அகீதாவைத் தொலைத்துவிட்டு அரசியல் வெற்றியா?

மத்திய கிழக்கில் யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள இந்தத் தருணத்தில், இணையத்தளம் முழுவதும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. குறிப்பாக ஈரானியத் தலைவர் அலி கொமேனியின் மரணம் மற்றும் இஸ்ரேல் - ஈரானின் தாக்குதல்கள் குறித்த செய்திகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.

இந்தச் சூழலில், சமூக வலைத்தளங்களில் பலரும் உணர்ச்சிவசப்பட்டு, வரலாற்றையும் மார்க்கத்தின் அடிப்படைகளையும் மறந்து பதிவிடுவதைக் காண முடிகிறது. இஸ்ரேலை எதிர்க்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளுக்கே (அகீதா) மாற்றமான கொள்கை கொண்டவர்களை "ஷஹீத்" என்றும், "இஸ்லாத்தின் பாதுகாவலர்கள்" என்றும் கொண்டாடுவது எத்துணை பெரிய அறியாமை...

அகீதாவும் அரசியலும் வேறுவேறா?

இன்று பலரும் சொல்லும் ஒரு வாதம்: "அகீதாவைத் தனியாக வையுங்கள், இது அரசியல் நேரம். ஷீஆக்களாக இருந்தாலும் சுன்னி தலைவர்களை விட இவர்கள் வீரமிக்கவர்கள். இவர்கள் இஸ்லாத்திற்காக போராடுபவர்கள்." போன்ற மடத்தனமான வாதங்களை முன்வைக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானதொரு போக்காகும். இஸ்லாத்தில் அகீதா (நம்பிக்கை) வேறு, அரசியல் (சியாஸா) வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது.

நபிமார்களின் வரலாறு நமக்கு உணர்த்துவது என்ன? இறைத்தூதர்கள் ஒருபோதும் ஆட்சியையோ, அதிகாரத்தையோ அல்லது அரசியல் வெற்றியையோ அடைவதற்காகத் தங்களின் கொள்கையில் சமரசம் செய்துகொண்டதில்லை. ஆனால் இன்று, இஸ்ரேலை எதிர்க்கிறார் என்பதற்காக, நபித்தோழர்களை (சஹாபாக்களை) சபிப்பவர்களையும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சுமத்துபவர்களையும், குர்ஆனில் குறை காண்பவர்களையும் தூக்கி வைத்துக் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்?

யார் இவர் ஷஹீதா?

"ஷஹீத்" (தியாகி) என்பது இஸ்லாம் இறைவிசுவாசிகளுக்கு வழங்கிய மிக உயர்ந்த அந்தஸ்து. உத்தம சஹாபாக்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைத் திட்டுவதையும், அவர்களை எதிரிகளாகப் பாவிப்பதையும் கொள்கையாகக் கொண்ட ஒருவரை, அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ கொள்கையில் உள்ள ஒரு முஸ்லிம் எப்படி "ஷஹீத்" என்று அழைக்க முடியும்?

இஸ்லாத்தின் ஆணிவேராக இருக்கும் சஹாபாக்களையே கொச்சைப்படுத்துபவர்கள், எப்படி இஸ்லாத்தின் காவலர்களாக இருக்க முடியும்? அகீதாவில் தெளிவில்லாத காரணத்தினாலேயே இந்தத் தவறான புரிதல் எம் மக்களிடம் ஏற்படுகிறது.

#ஈரானின்_அரசியல்_நாடகமும் #ஷியாக்களின்_தந்திரமும்

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை நாம் வெறும் அரசியல் பார்வையில் மட்டும் பார்க்கக் கூடாது. ஷியாக்களின் வரலாற்றையும், அவர்களின் "தக்கியா" (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல்) கொள்கையையும் தெரிந்தவர்களுக்குப் புரியும், இது ஒரு விரிவான நாடகம் என்று.

சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத் போன்ற சுன்னி முஸ்லிம் நாடுகளைச் சுற்றி வளைப்பதும், மக்கா, மதீனா அமைந்துள்ள புனித பூமியை அச்சுறுத்துவதும் இவர்களின் நீண்ட காலத் திட்டங்களில் ஒன்று. அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது போலவும், இஸ்ரேலை எதிர்ப்பது போலவும் காட்டிக்கொண்டு, பொதுவான சுன்னி முஸ்லிம்களின் அனுதாபத்தைப் பெறுவதே இவர்களின் தந்திரம்.

வரலாறு நெடுகிலும், இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்கு எதிராகக் கடுமையான சேதங்களை விளைவித்ததில் இக்கூட்டத்திற்குப் பெரும்பங்கு உண்டு. இன்று இஸ்ரேலைத் தாக்குவதன் மூலம், அப்பாவி முஸ்லிம்களின் மனங்களில் இடம்பிடித்து, "நாங்கள் தான் இஸ்லாத்தின் உண்மையான பாதுகாவலர்கள்" என்று நம்ப வைப்பதே இவர்களின் நோக்கம். இதன் மூலம், எதிர்காலத்தில் சுன்னி நாடுகளுக்கு எதிராக இவர்கள் திரும்பும்போது, சுன்னி மக்களே இவர்களுக்கு ஆதரவாக நிற்கும் நிலையை உருவாக்க முயல்கிறார்கள்.

உணர்ச்சியை விட அறிவு மேலானது

இஸ்ரேல் ஒரு அக்கிரமக்கார நாடு என்பதிலும், அது அழிக்கப்பட வேண்டும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அதற்காக ஷைத்தானின் உதவியை நாட முடியாது.

"எதிரிக்கு எதிரி நண்பன்" என்ற கோட்பாடு அரசியலுக்கு உதவலாம், ஆனால் ஈரானுக்கு இது பொருந்தாது. ஏனெனில், அவர்களின் கொள்கை ரீதியான பகை என்பது இஸ்ரேலை விடவும், சுன்னி முஸ்லிம்கள் மீதே அதிகம் உள்ளது என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. சிரியாவில், ஈராக்கில், யேமனில் இலட்சக்கணக்கான சுன்னி முஸ்லிம்கள் கொல்லப்பட்டு இரத்த ஆறு ஓடவிடப்பட்ட போது இந்த ஈரான் யாருடைய பக்கம் நின்றது? அதற்கு பின்புலத்தில் நின்றதே இவர்கள் தான்.

எனவே, இஸ்லாமிய உறவுகளே! அரசியல் பரபரப்புகளையும், போர்ச் செய்திகளையும் கண்டு உணர்ச்சிவசப்பட்டு, நமது ஈமானையும் அகீதாவையும் அடகு வைத்துவிட வேண்டாம்.

மார்க்கத்தை அதன் தூய வடிவில், சஹாபாக்கள் மற்றும் இமாம்கள் காட்டிய வழியில் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான், யார் உண்மையான எதிரி, யார் வேஷதாரி என்பதை இனம் காண முடியும். அரசியல் வெற்றிகளை விட, நமது அகீதாவைப் பாதுகாப்பதே மிக முக்கியமானது.

அல்லாஹ் நம் அனைவருக்கும் தெளிவான மார்க்க அறிவையும், நேரான வழியையும் காட்டுவானாக.

_ Bassam Musthafa Salafy - Thihariya
Previous Post Next Post