1. “நிச்சயமாக நான் தீனை மக்கள் வரையில் எத்திவைக்கக்கூடியவனே; அல்லாஹ் தான் நேர்வழி காட்டுகிறான், மேலும் நிச்சயமாக நான் அறிவு ஞானத்தை பங்கு வைக்கக்கூடியவனே; அல்லாஹ் தான் விளக்கத்தை கொடுக்கிறான்” என்று ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக
முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, ஜாமிஉஸ் ஸஙீர்)
2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிறு பாவங்களைச் செய்வதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அவை ஒரு மனிதரிடம் ஒன்று திரண்டால் அவரை அழித்துவிடும். மேலும், சிறு பாவங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உவமை கூறினார்கள்: ஒரு கூட்டத்தார் திறந்தவெளி ஒன்றில் தங்கியிருந்தனர். அப்போது அவர்களின் உணவுவேளை வந்தது. அவர்களில் ஒருவர் வெளியே சென்று ஒரு சுள்ளியைக் கொண்டுவந்தார். மற்றொருவர் இன்னொரு சுள்ளியைக் கொண்டுவந்தார். இறுதியில் ஒரு விறகுக் கட்டே சேர்ந்துவிட்டது. அதில் நெருப்பை மூட்டி தங்களின் உணவை அதிலிட்டுச் சமைத்தனர். சுள்ளிகள் சேர்ந்து விறகுக் கட்டாக மாறுவதைப் போன்றே. சிறிய பாவங்கள் சேர்ந்து பெரும் பாவமாக மாறி மனிதனையே அழித்துவிடும்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி); நூல்: முஸ்னது அஹ்மத்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள அப்து ரப்பிஹி மற்றும் அபூஇயாள் ஆகியோர் "அறியப்படாதோர்" என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உலக) மக்களில் நீங்கள் எழுபதாவது சமுதாயமாக நிறைவடைகிறீர்கள். அந்த எழுபது சமுதாயங்களில் நீங்கள்தான் சிறந்த சமுதாயம் ஆவீர்கள். இறைவனிடம் மதிப்புமிக்க சமுதாயம் ஆவீர்கள்.
அறிவிப்பாளர்: முஆவியா பின் ஹைதா அல்குஷைரீ (ரலி);
நூல்: முஸ்னது அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா.
இது "ஹசன்" வகை ஹதீஸாகும் என்று திர்மிதீ (ரஹ்) கூறுகிறார்கள்.
4. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரின் உயிர் (அவர் இறந்த பின்னர்) பறவையாக (உருவம் பெற்று) இருக்கும். அது சொர்க்கத்தின் மரத்தில் அமர்ந்திருக்கும். இறுதியில், அவரை (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில் அவரது உடலில் அல்லாஹ் உயிரைத் திருப்பிச் செலுத்துவான்.
அறிவிப்பாளர்: கஅப் பின் மாலிக் (ரலி); நூல்: நஸயீ, இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத், முவத்தா மாலிக்.
5. அபு ஹுரைராرضي الله عنه அறிவிக்கின்றார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆ செய்வார்கள் :
“யா! அல்லாஹ், நான் தீய அண்டை வீட்டுக்காரனிடமிருந்தும், வயதாவதற்கு முன்பே எனக்கு முதுமையை கொண்டுவரும் மனைவியிடமிருந்தும், என் மீது எஜமானராக (ஆதிக்கம் செலுத்தும்) மகனிடமிருந்தும், (என் ஈமானிற்கு) சோதனை (தண்டனை)யாக மாறக்கூடிய செல்வத்திடமிருந்தும், (எவனுடைய கண்கள் எந்நேரமும்) என்னையே நோட்டமிட்டுக் கொண்டும் (எவனுடைய) உள்ளம் எனக்கெதிராக சூழ்ச்சி செய்து கொண்டும், திட்டம் தீட்டிக்கொண்டு இருக்குமோ அத்தகைய நண்பனிடமிருந்தும், அவன் (எத்தகையவனென்றால்) என்னிடம் நல்லதை கண்டால் அதை மறைத்து விடுவான், ஆனால் என்னிடம் ஒரு தீய விடயத்தை கண்டால் அதை பரப்பி விடுவான் ( அத்தகைய நண்பனிடமிருந்தும்) நான் பாதுகாவல் தேடுகிறேன்”
சில்சிலதுஸ்-ஸஹீஹா, 3137 | ஷேக் முஹம்மது நாசீருத்தீன் அல்பானி (ரஹ்)
6. அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ கூறினார்கள்:
[தீர்ப்பு நாளில்] மிகக் கடுமையான தண்டனையை அனுபவிக்கும் மக்கள் இருவர் ஆவர்:
(அவர்கள்) கணவனுக்குக் கீழ்ப்படியாத பெண்ணும், மக்கள் விரும்பாத இமாமும் ஆவர். ”
ஸஹீஹ் திர்மிதி, 359 | ஷேக் அல்பானி (ரஹ்)| ஸஹீஹ்
7. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எனது சமூகத்தில் சில கூட்டத்தார்கள் இணைவைப்பாளர்களுடன் இணையும் வரை மறுமை நாள் வராது என் சமூகத்தாரில் சில கூட்டத்தினர் சிலைகளை வணங்கும் வரை மறுமை நாள் வராது.
அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)
நூல்: அபூதாவுத் (3710).
8. அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ கூறினார்கள்:
"பிற்பகல் (ஒரு சிறிய) தூக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள், (ஏனெனில்) ஷைத்தான்கள் பிற்பகலில் தூங்குவதில்லை."
ஸஹீஹ் அல்-ஜாமி ’, 4431 | ஷேக் அல்பானி (ரஹ்) | ஹசன்
9. குளிர்காலத்தில் நோன்பு நோற்பது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"குளிர்காலத்தில் நோன்பு நோற்பதென்பது ஒரு குளிர் (கால) கொள்ளையாகும் (அதாவது வெகுமதியை எளிதில் பெறக்கூடியதாகும்)."
சில்சிலதுஸ்-ஸஹீஹா, 1922 | ஷேக் அல்பானி (ரஹ்)l ஹசன்
سَتْرُ ما بينَ أَعْيُنِ الجِنِّ وعَوْرَاتِ بَنِي
آدمَ إذا وضعَ أحدُهُمْ ثَوْبَهُ أنْ يقولَ: *بسمِ الله*
الراوي: أنس بن مالك المحدث: الألباني - المصدر:
صحيح الجامع - الصفحة أو الرقم: 3610
خلاصة حكم المحدث: صحيح
10. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
" ஆதமுடைய பிள்ளைகள், தனது ஆடைகளை கழற்றும்போது (அவர்களது) அந்தரங்க உறுப்புகளை ஜின்கள் பார்ப்பதிலிருந்து அவர்களின் கண்களை தடுப்பதற்கான வழி 'பிஸ்மில்லாஹ்' கூறுவதாகும்."
ஸஹீஹ் அல்-ஜாமி ', 3610 | ஷேக் அல்-அல்பானி | ஸஹீஹ்
11. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தனது செல்வத்திலோ அல்லது தனது சகோதரனிடமோ தான் விரும்பிய ஒன்றைக் கண்டால், (ஷைத்தானின் தீங்கு மற்றும் பிறரின் தீய கண்ணிலிருந்து அதை பாதுகாத்திட) அதில் பரக்கத் செய்ய இறைவனிடம் துஆ கேட்கட்டும். நிச்சயமாக, தீய கண் உண்மையானது."
ஸஹீஹ் அல்-ஜாமி ', 556 | ஷேக் அல்பானி | ஸஹீஹ்
12. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
"நிச்சயமாக, ஒரு அடியானுக்கு (அவனுடைய இறைவன் அவனுக்கு நிர்ணயித்த) மரணம் அவனை தேடுவதைவிட, (அவனுடைய இறைவன் அவனுக்கு நிர்ணயித்த) வாழ்வாதாரமே (அவனை) அதிகம் தேடுகிறது."
