ذكر ابن كثير رحمه الله : أنه في سنة 478 هـ كثرت الأمراض بالحمى والطاعون بالعراق والحجاز والشام ، وماتت الوحوش في البراري ، ثم تلاها موت البهائم ، وهاجت ريح سوداء ، وتساقطت الأشجار ، ووقعت الصواعق. فأمر الخليفة المقتدي بأمر الله بتجديد الأمر بالمعروف والنهي عن المنكر ،وكسر آلات الملاهي ،فانجلى ذلك الطاعون وذهبت تلك الأمراض..
كتاب البداية والنهاية لابن كثير (٩٣/١٦)
ஹிஜ்ரி 478 ம் ஆண்டு ஈராக், சிரியா (ஷாம்) ஹிஜாஸ் ( ரியாத்) ஆகிய பிரதேசங்களில் கடுமையான காய்ச்சல், தொற்று நோய் ஏற்பட்டது. பாலை வனங்களில் கால்நடைகள் செத்து மடிந்தன. கிராமங்களில் கால் நடைகள் செத்தன. (இறை தண்டனையை உணர்த்தும்) கறுப்புக் காற்றொன்றும் வீசியது. அதனால் மரக் கிளைகள் வீழ்ந்தன.ஒரு பேரிடி சப்தமும் கேட்டது. அப்பதோதைய கலீஃபாவாக இருந்த அல்முக்ததிர் பில்லாஹ் அவர்கள் செயலிழந்து கிடந்த நன்மை ஏவி தீமையைத் தடுக்கும் அமைப்பை மீண்டும் தொடங்குமாறும் இசைக் கருவிகளை உடைத் தெறியுமாறும் பணித்தார். அதன் பின், நாட்டை உலுக்கிய கொடிய அந்த தொற்று நீங்கியது. மக்களுக்கு வழி பிறந்தது.
இமாம் இப்னு கஸீர் -ரஹி- அல்பிதாயா வந்நிஹாயா. (16/93).
விளக்கம்
--
மக்கள்
இறைவனுக்கு வழிப்படாது, தாம் படைக்கப்பட்ட நோக்கை மறந்து கால்நடைகள் போல் நடந்தால் இறை கோபத்தால் இவ்வாறான நோய்கள் ஏற்படும். பஞ்சம் தலை விரித்தாடும். வரட்சி ஏற்படும்.
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து, எல்லைமீறிய கூத்து கும்மாழங்களை ஒழித்து அல்லாஹ்வின் பக்கம் நெருங்கி வாழ்வதால் கஷ்டம் நீங்கும், நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும். - இன்ஷா அல்லாஹ்-
-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி