ஒரு முஸ்லிம் வலதை முற்படுத்த வேண்டிய 20 சந்தர்ப்பங்கள்

بسم الله الرحمن الرحيم


1. கடமையான குளிப்பின் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது ஹிலாப் பாத்திரம் போன்ற ஒன்றை கொண்டு வரச் செய்து அதிலிருந்து தங்களின் கையில் அள்ளித் தங்களின் தலையின் வலப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் இடப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் இரண்டு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்.
ஸஹீஹுல் புஹாரி : 258

2. ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளைக் குளிப்பாட்டும் போது, 'அவரின் வலப்புறத்திலிருந்தும் வுழூச் செய்ய வேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பியுங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 
ஸஹீஹுல்  புஹாரி : 1255

3. ஆடை அணியும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஆடை அணியும் போதும் வுழூச் செய்யும் போதும் உங்களது வலதால் ஆரம்பியுங்கள்.
அபூதாவூத் : 4141

4. வுழூச் செய்யும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஆடை அணியும் போதும் வுழூச் செய்யும் போதும் உங்களது வலதால் ஆரம்பியுங்கள்.
அபூதாவூத் : 4141

5. தொழுகையில் தக்பீர் கட்டும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் நுழைந்த போது இடது கையின் மீது வலது கையை வைத்து தக்பீர் கட்டினார்கள். 
ஸஹீஹ் முஸ்லிம் : 923

6. தொழுகையில் ஸலாம் கொடுக்கும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தொழுகையை முடிக்கும்போது) வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் (முகத்தைத் திருப்பி) சலாம் கூறுவார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1343

7. ஒருவரோடு ஜமாஅத்தாக தொழும் போது

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுமா அறிவித்தார் : என்னுடைய சிறிய தாயார் (மைமூனா ரழியல்லாஹுஅன்ஹா) வீட்டில் நான் இரவு தங்கினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் எழுந்து தொழலானார்கள். அவர்களோடு நானும் தொழுவதற்காக அவர்களின் இடப்பக்கம் நின்றேன். அப்போது (தொழுகையில் நின்றவாறே) என் தலையைப் பிடித்து அவர்களின் வலப்பக்கம் நிறுத்தினார்கள்.
ஸஹீஹுல்  புஹாரி : 699.

8. தொழுகை வரிசையில் நிற்கும் போது

பராஉ இப்னு ஆஸிப் ரழியல்லாஹுஅன்ஹு  அவர்கள் கூறினார்:
நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப் பக்கம் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1676

9. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது

அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு கூறினார்: பள்ளிவாசலுக்குள் நுழையும் போது வலது காலை முதலில் வைப்பதும், பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது இடது காலை முதலில் வைப்பதும் நபிவழியாகும். 
முஸ்தத்ரகுல் ஹாகிம் : 1/218

10. உண்ணும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும், பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான், இடக் கையால்தான் பருகுகிறான். 
ஸஹீஹ் முஸ்லிம் : 5384

11. பருகும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும், பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான், இடக் கையால்தான் பருகுகிறான். 
ஸஹீஹ் முஸ்லிம் : 5384

12. உணவு மற்றும் பானத்தை பரிமாறும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தண்ணீர் கலந்த பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களுக்கு வலப்பக்கம் கிராமவாசி ஒருவரும் இடப்பக்கம் அபூ பக்ர் ரழியல்லாஹுஅன்ஹு அவர்களும் இருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அந்தப் பாலை) பருகி விட்டுப் பிறகு (மிச்சத்தை) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டார்கள். மேலும், 'வலப் பக்கம் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)' என்று கூறினார்கள்.
ஸஹீஹுல் புஹாரி : 5619

13. முடி வாரும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.
ஸஹீஹுல்  புஹாரி : 168

14. முடி வெட்டும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜில்) மினாவிற்குச் சென்ற போது, (முதலில்) ஜம்ரத்துல் அகபாவிற்குச் சென்று கற்களை எறிந்தார்கள். பின்னர் மினாவிலிருந்த தமது கூடாரத்திற்கு வந்து அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் வலப்பக்கத்தையும் பின்னர் இடப்பக்கத்தையும் காட்டி, "எடு" என்றார்கள். பிறகு அந்த முடியை மக்களிடையே விநியோகிக்க (உத்தரவிடலா)னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 3212

15. காலணி அணியும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 
 நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள், அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!
ஸஹீஹுல் புஹாரி : 5855

16. உறங்கும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 
நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக வுழூச் செய்வது போன்று வுழூச் செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து உறங்கு.
ஸஹீஹுல் புஹாரி : 6311

17. ஒரு பொருளை பிறரிடமிருந்து எடுக்கும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களிர் ஒருவர் எடுக்கும் போது வலக்கரத்தால் எடுக்கட்டும். கொடுக்கும் போதும் வலக்கரத்தால் கொடுக்கட்டும்.
இப்னுமாஜா : 3266

18. பிறருக்கு ஒரு பொருளை கொடுக்கும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களிர் ஒருவர் எடுக்கும் போது வலக்கரத்தால் எடுக்கட்டும். கொடுக்கும் போதும் வலக்கரத்தால் கொடுக்கட்டும்.
இப்னுமாஜா : 3266

19. நோயாளிக்கு ஓதிப்பார்த்து அவரைத் தடவும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் துணைவியார்) ஒருவருக்காகப் பாதுகாப்புக் கோரித் தம் வலக் கையால் அவரை தடவிக் கொடுத்து, 'அத்ஹிபில் பஃஸ், ரப்பன்னாஸ்! வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக - ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' என்று கூறுவார்கள். 
ஸஹீஹுல் புஹாரி : 5750

20. நல்ல காரியங்களைச் செய்யும் போது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.
ஸஹீஹுல்  புஹாரி : 168


-அஸ்கி அல்கமி
Previous Post Next Post