ஸஹீஹ் அல்-ஜாமி', 1630 | ஷேக் அல்பானி (ரஹ்) | ஹசன்
13. அல்லாஹ்வின் தூதர் ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சொர்க்கத்தின் உள்ளே என் மனைவி ஆயிஷா (ரழி)
நூல் : ஸஹீஹ் அல் ஜாமிஹ் : 3965
14. நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமாக இருந்தது ” என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
(” எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன் ” என்று உஸ்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள்.)
அறிவிப்பவர்: ஹானிஃ (ரஹ்), நூல்: திர்மிதீ-2308 (2230)
15. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அன்புகொண்ட இருவ(ருக்கு அல்லது இரு சாரா)ருக்கு (தம் அன்பை நிறைவாக்கிடவும் நிலையாக்கிடவும்) திருமண பந்தத்தை (ஏற்படுத்திக்கொள்வதைப்) போன்று வேறு நிலையாக்கிடவும்) திருமண பந்தத்தை (வழி) எதையும் நாம் அறியவில்லை.”
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் பைஹகீ (7/78), ஹாகிம் (2/160) உள்ளிட்ட நூல்களில் இடம்பெற்றுள்ளது.
இது ஹசன் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இது ஹசன் தரத்துக்கு இறங்க இதன் அறிவிப்பாளர் தொடரில் நான்காம் அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள முஹம்மத் பின் முஸ்லிம் அத்தாயிஃபீ எனபாரே காரணம் ஆவார். இவரது நினைவாற்றல் குறித்து விமர்சனம் உள்ளது. இருப்பினும், இவரது அறிவிப்பை வலிமைப்படுத்தும் வேறு சான்றுகள் உள்ளன.
(ஷுஐப்) இது ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் என அல்பானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(அஸ்ஸஹீஹா ) இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரப்பூர்வமானதாகும் என பூஸீரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(ஸவாயித், ஸிந்தீ.) இந்த ஹதீஸ் முஹம்மத் பின் முஸ்லிம் அத்தாயீஃபீ இடம்பெறாமல் தபரானியின் அல்முஅஜமுல் கபீர் (10736) எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.
قال رسول الله ﷺ:
من يتكفل لى أن لا يسأل الناس شيئا أتكفل له بالجنة
قال رسولُ الله ﷺ :
إذا سقى الرجلُ امرأتَه الماءَ أُجِرَ
(السلسلة الصحيحة ٢٧٣٦)
16. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு ஆண் தன் மனைவிக்கு தண்ணீர் கொடுத்தாலும் அவனுக்கு வெகுமதி கிடைக்கும்.
(ஸில்ஸிலத்து ஸஹீஹா 2736)
صحيح الجامع، حديث صحيح رقم 6604
17. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடம் எதையும் கேட்கமாட்டேன் என்று யார் எனக்கு உத்தரவாதம் (வாக்கு) தருகிறாரோ,
அவருக்கு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிப்பேன்.
நூல் : ஸஹீஹ் அல்-ஜாமிஹ், ஸஹீஹ் ஹதீஸ் எண். 6604
قال رسول الله عليه وسلم:
لو أن ابن آدم هرب من رزقه كما يهرب من الموت،
لأدركه رزقه كما يدركه الموت
صحيح الجامع-5240
حدیث صحیح
18. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் மரணத்திலிருந்து தப்பி ஓடுவது போல் தன் வாழ்வாதாரத்தை விட்டு ஓடினாலும்,
எப்படி மரணம் அவனை பிடித்து கொள்கிறதோ அதுபோன்று அவனது (உணவும்) வாழ்வாதாரம் அவனை அடையும்
ஸஹீஹ் அல்-ஜாமிஹ்-5240, ஸஹீஹான ஹதீஸ்
19. அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
“அளவுக்கதிகம் சிரிக்க வேண்டாம்,
அளவுக்கதிகமாக சிரிப்பது மனதை கொன்றுவிடும்”.
நூல் : ஸஹீஹ் சுனன் இப்னு மாஜாஃ, 3400 | ஷேக் அல்பானி ரஹிமஹுல்லாஹ் | ஸஹீஹ்.
20. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் (கணவன்) அவன் அழைத்தால் மனைவி,
அவனுக்குத் தேவைப்படும்போது,
அவள் அடுப்பில் (சமையலறையில்) இருந்தாலும்,
அவனிடம் வரட்டும்
நூல்: ஸஹீஹ் அல்-திர்மிதி 1160
قال رسول الله :
إذا الرجل دعا
زوجته لحاجته فلتأتـه، وإن كانت على التنور
صحيح الترمذي 1160
21. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
அகிலத்துப் பெண்களில் சிறந்தவர்கள் நால்வர்.
1. இம்ரானின் மகள் மர்யம்
2. ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா
3. குவை-தின் மகள் கதீஜா
4. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் ஃபாத்திமா.
நூல் : தஃப்சீர் இப்னு கஸீர்
22. உலகத்துப்பெண்களில் இம்ரானின் மகள் மர்யமே (அக்காலத்தில்) சிறந்தவர்.
(தற்போது) உலகப் பெண்களில் சிறந்தவர் குவை-தின் மகள் கதீஜா ஆவார்"
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என அலீ பின் அபீதா-ப் (ர-) அவர்கள் கூறினார்கள்.
நூல் : தஃப்சீர் இப்னு கஸீர்
23. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் நற்செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும்,
உங்கள் தீய செயல்கள் உங்களை துக்கத்தையும் ஏற்படுத்தினால்,
நீங்கள் தான் முஃமின் (இறை நம்பிக்கையாளர்)
-ஸஹீஹ் ஜாமிஹ்
قال رسول الله (صلى الله عليه وسلم)
إذا سرتك حسنتك وساءتك سيئتُك فأنت مؤمن
صحيح الجامع
24. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் பாதையில் தனது ஆன்மாவை எதிர்த்துப் போராடுபவனே முஜாஹித்.”
الجامع الصحيح مما ليس في الصحيحين ٥/١٣١
25. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களால் இயன்றவரை மட்டுமே நற்செயல்களை மேற்கொள்ளுங்கள்,
ஏனெனில் அவை குறைவாக இருந்தாலும் தவறாமல் செய்யப்படும் செயல்களே சிறந்தவை."
நூல்: இப்னு மாஜா
26. நான் கறுப்பர்.
சிவப்பர் அனைவருக்கும்.
தூதராக அனுப்பப்பெற்றுள்ளேன்"
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: முஸ்னது அஹ்மத்
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
قلبٌ شاكرٌ و لسانٌ ذاكرٌ و زوجةٌ صالحةٌ تُعينُك على أمرِ دنياك و دينِك خيرٌ ما اكْتَنَزَ الناسُ
صحيح الجامع ٤٤٠٩ | الشيخ الألباني رحمه الله | صحيح
27. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(அல்லாஹ்வின் அருள்களை நினைவுகூறும்) நன்றியுள்ள இதயம், (அடிக்கடி) அல்லாஹ்வைக் திக்ரு செய்யக்கூடிய நாவு மற்றும் உலக, மார்க்க விவகாரங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஸாலிஹான மனைவி. இவைதான் மனிதன் வைத்திருக்கக்கூடிய சிறந்த பொக்கிஷங்கள்."
சஹீஹ் அல்-ஜாமி '4409 | ஷேக் அல்பானி | ஸஹீஹ்
28. அபு அல்-தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்,
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்வதை நான் கேட்டேன்,
'அறிவைத் தேடி எவர் ஒரு பாதையில் செல்கிறாரோ,
அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்திற்கான வழியை எளிதாக்குவான்,
வானவர்கள் அறிவைத் தேடுபவருக்கு பணிவுடன் தங்கள் இறக்கைகளை தாழ்த்துகிறார்கள்.
தாம் மேற்கொள்ளும் செயலுக்கு அங்கீகாரம்.
அறிஞருக்கு வழிபாடு செய்பவர் மீதுள்ள மேன்மை,
இரவில் நட்சத்திரங்களை விட பௌர்ணமி நிலவின் மேன்மை போன்றது.
அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள்,
ஆனால் நபியவர்கள் வாரிசுக்காக செல்வத்தை விட்டுச் செல்லவில்லை.
மாறாக, அவர்கள் அறிவை விட்டுவிட்டார்கள்.
இந்த அறிவை யார் பெறுகிறாரோ,
அவர் ஏராளமான நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுகிறார்."
நூல்: சுனன் அபுதாவூத் : 3/317, சுனன் அல் திர்மிதீ : 2/ 114
29. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறப்போர்களில் மிகவும் சிறந்தது கொடுங்கோல் மன்னனிடம் உண்மையை எடுத்துரைப்பதாகும்.
நூல்: இப்னு கஸீர்
30. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நடத்தையைக் கடைப்பிடிப்பதும்,
நீண்ட காலம் மௌனத்தைக் கடைப்பிடிப்பதும் உங்கள் கடமையாகும்.
என் உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக,
இந்த இரண்டு குணங்களை விட வேறு எதுவும் படைப்பை அழகுபடுத்தவில்லை.
நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஹ் 4048
31. (துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் நல்லறங்கள், மற்ற நாட்களில் செய்யப்படும் நல்லறங்களைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாகும். என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார் கள்.
32. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வை நினைவு கூறாத ஒரு
சபையிலிருந்து விடைபெற்றுச் செல்பவர்கள் நாற்றம் வீசும் ஒரு கழுதைப் பிணத்தைச் சுற்றி இருந்து விட்டு பிரிந்து செல்வோரைப் போலன்றி அவர்கள் செல்லவில்லை.
அது அவர்களுக்கு கைசேதமாகவே அமையும்.
இதே நபிமொழியின் திர்மிதி அறிவிப்பில் பின்வருமாறு உள்ளது :
அல்லாஹ்வை நினைவு கூர்ந்து தமது நபியின் மீது ஸலவாத் சொல்லாமல் விடைபெறும் எந்த சபையினருக்கும் அது குறையாகவே அன்றி இருக்கமாட்டாது.
(அல்லாஹ்) நாடினால் அதற்காக அவர்களைத்
தண்டிப்பான். நாடினால் மன்னிப்பான்
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மத் (9843), அபூ தாவூத் (4855), திர்மிதி (3380), மற்றும்
அஷ்ஷேக் அல்பானீ தனது ஸஹீஹுல் ஜாமிஇல் (5607, 5750) இதனை ஸஹீஹ் எனக் கூறியுள்ளனர்
33. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறை நம்பிக்கையாளரின் ஆத்மா அவர் வாங்கிய கடன் காரணத்தால் அவர் சார்பில் அது நிறைவேற்றப்படுகிற வரை (அந்தரத்தில்) தொங்கவிடப்படுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: திர்மிதி (999)
34. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
குறைந்த மஹரை பெறும் பெண்களே அதிகம் பரக்கத் உள்ள பெண்கள்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
முஸ்னத் அஹமத் ஹதீஸ் -25119
35. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண் குழந்தைகளை வெறுக்காதீர்கள்.
உங்கள் துன்பங்களில் கைகொடுக்கின்ற இளகிய மனம் படைத்தவர்கள் அவர்கள்.
மிகமிக விலைமதிப்புமிக்கவர்கள்.
நூல்: அஹ்மத் 17897,அஸ்-ஸஹீஹா 3206
36. நபி (ஸல்) அவர்களின் குணநலன்களைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன்.
நபியவர்களின் குணம் அல்குர்ஆனாக இருந்தது என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: சஅத் பின் ஹிஷாம் பின் ஆமிர். நூல் அஹமத் -25338)
37. எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள்.. என்று நபி ஸல் அவர்களிடம் கூறினேன்
(யாரையும் திட்டாதே என்று ஒரே வரியில் சொன்னார்கள்.)
அன்று முதல் நான் யாரையும் திட்டுவதில்லை...
ஜாபிர் ரலி,
(நூல் தப்ராணி)
38. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒரு ஆண் மகன் தனது காதலை தன் மனைவியிடம் வெளிப்படுத்துவதில் எவ்விது இழிவும் அவனை வந்தடைய போவதில்லை.
ஃபத்ஹுல் பாரி 16/159
39. நபி (ஸல்) கூறுகிறார்கள்:
ஒரு பெண் தனது கடைசிக் கணவனுக்கே உரியவள்.
நூல்: தப்ராணி
40. நபி (ஸல்) கூறினார்கள்:
'குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும் அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்...!!
நூல்: திர்மிதி (1950)
41. நபி (ஸல்) அவா்கள் கூறுகிறார்கள் :
நீங்கள் அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூதின் ) நட்பைப் பற்றி பிடித்து கொள்ளுங்கள்!
நூல் : இப்னு ஹீப்பான் -தப்ராணி
42. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களுடைய பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்!
(நூல் : அஹ்மத் 20704)
43. நபி அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் அறிவிக்கிறார்கள்:
(இறுதித்தீர்ப்பு நாளில்) மக்களின் செயல்களைக் கணக்கிடும் போது, (ரியாவைக் கடைப்பிடித்தவர்களிடம்) கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவான், யாரிடம் உங்கள் செயல்களைக் காட்டுவதற்காக செய்தீர்களோ, அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் ஏதாவது கூலி உண்டா என்று பாருங்கள்.
நூல்: சஹீஹ் அல் தா;கீப் வத் தக்ரீப் – எண் : 29
44. மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்!
பிறருக்கு உணவளியுங்கள்!
உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்!
இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்!
-இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி,
நூற்கள் : திர்மிதீ, இப்னுமாஜா 3242, அஹ்மத், ஹாகிம்)
45. எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக சொர்க்கத்தில் நுழைவார்கள் என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு பயப்படுவதாலும் நற்குணத்தாலும் என்று பதிலளித்தார்கள்.
எந்தச் செயலின் காரணத்தால் அதிகமாக மக்கள் நரகத்தில் நுழைவார்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கவர்கள், வாய் மற்றும் இச்சை உறுப்பின் காரணத்தால்! என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி,
நூல் : திர்மிதீ 1927
46. அபூஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள்:
"சுப்ஹுவுடைய இரண்டு ரக்அத்தை உங்களில் ஒருவர் தொழுது விட்டால், அவர் தன் வலது புறமாக ஒருக்கணித்துப் படுக்கட்டும்" என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அபூதாவூது:1261, திர்மிதீ:420.
இது “ஹஸன் ஸஹீஹ்” என்று திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்.
47. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ்வுக்காக நேசித்து,
அல்லாஹ்வுக்காகக் கோபித்து,
அல்லாஹ்வுக்காகக் கொடுத்து யார் வாழ்கிறாரோ அவர் தமது இறைநம்பிக்கையை முழுமையாக்கிக்கொண்டுவிட்டார்"
நூல் : (திர்மிதீ,அபூதாவூத், முஸ்னது அஹ்மத்)
48. நபி (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள்:
அற்பமாக கருதப்படுகின்ற (பாவமான) செயல்களைப் பற்றி நான் உன்னை எச்சரிக்கின்றேன்.
ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்விடம் அதற்கும் கேள்வி கணக்கு உண்டு.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரழி)
நூல்: இப்னு மாஜா : 4243, ஹதீஸ் அல்பானி ஸஹீஹ்
49.நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்தேன்.
சட்டி கொதிப்பதை போன்ற சத்தம் அவர்களது நெஞ்சில் இருந்து வந்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள்.
