ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க யுத்தத்தில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும்?

அரபுகளின் கலாசாரத்திற்காக ஈரானை ஆதரிப்பிதாக கூறுவீர்களாயின் ஷீயாக்களின் கலாசாரம் அதைவிட மிக மோசமானது என்பதை முதலில் நினைவிற் கொள்ளுங்கள்.

தமது நாட்டின் பாதுகாப்பிற்காக அமெரிக்காவுடன் அரபு நாடுகள் நிற்பது அடிமைத்துவமாயின் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் ஈரான் நிற்பதும் அடிமைத்துவம் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இஸ்ரேலுடன் அரபுநாடுகளை ஒப்பிட்டு பேசுவதற்கு முன்னர் இஸ்ரேல் குறித்த அரபு நாடுகளின் கொள்கையை படியுங்கள். அப்போது அது அவதூறு என்பது புரியும். அத்தோடு ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமான வரலாற்றுத் தொடர்புகளைப் படியுங்கள். ஈரானின் இரட்டை வேடம் புரியும்.

அரபு நாடுகளின் கலாசார சீரழிவிற்கு அமெரிக்கா, இஸ்ரேலும் காரணிகள்தான் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அது சவூதியை மட்டுமல்ல பேசிக் கொண்டிருக்கும் எம் சூழல்வரை தாக்கம் செலுத்தியுள்ள விடயமாகும். ஆனால் அமெரிக்காவை வலைகுடாவுக்குள் பாதுகாப்புப் படையாக கொண்டுவரக் காரணமே ஈரானின் அகண்ட பாரசீகம் எனும் சதிதான் என்பதை நீங்கள் நடுநிலையாளராயின் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என்பவற்றில் ஈரான் பரவாயில்லை என்பதற்காக ஈரானின் பக்கம் நிற்பதாக கூறுவீர்களாயின், பல நபித் தோழர்களை முர்ததாக்கி, நபிகளாரின் மனைவியரான எமது அன்னையரை மிகவும் கேவலமாக சித்தரித்து, கலீபாக்களை நரகவாதிகளாக்கி, நபித்துவத்தை கேள்விக் குறியாக்கும் வழிகெட்ட கொள்கையை தன்னகத்தே கொண்ட ஷீயாக்களைவிட அரபு நாடுகளை ஆதரிப்பதுதான் ஒரு முஸ்லிமின் ஈமானுக்கு நெருக்கமானது என்பதை புரிந்துகொள்ள முயலுங்கள்.

ஈரானை அமெரிக்கா வேண்டுமென்றே வம்புக்கிழுத்தது. எனவே நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக ஈரானின் பக்கம் நிற்கிறோம் என்று கூறுகிறீர்கள். ஈரானை அமெரிக்கா முதலில் தாக்கியதை அரபு நாடுகள்கூட ஆதரிக்கவில்லையே. அரபு நாடுகள் தமது நிலத்தையோ வான் பரப்பையோ கடல் பரப்பையோ ஈரானுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்காவுக்கு தடை விதித்தனவே. இவ்வகையில் உங்கள் நிலைப்பாடு சரியாயின் அதே நிலைப்பாட்டை எடுத்திருந்த அரபு நாடுகள் பிழையாவது எவ்வாறு? அவ்வாறிருந்தும் அரபு நாடுகளை ஈரான் தொடர்ந்து தாக்கியது ஏன்? சில நேரங்களில் எமது இரானுவ படைகளுக்குள் தகவல் பரிமாற்றத் தவறு ஏற்பட்ட காரணத்தால் அரபு நாடுகள் தவறுதலாகத் தாக்கப் பட்டன என்று ஈரான் ஜனாதிபதி பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் மீண்டும் தாக்குவது ஏன்? இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் வயலை தாக்கினால் அதற்குப் பலிவாங்குவதாக ஈரான் அரபு நாடுகளின் எண்ணெய் கிணறுகளை தாக்க வேண்டுமா இஸ்ரேலின்மீது கடுமையான தாக்குதல் நடத்த வேண்டுமா? அப்படியிருந்தும் மிகக் குறைந்தளவு தாக்குதலை இஸ்ரேல்மீது நடத்தும் ஈரான் சண்டைக்கு சம மந்தமில்லாத அரபு நாடுகளை தாக்குவதுதான் நீதியா? அடித்தவனை விட்டுவிட்டு சம்மந்தமில்லாதவனுக்கு அடிப்பவனுக்கு சார்பாக இருப்பது நீதியின் பக்கம் நிற்றல் எனும் வட்டத்திற்குள் எவ்வாறு  வரும்?

எனவே ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் மூன்றும் ஒரே சாக்கடைகளேயன்றி வெவ்வேறல்ல என்பதே எனது நிலைப்பாடு. இம்மூன்று கயவர்களும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஆபத்தானவர்களே என்பதை வரலாறு பாடம் கற்றுத் தருகிறது. 

ஈரான் இஸ்ரேல் போரின் போர்வையில் ஷீயாயிச விசத்தை வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் இந்த உம்மத்தின் உள்ளத்தல் ஏற்றி ஈமானை மரிக்கச் செய்வதை என் சக்திக்குற்பட்டவரை தடுத்தேன் என்பதற்கு இவ்வெழுத்துக்களும் மஹ்ஷரில் சாட்சிகளாகட்டும். கசப்பாயினும் உண்மையை பேசுமாறே எனது தலைவர் எனக்கு கற்றுத் தந்துள்ளார். அந்த அருமை, உண்மைத் தலைவரின் மார்க்கத்தையும் துணைவியரையும் கேவலமாக சித்தரிக்கும் வழிகெட்ட ஷீயாக்களும் யூதர்களும் அமெரிக்காவும் என் பார்வையில் நிகரானவர்களே. இவர்களின் அட்டூளியங்களை விட்டு மனித சமூகத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக.

அரபுகளுக்குள்ளும் அனைத்து நாடுகளுக்குள்ளும் புகுந்துள்ள யூத கலாசாரங்களை விட்டும் உம்மத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக.
அல்லாஹ்வே மிக அறிந்தவன். அவனே அனைத்திற்கும் போதுமானவன்.

அபூ ஸுமையா

Previous Post Next Post