறை மற்றும் கணக்கின்றி பண்மடங்காக்கப்படும். மேலும் வானங்கள், பூமி மற்றும் அவற்றில் வாழும் அல்லாஹ்வின் அனைத்து படைப்பினங்களாலும் ஈடு கொடுக்கமுடியாதளவிற்கு இந்த இஃக்லாஸுடைய கலிமாவானது இறையடியானின் தராசில் கனமாகிவிடும்.
     
[وعن أبي سعيد الخدري رضي الله عنه، عـن رسول اللہ ﷺ قال : «قال موسى علیه السلام : يا رب علمني شيئا أذكرك وأدعوك به
ரஸூலல்லாஹ் ﷺ கூறியதாக அபூ ஸயீத் அல் ஃகுத்ரீ رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
மூஸா நபி அவர்கள் "என் இறைவா! உன்னை நினைவு கூர்வதற்கும் மேலும் உன்னை அழைத்து துஆ செய்வதற்கும் ஒன்றை எனக்குக் கற்றுக் கொடு" எனக் கூறினார்கள்.

قال : قل يا موسى لا إله إلا الله
(அதற்குப் பதிலாக அல்லாஹ்) "மூஸாவே 'லாயிலாஹ இல்லல்லாஹ்' எனக் கூறுங்கள்" என்று கூறினான்.

قال : يا رب كل عبادك يقولون هـذا .
"என் இறைவா! உன் அடியார்கள் அனைவருமே இதனைக் கூறுகின்றார்களே" என (மூஸா அலைஹிஸ் ஸலாம் பதில்) கூறினார்கள்.

قال : يا موسى لـو أنّ السّموات السبع وعـامرهن غيري والأرضين السبع في كفة، ولا إله إلا الله في كفة، مالت بهنّ لا إله إلا الله»
"மூஸாவே! ஏழு வானங்கள், என்னைத் தவிர அவற்றில் வாழுகின்றவை மேலும் ஏழு பூமிகளையும் (தராசின்) ஒரு தட்டிலும்' லாயிலாஹ இல்லல்லாஹ் ' (என்ற கலிமாவை மற்றொரு) தட்டிலும் வைத்தால், 'லாயிலாஹ இல்லல்லாஹ்' அவற்றை (கனத்தில்) மிகைத்துவிடும்" என (அல்லாஹ்) கூறினான்.
 
رواه ابن حبان و الحاكم.
இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் இதனை அறிவித்துள்ளார்கள்.

[குறிப்பு: இந்த ஹதீஸின் சங்கிலித் தொடர் குறித்து உலமாக்கள் இருவேறு கருத்து கொண்டுள்ளனர். அவ்விருகருத்துகளில் சரியானது : இந்த ஹதீஸின் சங்கிலித் தொடர் பலவீனமானது என்ற கூற்றாகும், என்றாலும் இந்த ஹதீஸில் வந்துள்ள பொருளானது மற்றொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது].

மேலும் லாயிலாஹ இல்லல்லாஹ் (என்ற கலிமாவைக்) கொண்டுள்ள சிற்றேட்டின் ஹதீஸில் உள்ளது போல், அந்தத் சிற்றேடானது பாவங்களைக் கொண்ட தொன்னூற்று ஒன்பது சுருள்களை கணத்தால் மிகைத்தது. அவ்வொவ்வொரு சுருளும் கண்ணுக்கெட்டிய தூரம் அளவு நீண்டிருந்தது.

 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّ اللَّهَ سَيُخَلِّصُ رَجُلًا مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الخَلَائِقِ يَوْمَ القِيَامَةِ
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய  உம்மத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக அல்லாஹ் நிறுத்துவான்.

 فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ البَصَرِ،
அவனுக்கு எதிராகத் (பாவங்களால் நிரம்பிய) தொன்னூற்று ஒன்பது சுருள்களை விரிப்பான். அவற்றிலிருந்து ஒவ்வொரு சுருளும் பார்வைக்கு எட்டிய தொலைவின் அளவிற்கு இருக்கும்

 ثُمَّ يَقُولُ: أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا؟ أَظَلَمَكَ كَتَبَتِي الحَافِظُونَ؟ فَيَقُولُ:  لَا يَا رَبِّ،
பிறகு அல்லாஹ் "இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது அமல்களைக்) குறித்து வைத்துக் கொள்ளக்கூடிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா?" என்று கேட்பான். "என்னுடைய இரட்சகனே! இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்)" என்று அவன் கூறுவான்.

 فَيَقُولُ: أَفَلَكَ عُذْرٌ؟ فَيَقُولُ: لَا يَا رَبِّ،
 "(நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?"  என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் "என் இரட்சகனே! ஏதுமில்லை" என்று கூறுவான்.

 فَيَقُولُ: بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً، فَإِنَّهُ لَا ظُلْمَ عَلَيْكَ اليَوْمَ،
அப்போது அல்லாஹ் கூறுவான்: "அவ்வாறில்லை. உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது. இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது "

 فَتَخْرُجُ بِطَاقَةٌ فِيهَا: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ،
அப்பொழுது ஒரு சிற்றேடு கொண்டுவரப்படும். அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் மேலும் முஹம்மது ﷺ அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா (எழுதப்பட்டு) இருக்கும். 

 فَيَقُولُ: احْضُرْ وَزْنَكَ، فَيَقُولُ: يَا رَبِّ مَا هَذِهِ البِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلَّاتِ،
 فَقَالَ: إِنَّكَ لَا تُظْلَمُ “،
"நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார்" என்று அல்லாஹ் கூறுவான். "என்னுடைய இரட்சகனே (இந்த பாவச்) சுருள்களுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (செய்துவிடும்?)", என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் "உறுதியாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்", என்று கூறுவான்.

 قَالَ: «فَتُوضَعُ السِّجِلَّاتُ فِي كَفَّةٍ وَالبِطَاقَةُ فِي كَفَّةٍ، فَطَاشَتِ السِّجِلَّاتُ وَثَقُلَتِ البِطَاقَةُ، فَلَا يَثْقُلُ مَعَ اسْمِ اللَّهِ شَيْءٌ»
பின்னர் அந்தப் பாவச் சுருள்கள் (தராசின்) ஒரு தட்டிலும், அந்தச் சிற்றேடு மறு தட்டிலும் வைக்கப்படும். அப்பொழுது அந்தப் பாவச் சுருள்கள் கனமிழந்து, அந்தச் சிற்றேடானது கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட (வேறு) எதுவும் கனத்து விடாது என நபி ﷺ கூறினார்கள்].
(ஸஹீஹ் சுனன் அத்திர்மிதீ, அல்பானி)

وذلك لكمال إخلاص قائلها. وكم ممن يقـولهـا لا تبلغ هـذا المبلغ ؛ لأنه لم يكن في قلبـه مـن الـتـوحـيـد والإخلاص الكامل مثل ولا قريب مما قام بقلب هذا العبد .
அதற்குக் காரணம், (அந்த கலிமாவை) மொழிந்தவருடைய இஃக்லாஸின் பரிபூரணமே ஆகும். இதைக் கூறக்கூடிய எத்தனையோ பேர்களுக்கு (அந்த கலிமாவானது) இந்தளவு (கனத்தை) அடைவதில்லை. ஏனென்றால், அந்த இறையடியாரின் உள்ளத்தில் இருந்த (இஃக்லாஸிற்கு) இணையாகவோ அல்லது நெருக்கமாகவோ, இவர்(களு)டைய உள்ளத்தில் தவ்ஹீதிலிருந்தும், பரிபூரணமான இஃக்லாஸிலிருந்தும் இருக்கவில்லை.

ومن فضائل التوحيد : أن الله تكفل لأهله بالفتح والنصر في الدنيا والعز والشرف وحصول الهداية والتيسير لليسرى، وإصلاح الأحوال، والتسديد في الأقوال والأفعال .
11. மேலும் (அத்)தவ்ஹீதின் சிறப்புகளிலிருந்து உள்ளதாவது: அதனுடைய (தவ்ஹீதை உடைய) மக்களுக்கு இவ்வுலகில் வெற்றி, உதவி, கண்ணியம், மேன்மை, நேர்வழி கிடைத்தல், சொர்க்கத்தின் பாதையை இலகுவாக்கிவிடுதல், (அவர்களின்) நிலைகளை ஒழுங்குபடுத்துதல், (அவர்களின்) சொற்கள் மற்றும் செயல்களைச் சீர்படுத்துதல் ஆகியவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொள்வான்.

 ومنها : أن الله يدافع عن الموحدين أهل الإيمان شرور الدنيا
والآخرة ، ويمن عليهم بالحياة الطيبة، والطمأنينة إليه، والطمأنينة بذكره،
12. மேலும் அதிலிருந்து (தவ்ஹீதின் சிறப்புகளிலிருந்து) உள்ளதாவது: தவ்ஹீதின் மக்களாகிய ஈமான் பெற்றவர்களை இம்மை மற்றும் மறுமையின் தீங்குகளிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பான். மேலும் நல்ல வாழ்க்கை, அல்லாஹ்வை நோக்கி (திரும்பி, அவனது ஷரீஅத்திற்கு கீழ்படிந்து, அவனை அதிகமாக நினைவு கூறும்போது...) அமைதி அடைதல், அவனை நினைவுகூர்தலைக் கொண்டு (உள்ளம்) அமைதி அடைதல் ஆகியவற்றை அவர்கள் மீது வாரி வழங்குவான்.

وشواهد هذه الجمل من الكتاب والسنة كثيرة معروفة . والله أعلم
இங்குள்ள (இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) வாக்கியங்களுக்கு குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்விலிருந்து ஆதாராங்களாவது அதிகமானதும் பிரபலியமானதும் ஆகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
أحدث أقدم