அதாவது அழுது கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் சகீர்,
நூல்: நஸாயீ-1214
50. துஆ என்பது வணக்கமாகும்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ; நுஃமான் இப்னு பஷீர் (ரலி)
நூல்: திர்மிதி
قال النبي ﷺ:
إذا أحب الرجل أخاه فليخبره أنه يحبه
(رواه أبو داود والترمذي)
51. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவன் தன் சகோதரனை நேசித்தால், அவன் அவனை நேசிக்கிறான் என்று சொல்லட்டும்
(அறிவிப்பவர்: அபூதாவூத் மற்றும் திர்மிதி)
52. யார் மனம் நிம்மமதியானவராகவும்,
உடல் ஆரோக்கியம் பெற்றவராகவும்,
அன்றைய நாளின் உணவை பெற்றவராகவும் காலைப் பொழுதை அடைகிறாரோ அவர் முழு உலகத்தையும் வழங்கப்பட்டவரைப் போன்றவராவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மிஹ்ஸன் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு, நூல்: அல் அதபுல் முஃப்ரத்
53. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை ஒருவர் கூறினால், அவர் கூறியதை திரும்பப் பெற்றுக் கொள்ளாத வரை அல்லாஹ் அவரை நரகவாசிகளிடமிருந்து வரும் இழிவான நீரில் தங்கச் செய்துவிடுவான்.
நூல் : அபூதாவூத்: 3597
54. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சிறிய பாவங்களை (குறைத்து மதிப்பிடுவதில்) ஜாக்கிரதையாக இருங்கள்,
ஏனென்றால் அவைகள் ஒரு மனிதனை அழிக்கும் வரை கூடுகின்றன."
[صحيح الترغيب والترهيب رقم الحديث ٢٤٧٠]
55. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் பயத்தால் அடிமையின் தோல் நடுங்கினால்,
காய்ந்த மரத்தின் இலைகள் உதிர்வது போல் அவனது பாவங்கள் உதிர்ந்துவிடும்."
تخريج الاحياء ٤/٩١٣٦
56. அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரவில் எழுந்து தொழுது விட்டு,
பின்னர் தன் மனைவியை எழுப்பி,
அவள் எழ மறுக்கையில் அவளின் முகத்தில் தண்ணீரை தெளித்து (எழுப்பிய) கணவருக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!
(மேலும்) இரவில் எழுந்து தொழுது விட்டு.
பின்னர் தன் கணவரை எழுப்பி,
அவன் எழ மறுக்கையில் அவனின் முகத்தில் தண்ணீரை தெளித்து (எழுப்பிய) மனைவிக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!
நூல்: அபூதாவூத்:1308
57. நபி (ஸல்) அவர்கள் இயல்பாகவே நல்ல குடும்பத் தலைவராக விளங்கினார்கள்.
அவர்கள் தம் துணைவியரிடம் எப்போதும் சிரித்த முகத்தோடும் கொஞ்சலோடும் பழகுவார்கள்.
அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டு,
குடும்பச் செலவுகளுக்கு இயன்றவரை தாராளமாக வழங்குவார்கள்.
துணைவியரைச் சிரிக்கவைத்து மகிழ்வார்கள்.
நூல் : தஃப்சீர் இப்னு கஸீர்
58. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஆதமுடைய பிள்ளைகளின் பெரும்பாலான பாவங்கள் அவருடைய நாவினால் உண்டானவையாகும்."
நூல் : அல் சில்சிலா அஸ்-ஸஹிஹா 534, ஸஹீஹ் அல் ஜாமிஹ் 1201
59. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்பாக நீங்கள் வெட்கப்படுவதைப் போல அல்லாஹ்வின் முன் வெட்கப்படுங்கள்."
நூல்: அஸ்-ஸஹீஹா : 3559
60. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்கள் உடலுக்கு உங்கள் மீது உரிமை உள்ளது,
எனவே (பொருத்தமான போது) எழுந்து (பொருத்தமான போது) தூங்குங்கள்.
[سنن أبي داود ١٣٦٩]
61. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமைக்கான செயல்களைத் தவிர நீங்கள் செய்யும் அனைத்திற்கும் அவசரப்படாதீர்கள்.
السلسلة الصحيحة ٤٩٧١
62. நபி (ஸல்) எச்சரித்தார்கள்:
யார் உலக ஆசையை ஏற்படுத்தக்கூடிய ஆடையை அணிகிறாரோ,
அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் இழிவான ஆடையை அணிவிப்பான்.
பின்னர் அவர் நரக நெருப்பில் வீசப்படுவார்.
நூல்: சுனன் அபூதாவூத் 4028
63. அபூ பர்ஸா அஸ்லமி (ரலி) அறிவிக்கிறார்கள்:
“உள்ளத்தில் ஈமான் நுழையாமல் உதட்டளவில் நம்பிக்கை கொண்ட மக்களே!
முஸ்லிம்களைப் பற்றி புறம் பேசாதீர்கள்.
அவர்களின் குறைகளைத் துருவிப்பார்க்காதீர்கள்,
ஏனெனில் தன் சகோதரனின் குறைகளை யார் துருவிப்பார்க்கிறாரோ அவரின் குறைகளை அல்லாஹ் துருவுவான்.
அவருடைய வீட்டிலேயே அவரைக் கேவலப்படுத்தும் வரை" என நபி (ஸல்) அவர்கள் (வீட்டினுள் இருக்கின்ற) கன்னிப் பெண்களுக்கும் கேட்கின்ற வகையில் உரத்த குரலில் சொன்னார்கள்.
நூல்: அஹ்மத் 18963
64. "உமது ஆடையால் அவரை நீர் மறைத்திருந்தால் அது உமக்கு நன்மை தருவதாக இருந்திருக்கும்" என்று அந்த மனிதருக்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 4377
65. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டார்கள்?
நான் ஏன் மீகாயீல்(அலை) அவர்களை ஒருபோதும் சிரித்தவராக பார்த்ததில்லை?
ஜிப்ரீல்(அலை) விடை அளித்தார்:
நரகம் படைக்கப்பட்ட அன்று முதல் மீகாயீல்(அலை) அவர்கள் சிரித்ததில்லை!
நூல் : அஸ்ஸஹீஹா: 2511
66. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கம் (பணிவு) என்பது ஈமானின் ஒரு பகுதி,
ஈமான் என்பது சொர்க்கத்தில்.
வெட்கமின்மை என்பது அவமானத்தின் ஒரு பகுதியாகும்,
அவமானம் நரக நெருப்பில் உள்ளது.
நூல்: சுனன் அல்-திர்மிதி 2009
67. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நேரம் நெருங்கி வருகிறது,
மேலும் மக்கள் இந்த உலக வாழ்க்கையின் இன்பங்களைப் பெறுவதில் எப்போதும் ஆர்வமாக உள்ளனர்,
மேலும் அல்லாஹ்விலிருந்து இன்னும் தொலைவில் உள்ளனர்."
நூல்: ஸஹீஹ் அல்-ஜாமி', 1146
68. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களோடு கலக்காமல் அவர்களுடைய தீங்குகளை பொறுத்துக் கொள்ளாமல் இருக்கும் முஃமினை விட அவர்களுடன் கலந்து அவர்களின் தீங்குகளை பொறுத்துக் கொள்ளும் முஃமினே சிறந்தவன்.
நூல்: ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா: 939
69. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள்.
அவள் (வீட்டைவிட்டு) வெளியேறிவிட்டால். ஷைத்தான் அவளை ஏறெடுத்துப் பார்க்க வைக்கிறான்.
ஒரு பெண் தனது இல்லத்தின் உள் அறைக்குள் இருக்கும்போதுதான் தன் இறைவனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறாள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி);
நூல்: தப்ரானீ (அல்கபீர்), ஸஹீஹ் இப்னு ஹிப்பான் ஸஹீஹ் இப்னு குஸைமா, முஸ்னது அல்பஸ்ஸார். முஸன்னஃப் இப்னு அபீஷைபா. ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-1093.
70. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் இரவின் இறுதிப் பகுதியாகும்.
அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவுகூரக் கூடியவர்களில் நீயும் ஆக முடிந்தால் ஆகிக் கொள்.
நூல்: ஜாமிவுத் திர்மிதி
71. இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
கவலையாக இருந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள்.
அப்போது கூறினார்கள்:
அதிகமாக கவலை கொள்ளாதீர்!
உனக்கு விதிக்கப்பட்டது திட்டமாக நிகழும்,
உனக்கு வழங்கப்பட்ட ரிஸ்க் உன்னை வந்தடையும்.
