இமாம் இப்னுல் கைய்யிம் அல் ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
எதனையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மடையனை நீ பொருட்படுத்தாதே.!
உன்னை அவன் ஏசினாலும், காபிர் என்று சொன்னாலும், வழிகேடன் என்று சொன்னாலும் அது உன்னைப் பாதிக்காது. ஏனெனில் அவன் குரைக்கும் நாயைப் போன்றவன் ஆவான். உன்னைப் பார்த்து அது குரைப்பதற்காக வேண்டி, அதற்கு பதில் கொடுக்கின்ற அளவுக்கு அந்த நாய்க்கு உன்னிடத்தில் எந்தவித மதிப்பையும் வழங்கிவிடாதே.!
அவன் குரைத்து மகிழ்வடைகின்றவாறு அவனை நீ விட்டுவிடு.!
அறிவு, ஈமான், நேர்வழி ஆகியவற்றைக் கொண்டுஅவனை விட அல்லாஹ் உன்னைச் சிறப்பித்துள்ளான் என்று நீ மகிழ்ச்சியடைந்துகொள்.!
அவனைப் புறக்கணித்து நடந்து கொள்வதென்பது அல்லாஹ் உனக்கு செய்த அருட்கொடை என்று நினைத்துக்கொள்.!
(அஸ்ஸவாஇகுல் முர்ஸலாஹ் 3:1158)
-இன்திகாப் உமரீ