வணக்கத்தில் அதிக ஈடுபாடுகாட்டாத பிற முஸ்லிம்களை கீழ்த்தரமாக பார்ப்பவரா நீங்கள்? இந்த உபதேசத்தை வாசியுங்கள்.

ஹிஜ்ரி 393 ல் மரணமான இமாம் அபூ இஸ்ஹாக் அஷ்ஷீராஸீ (ரஹி) அவர்கள் ஷாஃபிஈ (ரஹி) வின் கருத்தியல் முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவர். அவர்கள் இவ்வாறு கூறினார்கள். 

يقول أبو إسحاق الشيرازي الفقيه الشافعي المتوفىٰ سنة 393 هجري
رحمه الله تعالى : "سهرت ليلة مع أبي وحولنا نِيام ، فقلت : لم يقم من هؤلاء من يصلي ركعتين ! 
இரவு வணக்கத்திற்காக எனது தந்தையோடு ஒருநாள் இரவு விழித்திருந்தேன். எங்களை சூழ உள்ள மக்கள் அனைவரும் உறங்கி விட்டனர். அப்போது நான் இவர்கள் இரண்டு ரகஅத் தொழுகைக்காக எழுகவில்லையே என்றேன். உடனே எனது தந்தை : 

فقال : يا بني لو نمتَ لكان خيراً لك من وقوعك في الخلق . إستِقَامتك لا تُعطيك الحَقّ في السُخريَة مِنْ ضَلال غَيرك ، فلا تنظر إلى العاصي نظرة استعلاء ، فالقلوب بين أصبعين من أصابع الرحمن يقلّبها كما يشاء ،
எனது மகனே! நீ தொழாமல் உறங்கி இருப்பின், அது  இந்த மக்கள் விஷயத்தில் மூக்கை நுழைவிப்பதை விட உனக்கு சிறப்பாக இருந்திருக்கும். நீ நேர்வழியில் நடப்பது என்பது பிறர் வழிகேட்டில் இருப்பதை பரிகாசம் செய்வதற்கு உனக்கு உரிமையைத் தந்து விடாது என்பதை அறிந்து கொள்!.
இதயங்கள் அர்ரஹ்மானின் விரல்களுக்கு இடையில் இருக்கின்றன. அவற்றை அவன் விரும்புகின்ற விதத்திலே புரட்டுவான் எனக் கூறிய விட்டு,
மேலும் கூறுகின்ற போது:

 فحين اختارك اللهُ لطريق هدايته ، ليس لأنك مميز أو لطاعةٍ منك ، بل هي رحمةٌ منهُ شملتك ، قد ينزعها منك في أي لحظة ، لذلك لا تغتر بعملك ولا بعبادتك ، ولا تنظر بإستصغار لمن ضل عن سبيله ، فلولا رحمةُ الله بك لكنت مكانه .
அல்லாஹ் அவனது நேர்வழிக்கு உன்னை தேர்வு செய்தான் என்பது நீ ஏதோ சிறப்புமிக்க ஒருவன் என்பதாலோ; அ‌ல்லது, உனது வழிபாட்டின் மூலமாகவோ இல்லை. மாறாக, அவன் உன்மீது காட்டிய பேரருளால் என்பதையும், அவன் நாடினால் எந்த ஒரு  பொழுதிலும்  உன்னை விட்டும் அதை கழற்றிவிடுவான் என்பதையும் உணர்ந்திடு.
அதனால் உனது அமல் மற்றும் வணக்கத்தை கொண்டு நீ ஏமாந்திடாதே!

இறைவழியில் ஈடுபாடு காட்டாத மற்ற மக்களை சிறுமைப்படுத்தி நோக்காதே!

அல்லாஹ்வுடைய அருள் இல்லை எனில் நீயும் கூட அவனது இடத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

இறுதியாக:

وإياك أن تظن أن الثبات على الاستقامة أحد إنجازاتك الشخصية ؛ فاللهُ قال لنبيه خير البشر :  (وَلَوْﻵَ أَنْ ثَبَتْنَآكَ لَقَدْ كِدْتَ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْئَاً قَلِيْلا الإسراء/74) 
மார்க்கத்தில் உறுதியாக (இஸ்திகாமத்தாக) இருப்பது உனது தனிப்பட்ட திறமையில் விளைந்த ஒன்று என்று நீ நினைப்பதை எச்சரிக்கை செய்கின்றேன். ஏனெனில் அல்லாஹ் தனது தூதரை நோக்கி:
(நபியே)! நாம் உம்மை ஸ்திரப்படுத்தி இருக்காவிடின் நீ அவர்களின்(வழிகேடர்) பக்கமாக சற்று விலகி இருப்பீர் எனக் கூறுகின்றான்.(அல்இஸ்ரா - 74)

உமர் பின் அப்தில்  அஸீஸ் ரஹி அவர்களின் கூற்று
فكيف بك ؟!!  يقول عمر بن عبد العزيز : أدركنا السلف وهم لايرون العبادة في الصوم ولا في الصلاة ولكن في الكف عن أعراض الناس ، فقائم الليل وصائم النهار إن لم يحفظ لسانه أفلس يوم القيامة 
நாம் கண்ட ஸலஃப் எனப்படும் முன்னோர்கள் நோன்பு மற்றும் ஏனைய வணக்கங்களை கொண்டு ஒருவரின் சீர்திருத்தத்தை வரையறை செய்யமாட்டார்கள்.  மாறாக, மனிதர்களின் மானத்தை காப்பதில்  உள்ள அவரது ஈடுபாட்டை வைத்தே அவரை அளவீடு செய்வோம் எனக் கூறுகின்றார்கள்.

எனவே நோன்பாளிகள், இரவு வணக்கசாலிகள் பிறர் மீது நல்லெண்ணம் இல்லையானால் அவர்களே மறுமையில் பெரிய நஷ்டவாளிகள்.

இறைத் தூதர் பொன்பொழி:

قال رسولُ اللهِ ﷺ: إنِّي لَمْ أُومَرْ أنْ أنْقُبَ عن قلوب الناس ولا أشُقَّ بُطونَهمْ. "متفق عليه"
மனிதர்களின் இதயங்களை தோண்டிப்பார்க்கவோ, அவர்களுடைய (உடலின்) உட்பகுதிகளை பிளந்து பார்க்கவோ நான் ஏவப்படவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

குறிப்பு
---
அஷ்ஷைக் : வஹீத் அப்திஸ்லாம் பாலீ என்பவரின்  Fb யில் இருந்து அரபியில் வெளிவந்த மூலக் கட்டுரையில் இருந்து.
     
من فيس بوك وحيد عبد السلام بالي
எம்.ஜே.எம்.
ரிஸ்வான் மதனி
Previous Post Next Post