நூல்: ஷஅபுல் ஈமான்: 1188
72. முஃமின் (இறை விசுவாசி) நேசிப்பார்,
நேசிக்கப்படுவார்,
எவர் நேசிக்கவுமில்லை;
நேசிக்கப்படவுமில்லையோ அவரில் எந்த நன்மையும் இல்லை.
எவர் மக்களுக்கு அதிகம் பலனளிக்கிறாரோ அவரே மக்களில் மிகச் சிறந்தவர்''
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் :தாரஃகுத்னீ, ஜாமிஉஸ் ஸஙீர்
73. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
"ஒரு மிஸ்வாக்கிற்கு கூட மக்களிடம் தேவையில்லாமல் இருங்கள்."
الصحيحة ١٤٥٠
74. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நற் கல்வியை கற்றுக்கொள்ளும். அல்லது கற்றுக்கொடுக்கும் நோக்கத்தில் எனது இந்தப் பள்ளிவாசலுக்கு வருகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் அந்தஸ்தைப் பெற்றவராவார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) நூல்: ஸஹீஹ் இப்னு மாஜா : 187
75. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது பேச்சைக் கேட்டு அதனை எத்திவைப்பவரை அல்லாஹ் பிரகாசிக்கச் செய்வானாக!
மார்க்கக் கல்வியின் விளக்கமின்றி மார்க்கக் கல்வியைச் சுமந்த எத்தனையோ பேர் உள்ளனர்!
தன்னை விட விளக்கமுள்ளோரிடம் மார்க்கக் கல்வியைச் சுமந்து செல்லும் எத்தனையோ பேரும் உள்ளனர்!
அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித் (ரழி)
நூல் : ஸஹீஹ் இப்னு மாஜா :188
76. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி)
நூல்: ஸஹீஹ் இப்னு மாஜா : 184
77. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வணக்கத்தின் சிறப்பை விட கல்வியின் சிறப்பு மேலானது,
உங்களது மார்க்கத்தில் சிறந்தது பேணுதலாகும்.
அறிவிப்பவர்: ஹுஸை ரிபா இப்னுல் யமான் (ரழி)
நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஃ : 3914
78. நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் :
இஹ்ஸான் என்பது இறைவனைப் பார்ப்பது போலவும்,
நீங்கள் அவனைக் காணவில்லையென்றால் அவன் உங்களைப் பார்க்கிறான் என்றும் வணங்க வேண்டும்
நூல்: ஸஹிஹ் அல் ஜாமிஹ் 2762
قال رسول الله صلى الله عليه وسلم
الإحسان أن تعبد الله كأنك تراه, فإن لم تكن تراه فإنه يراك
صحيح الجامع ٢٧٦٢
79. முஃமினின் மன வெறுப்பான காரியம் எதுவெல்லாம் ஏற்படுகிறதோ அவைதான் சோதனையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல் : தப்ரானி
80. " கல்வி தொடர்பான விடயங்களில் நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தூய்மையாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் ஒருவர் தனது செல்வத்தில் செய்கின்ற மோசடியை விட அறிவில் செய்கின்ற மோசடி மிகப் பாரதூரமானது. நிச்சயமாக அல்லாஹ் மறுமையில் உங்களை விசாரிப்பான். "
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (றழி),
ஆதாரம் : தப்ரானி
81. தந்தை சுவர்க்கத்தின் நடுவாசலாகும். நீ நாடினால் அவ்வாசலை உனது கரங்களால் அணைத்துக் கொள்! இல்லையெனில், உதறிவிடு என்பதாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.
(ஆதாரம்: திர்மிதி, இப்னு ஹப்பான்)
82. நிச்சயமாக ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்:
அல்லாஹ்வே! நீ என் தோற்றத்தை அழகுபடுத்தினாய்,
ஆகவே, நீ என் குணத்தை(யும்) அழகுபடுத்துவாயாக
அறிவிப்பாளர்: ஆயிஷா ரழி அவர்கள்
நூல்: முஸ்னது அஹ்மது,
عَنْ عَائِشَةَ رضي الله عنها
أَنَّ رَسُولَ اللهِ ﷺ
كَانَ يَقُولُ
اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنُ خُلُقِي
رَوَاهُ أَحْمَدُ
83. ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஃமீன்னை தவிர வேறு எவரும் ஒழுவுடைய விசயத்தில் பேணுதலாக இருக்கமாட்டார்கள்.
நூல் : ஸஹீஹ் ஜாமிஹ் : 952
قال رسول اللہ ﷺ
لا يحافظ
على الوضوء
إلا مؤمن
صحيح الجامع (952)
84. ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள், அவர்கள் உங்களுக்கு செல்வத்தை கொண்டு வருகிறார்கள்
நூல் : ஹாகிம்
قال رسول الله ﷺ
تزوجوا النساء، فإنهن يأتينكم بالمال
رواه الحاكم
85. நகரத்திலோ, கிராமத்திலோ மூன்று நபர்கள் இருந்தும் தொழுகை ஜமாத்தாக நிறைவேற்றப்படவில்லை என்றால் ஷைத்தான் அவர்களை சூழ்ந்து விடுவான். ஆகவே ஜமாத்தாகவே தொழுங்கள், "ஓநாய் வேட்டையாடுவதெல்லாம் தனியாக இருக்கும் ஆட்டைதான்" என்று நபியவர்கள் சொன்னார்கள். (அபூதாவூத் : 47)
86. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
குர்ஆனை உரத்து ஓதுபவர்
வெளிப்படையாகத் தர்மம் செய்தவர் போன்றவராவார்!
குர்ஆனை மௌனமாக ஓதுபவர்
இரகசியமாகத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார் !
நூல்: சுனன் அபூதாவூத்:1333
87. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஸக்கூம் மரத்திலிருந்து ஒரு துளி உலகக் கடலில் விழுந்தால்,
அது அனைவரின் வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிடும்.
அப்படியென்றால் அதைச் சாப்பிட வேண்டியவர்களின் நிலை என்ன?
المستدرك على الصحيحين ٢/٢٩٤
88. ‘சுவனவாசிகள் 120 அணிகளாக இருப்பார்கள். அவற்றுள் 80 அணியினர் இந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மீதமுள்ள 40 அணியினர் ஏனைய (நபிமார்களின்) சமூகங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்'
ஹதீஸின் தரம் : ஸஹீஹ்
நூல் : ஸஹீஹுத் திர்மிதி : இமாம் அல்பானி (ரஹ்)
89. ஒருவர் ஒரு நாளில் ஏழு தடவைகள் நரகிலிருந்து பாதுகாக்குமாறு பிரார்த்தித்தால், நரகமானது அல்லாஹ்விடம் " இறைவா! குறித்த இந்த மனிதன் என்னை விட்டும் பாதுகாக்குமாறு பிரார்த்தித்தான். அவனை பாதுகாத்துவிடு" என்று கூறும்.
அவ்வாறே ஒரு நாளில் ஏழு தடவைகள் சுவர்க்கத்தை தருமாறு பிரார்த்தித்தால், சுவர்க்கமானது அல்லாஹ்விடம் "இறைவா! குறித்த இம்மனிதன் என்னை வழங்குமாறு பிரார்த்தித்தான். அவனை சுவர்க்கத்தில் நுழைத்து விடு" என்று கூறும்.
- ஹதீஸின் தரம் : ஸஹீஹ்
நூல் : ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா (6/22) : இமாம் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்).
90. நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :
'மூன்று விடயங்களை சத்தியமிட்டு கூறுகிறேன் :
1. தர்மம் செய்வதன் மூலம் பொருளாதாரம் குறையாது. எனவே தர்மம் செய்யுங்கள்.
2. பிறர் செய்த அநியாயத்தை மன்னித்துவிடுவதன் மூலம் அல்லாஹ் கண்ணியத்தை உயர்த்துகிறான். எனவே மன்னியுங்கள். உங்களது கண்ணியத்தை அல்லாஹ் உயர்த்திவிடுவான்.
3. தனது தேவைக்காக பிறரிடம் யாசகம் கேட்கும் வாயிலை திறந்துவிடும் ஒருவருக்கு அல்லாஹ் வறுமையின் வாசலை திறந்துவிடுகிறான்'.
நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ
91. நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:
இவ்வுலகில் நான்குவகை மனிதர்கள் உள்ளனர். அதில் இருவர் ஜெயம் பெற்றவர்கள், மற்ற இருவரும் நஷ்டவாளர்கள்..
முதலாமவர்: அவருக்கு அல்லாஹ் செல்வத்தையும் மார்க்கப்பற்று அறிவையும் கொடுத்துள்ளான். அவர் தன் மார்க்க அறிவு, பக்தியால் அல்லாஹ்வை அஞ்சியும் , பணத்தால் உறவினர் ஏழை எளியோருக்கு உதவியும் அல்லாஹ்வுக்குரிய பங்கு ( ஸக்காத்தை ) வழங்கியும் வாழ்கின்றார். இவர் மறுமையில் மனிதர்களில் முதல்த்தர அந்தஸ்த்தைப் பெற்றவராவார்.
இரண்டாமவர்: .அல்லாஹ் அவருக்கு மார்க்கப் பற்றையும் அறிவையும் கொடுத்த அதே வேளை செல்வத்தைக் கொடுக்கவில்லை. ஆனாலும் அவரோ உண்மையாகவே அல்லாஹ் எனக்கும் செல்வத்தைத் தந்திருந்தால் நல்வழிகளில் செலவுசெய்திருப்பேனே ! என மனதாறக் கவலைப்படுபவராவார். இவருக்கும் அல்லாஹ் இவரின் நல்ல மன உறுதிக்குப் பரிசாக முதலாமவரின் முதல்த்தர இடத்தைக் கொடுக்கின்றான்.
மூன்றாமவர் : இவருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான், இருப்பினும் மார்க்க அறிவையோ இறைபக்தியையோ கொடுக்கவில்லை. எனவே அவர் தன்னிலை மறந்து அகம்பாவத்துடன் தன் செல்வங்களை தீயவழிகளில் செலவுசெய்து இறை சாபத்துக்கு உள்ளாகின்றார். அல்லாஹ்வின் கடமைகள், உறவினர் ஏழைகளின் கடமைகள் எதையும் செய்யாது வாழ்கின்றார். இவர் அல்லாஹ்விடத்தில் மிகக் கெட்டவரும் மறுமையில் நரகில் மிக மோசமான இடத்திலும் இருப்பார்.
நான்காமவர்: இவருக்கு அல்லாஹ் மார்க்க அறிவையும் கொடுக்கவில்லை, செல்வத்தையும் கொடுக்கவில்லை. இருப்பினும் இவர் தன்னிடத்திலும் செல்வம் இருந்திருந்தால் தானும் மூன்றாம் மனிதனைப்போல் உல்லாசமாக இன்ப உலகில் வாழ்ந்திருப்பேனே என்று பேராசைப்படுகின்றார். இவருக்கு இவரின் கெட்ட எண்ணத்துக்காக மூன்றாமவருக்கு கொடுக்கப்பட்ட அதே நரகம் கிடைக்கின்றது .
ஆதாரம் ஸஹீஹ் திர்மிதி : 2325.
92. நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் :
இஹ்ஸான் என்பது இறைவனைப் பார்ப்பது போலவும்,
நீங்கள் அவனைக் காணவில்லையாயினும் அவன் உங்களைப் பார்க்கிறான் என்றும் வணங்க வேண்டும்
நூல்: ஸஹிஹ் அல் ஜாமிஹ் 2762
قال رسول الله صلى الله عليه وسلم
الإحسان أن تعبد الله كأنك تراه, فإن لم تكن تراه فإنه يراك
صحيح الجامع ٢٧٦٢
93. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தர்மம் பற்றிக் கேட்கப்பட்டபோது “அல்லாஹ்வைப் பார்ப்பது போல் வணங்குங்கள், நீங்கள் அவனை பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான்” என்று கூறினார்கள்.
شرح رياض الصالحين / ج1 / ص 326
94. நபியவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் சிறந்தவர் அடுத்தவருக்குப் பயனளிப்பவரே. மேலும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான அமல்கள் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் மகிழ்வை ஏற்படுத்துவது அல்லது அவனது ஒரு கஷ்டத்தை நீக்குவது, அல்லது அவனின் கடனை அடைப்பது, அல்லது அவனின் பசியைப் போக்குவது என நபியவர்கள் கூறினார்கள்.
நூல்:தபரானி
95. தய்யூஸ் என்றால் உங்களுக்கு யார் என்று தெரியுமா?
அதற்கு நபித்தோழர்கள் கூறினார்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்!
தய்யூஸ் என்றால்...
மறுமை நாளில் ஒருவன் வருவான் அவன் தங்களுடைய வீட்டுப் பெண்களான மனைவி மகள் சகோதரி தாய் போன்றவர்கள் அந்நிய ஆண்களுடன் பழகும் போது அதை கண்டுகொள்ளாமல் இருப்பவன்தான் தய்யூஸ்
இவனை அல்லாஹ் மறுமையில் பார்க்கவும் மாட்டான் அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான் கடும் நரகத்தில் வேதனை செய்யப்படுவான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
நூல்: திர்மீதி
96. வெள்ளை ஆடை அணியுங்கள். ஏனெனில், அது மிகத் தூய்மையானதும், மிக நறுமணம் உள்ளதுமாகும். அதிலேயே உங்களில் இறந்தோரை கபனிடுங்கள்.
நஸயீ : 4/34, ஹாகிம் : 4/185
97. இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
உறவைப் பேணுதல், நற்குணம், அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல், வீடுகளை செழிபாக்கும், வயதுகளை அதிகப்படுத்தும்.
நூல் - ஸஹீஹ் அல்ஜாமிஃ -3767
98. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அருளினார்கள் :
ஒரு மூஃமின் இன்னொரு மூஃமினை சலாம் கூறி கைகுலுக்கி சந்திக்கும்போது ஒரு மரத்திலிருந்து இலைகள் விழுவதுபோல் அவர்கள் இருவரின் பாவங்களும் உதிர்ந்துவிடும்.
அறிவிப்பாளர் : ஹுஜைzஃபா இப்னு அல்-யமான் رضی
ஆதாரம்:
المُعْجَمُ الاَوْسَط அல்-மு'ஜமுல்-அவ்ஸத்
99. அபூ ராஃபி’ அறிவிக்கிறார்:
அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்:
“ஒரு காரியத்தைச் செய்யும் படியோ, அல்லது தவிர்ந்து கொள்ளும் படியோ நான் சொன்னதாக ஒரு செய்தி உங்களிடம் கூறப்பட்டால், அதைக் கேட்ட பிறகும் தன் இருக்கையில் சாய்ந்து கொண்டு, ‘அல்லாஹ்வின் வேதத்தில் (குர்ஆனில்) என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதை மட்டுமே நாம் பின்பற்றுவோம்; அதைத் தவிர வேறெதுவும் எங்களுக்குத் தெரியாது’ என்று கூறும் ஒருவராக உங்களில் யாரும் இருக்க வேண்டாம்”
- ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னு மாஜா
لَيْسَ مِنِّي إِلَّا عَالِمٌ أَوْ مُتَعَلِّمُ
100. கற்பிப்பவரோ கற்பவரோ அன்றி வேறு எவரும் என்னைச் சார்ந்தவர் அல்லர்'
என தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: இப்னு உமர்/தபுரானி, தைலமி
101. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களை அவமதிப்பவர் (ஏசுபவர், பழிப்பவர்,) மீது அல்லாஹ்வின் தூதர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபம் அவர் மீது இருக்கும்.
صحيح الجامع 6419
102. அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் (நபித் தோழர்) ஸஈத் இப்னு யஸீத் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்:
உமது சமுதாயத்தில் நல்ல மனிதர் முன்னிலையில் (பாவம் செய்வதற்கு) வெட்கப் படுவதைப் போன்று,
அல்லாஹ்வின் முன் (பாவம் செய்வதைவிட்டு) வெட்கப்படுமாறு நான் உமக்கு நல்லுபதேசம் செய்கிறேன்.
நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஃ (741)
103. ஒருவர் தொழுகை அழைப்பை பாங்கு செவியுற்று காரணமில்லாமல் பள்ளிக்குத் தொழ வரவில்லையென்றால் அவர் அத்தொழுகையை வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ தொழுதால் அவருடைய அத்தொழுகை ஏற்கப்படாது
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவியவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: இப்னுமாஜா 785
104. இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
மனிதன் தன்னோடும் தனது மன இச்சைகளோடும் புரியும் ஜிகாதே சிறந்த ஜிஹாத் (போராட்டம்)
நூல் - ஸஹீஹுல் ஜாமிஃ-1099
105. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"உங்களில் யாருக்கு துஆவினுடைய வாயில் திறக்கப்பட்டு விடுகின்றதோ.
அவருக்கு அல்லாஹ்வினுடைய அருளினுடைய வாயில் திறக்கப்பட்டு விட்டது.
அல்லாஹ்விடம் எது கேட்கப்பட்டாலும் அல்லாஹ் அவருக்கு அதனை வழங்கி விடுவான்”.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரழி)
நூல் : திர்மிதி
106. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக பிரார்த்தனை, நடைபெற்ற இன்னும் நடைபெறப் போகின்ற தீங்குகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றது.
எனவே அல்லாஹ்வின் அடியார்களே!
அதிகமாக பிரார்த்தியுங்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரழி)
நூல் : திர்மிதி
107. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஸயீத் அல்-குத்ரீ (ரழி) அறிவிக்கின்றார்கள்;
முஃமினைத் தவிர வேறு எவரையும் நீ தோழமை கொள்ள வேண்டாம்.
உனது உணவை இறையச்சம் உள்ளவரைத் தவிர எவரும் உண்ண வேண்டாம்"
நூல்: அபூதாவூது : 4832. திர்மிதி : 2395
108. ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்பிக்கை (ஈமான்) கொண்ட உள்ளங்கள் மட்டுமே சொர்க்கத்தில் நுழையும்.
صحيح النسائي للألباني 2958
قال رسول الله صلی اللہ علیہ وسلم
لا يدخل الجنّة إلا نفس مؤمنة
109. ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவை துண்டிப்பவர் (முறிப்பவர்) சொர்க்கத்தில் நுழைய மாட்டார்
قال رسول الله صلی اللہ علیہ وسلم
لا يَدْخُلُ الجَنَّةَ قاطِعُ رَحِمٍ
صحيح مسلم ٢٥٥٦
110. வீட்டை விட்டு வெளியேறும்போது
دعاء الخروج من المنزل
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
قال رسول الله صلی اللہ علیہ وسلم
அல்லாஹ்வின் பெயரால்...
அல்லாஹ்விடம் பொறுப்பு ஒப்படைக்கிறேன்;
பாவத்திலிருந்து மீளவோ,
நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது அல்லாஹ்வைக் கொண்டே தவிர!
அவரிடம் கூறப்படும் :
நீங்கள் கவனித்துக் கொள்ளப்பட்டீர்கள்,
பாதுகாக்கப்பட்டீர்கள் ஷைத்தானிடம் இருந்து
من قال إذا خرج من بيته:
بسمِ اللهِ،
توكَّلْتُ على الله،
لا حول ولا قوة إلا بالله
يُقال له:
كُفِيتَ ووُقِيتَ، وتنحى عنه الشيطان
صحيح الجامع - 6419
111. வித்ரு தொழுதாகவேண்டிய கடமை!
வித்ரு தொழுகாதவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்!
வித்ரு தொழுதாகவேண்டிய கடமை!
வித்ரு தொழுகாதவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்!
வித்ரு தொழுதாகவேண்டிய கடமை!
வித்ரு தொழுகாதவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்!'
நூல்: புரைதா/ அபூதாவுது, முஸ்னத் அஹ்மத்
الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَّمْ يُوتِرُ فَلَيْسَ مِنَا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَّمْ يُوتِرُ فَلَيْسَ مِنَّا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَّمْ يُوتِرُ فَلَيْسَ مِنَّا
112. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
'மனிதர்களுக்கு மத்தியில் தொழும்போது மிகவும் பயபக்தியோடும் தனிமையில் தொழும்போது மிகவும் கவனக்குறைவாகவும் தொழுபவர்,
இதன் மூலம் கண்ணியமும் மகத்துவமும் மிக்க தன் இறைவனை இழிவுபடுத்தும் செயலைச் செய்துவிட்டார்.’
நூல்: அத்தர்ஃப் வத்தர்ஹீப்
113. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
'உங்கள் குழந்தைகளைக் கண்ணியமாக வளர்த்தெடுங்கள்.
அவர்களுக்கு நன்னடத்தைப் பயிற்சி கொடுங்கள்.'
நூல்: அத்தர்ஃஙீப் வத்தர்ஹீப், இப்னுமாஜா
114. "யார் குறி சொல்பவரிடம் சென்று, அவர் சொல்பவற்றை உண்மைப்படுத்துகிறாரோ (நம்புகிறாரோ) அவர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கப்பட்ட வேதத்தை புறக்கணித்துவிட்டார்"
நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ
115. மூன்று நபர்களை விட்டும் சட்டம் உயர்த்தப்பட்டு விட்டது.
01. அறிவை இழந்த பைத்தியகாரர் தெளிவடையும் வரை.
02. தூங்குபவர் விழிக்கும் வரை
04. குழந்தை பருவ வயதை அடைகின்ற வரை.
நூல்: அபூதாவூத் - 3823.
116. “இறைவா! என்னுடைய பாவத்தை மன்னித்து விடுவாயாக!
என் வீட்டை விசாலமாக்குவாயாக!
என் வாழ்வாதாரத்தில் – ரிஜ்கில் அபிவிருத்தி செய்வாயாக!”
நூல்: இப்னு அபீ ஷைபா - 29384
وقد كان الرسول - صلى الله عليه وسلم - يدعو، فيقول:
(اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي دَارِي وَبَارِكْ لِي فِي رِزْقِي)
ابن أبي شيبة(29384) صحيح
117. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”நான் நரக நெருப்பை விட பயங்கரமான ஒன்றைப் பார்த்ததில்லை ஆனால்,
அதனைவிட்டு வெருண்டோட வேண்டியவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
நான் சுவனத்தை விட உயர்ந்த ஒன்றைப் பார்த்ததில்லை.
ஆனால், அதனை விரும்பக்கூடியவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்”.
நூல்: திர்மிதி
118. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் ஒரு அடியானுக்கு நலவை நாடி விட்டால் உலகத்திலேயே (அவருடைய பாவங்களுக்கான) தண்டனையை அவருக்கு முந்தி கொடுத்து விடுவான்.
أخرجه الترمذي ٢٣٩٦
119. உம்முடைய சகோதரருடன் சண்டையிடாதீர்!
(அவரது மனம் புண்படும்படி) அவரைக் கேலி செய்யாதீர்!
உம்மால் நிறைவேற்ற முடியாத காரியங்களில் வாக்களிக்காதீர்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக
ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் :திர்மிதீ 1995
120. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"துஆதான் வணக்கமாகும்."
உங்களது இறைவன் கூறுகின்றான்:
“என்னை அழையுங்கள்;
நான் உங்களுக்கு பதில் தருகிறேன்."
நூல்: ஸுனன் அபூதாவூது, ஸுனன் திர்மிதி
121. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது இறைவன் மிக வெட்கமுள்ளவன்,
சங்கை மிக்கவன் தனது அடியான் இரு கரங்களையும் தன் பக்கம் உயர்த்தி பிரார்த்தனை செய்யும்போது அவனது கைகளை காலியாக திருப்புவதைக் கண்டு அவன் வெட்கமடைகிறான்.
நூல்: ஸஹீஹுல் ஜாமிஃவு ஸகீர்
122 இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள் :
லூத் சமூகத்தின் செயலைச் செய்தவரை அல்லாஹ் சபிப்பானாக..!
லூத் சமூகத்தின் செயலைச் செய்தவரை அல்லாஹ் சபிப்பானாக..!
என்று மூன்று முறை (நபி (ﷺ) அவர்கள்) கூறினார்கள்.
நூல்: அஹ்மத் - 2915
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
( لَعَنَ اللَّهُ مَنْ عَمِلَ عَمَلَ قَوْمِ لُوطٍ ، لَعَنَ اللَّهُ مَنْ عَمِلَ عَمَلَ قَوْمِ لُوطٍ ، ثَلاثًا )
وروى أحمد (2915)
123. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர்,
தன் சகோதர முஸ்லிமைச் சந்தித்தால், அவருக்கு "ஸலாம்" கூறட்டும்.
(ஸலாம் கூறிய பின்னர்)
அவர்களை ஒரு மரமோ சுவரோ,
கற் பாறையோ மறைத்து,
பின்பு (மீண்டும்) சந்தித்தால் அப்போது(ம்) அவருக்கு "ஸலாம்" கூறட்டும்.)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஃ (789)
124. அல்லாஹ்வின் மன்னிப்பின் விசாலம்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தாம் செவிமடுத்ததாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ் கூறுகிறான்“ஆதமுடைய மகனே! நீ எனது மன்னிப்பை ஆதரவு வைத்து, என்னை அழைத்துப் பிரார்த்திக்கும் காலமெல்லாம்! நான் உனது பாவங்களை மன்னிப்பதோடு அவற்றை நான் பொருட்படுத்தமாட்டேன்.
ஆதமின் மகனே! உனது பாவங்கள் வானத்தின் முகட்டை தொடுமளவு இருந்தாலும் பின்பு என்னிடம் நீ என்னிடம் மன்னிப்புக் கேட்டால் உனது பாவங்களை நான் மன்னிப்பேன்.
ஆதமின் மகனே! எனக்கு நீ இணை கற்பிக்காத நிலையில் பூமி முழுவதும் பாவத்தோடு நீ என்னிடம் வந்தாலும், நான் உன்னிடம் அதே பூமி முழுக்க மன்னிப்புடன் வருவேன்”.
நூல்: திர்மிதீ- ஹதீஸ் ஹஸன்
125. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் பத்து வசனங்களை ஓதுபவர் கவனக்குறைவானவர் என்று எழுதப்படமாட்டார்.
"من قرأ عشر آيات في ليلةٍ لم يُكتب من الغافلين"
صحيح الترغيب 640
126. அல்லாஹ்வின் தூதர் அவர்களே !
எனது தாயார் மரணித்து விட்டார் நான் அவருக்காக தர்மம் செய்யட்டுமா? ஆம் என்று பதில் கூறினார்கள்.
எந்த தர்மம் சிறந்தது என்று கேட்டேன் ? தண்ணீர் புகட்டுவது என்று சொன்னார்கள்.
நூல் - ஸுனன் நஸாஈ
எண்-3666
அறிவிப்பாளர் - ஸஃது பின் உபாதா ரழியல்லாஹு அன்ஹு, தரம்- ஹஸன் (அங்கீகாரம் பெற்றது)
يا رسولَ اللهِ ! إنَّ أمي ماتت ، أفأتصدقُ عنها ؟ قال : نعم . قلتُ : فأيُّ الصدقةِ أفضلُ ؟ قال : سقْيُ الماءِ
الراوي : سعد بن عبادة | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 3666 | خلاصة حكم المحدث : حسن
127. ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்பவர் பெருமையை விட்டும் நீங்கிவிட்டார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : பைஹகி
128. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிறந்த திருமணம் எளிதான ஒன்று
(அதாவது, மஹர் மற்றும் பிற விஷயங்களைக் குறைப்பதன் மூலம் மனிதனுக்கு எளிதாக்குங்கள்)
நூல் : ஸஹீஹ் அல்-ஜாமிஹ் 3300 / அவுன் அல்-மஹ்பூத் 2117
قال رسول الله صلى الله عليه وسلم :
خيرُ النِّكَاحِ أَيْسَرُهُ
أي: أسهله على الرجل بتخفيف المهر وغيره
١- صحيح الجامع ۳۳۰۰
-٢- عون المعبود ۲۱۱۷
129. நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்,
கெட்ட செயலை துடைக்க (போக்க) நல்ல செயலை பின்பற்றுங்கள்,
மக்களை நல்ல நடத்தையுடன் நடத்துங்கள்."
நூல்: ஸஹீஹ் அத் - திர்மிதி
قال ﷺ:
"اتقِ اللهَ حيثُما كنتَ وأتبعِ السيئةَ الحسنةَ تمحُها وخالقِ الناسَ بخُلقٍ حسنٍ"
صحيح الترمذي
130. அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு பெண் தன் கணவனின் உரிமைகளை நிறைவேற்றும் வரை ஈமானின் (சுவையை) இனிமையைக் காணமாட்டாள்."
قالﷺ:
"لا تَجدُ المرأة حلاوة الإيمان حتَّى تؤدِّي حقَّ زوجها"
صحيح الترغيب 1939
131. ஹிஜாப் (பர்தா), முகம் உட்பட முழு உடலையும் மறைக்க வேண்டும்
திர்மிதீ: 1169
132. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
1) அனைத்து பாவங்களின் மூல ஆதாரம் என்பது உலக ஆசை ஆகும்.
2) அனைத்து குழப்பங்களின் மூல ஆதாரம் என்பது ஜகாத்தை தடுப்பது ஆகும்.
நூல் : முனப்பஹாத்
133. இரண்டு விஷயங்கள்
1. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மிக சிறந்த இரண்டு குணங்கள்
1) அல்லாஹ்வை நம்புவது
2) முஸ்லிம்களுக்கு பயன் அளிப்பது
மிக கெட்ட இரண்டு குணங்கள்
1) அல்லாஹ்விற்கு இணை வைப்பது
2) முஸ்லிம்களுக்கு நோவினை தருவது
நூல் : முனப்பஹாத்
134. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
1) கல்விமான்களின் சபைகளில் அமருங்கள்
2) கல்விமான்களின் சொற்களை செவி தாழ்த்தி கேளுங்கள் ஏனெனில்,
நிச்சயமாக அல்லாஹ் இறந்த பூமியை மழை நீரைக் கொண்டு உயிர்ப்பிப்பது போல்,
இறந்த உள்ளங்களை கல்வியின் ஒளியைக் கொண்டு உயிர்ப்பிக்கிறான்
நூல் : முனப்பஹாத்
135. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிழலே இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களுக்கு தன்னுடைய அர்ஷின் நிழலை அளிப்பான்.
1) கடுமையான நேரத்தில் உளூ செய்பவர்.
2) இருளில் பள்ளிக்கு நடந்து வந்தவர்.
3) பசித்தவருக்கு உணவளிப்பவர்.
நூல் : முனப்பஹாத்
136. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வியைத் தேடி பல கூட்டத்தினர்கள் உங்களிடம் வருவார்கள்.
அப்படி அவர்களை நீங்கள் கண்டால்,
அவர்களுக்கு இறைத்தூதரின் நல்வாழ்த்துப் பெற்றவர்களாக உங்களை வரவேற்கின்றோம் என்று கூறுங்கள்.
மேலும், கல்வி கற்றுக் கொடுத்து அவர்களைத் திடப் படுத்துங்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸஈத் அல்-குத்ரி (ரழியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: ஸுனன் இப்னு மாஜா -ஹஸன் என்ற தரத்தில்- (247), மேலும், ஸஹீஹ் அல் ஜாமிஃ (3651)
137. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியத்திற்குரியவர்களின் கண்ணியத்தை கண்ணியமானவர்களே அறிந்துகொள்வார்கள்.
அறிவிப்பவர்:அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்:கழாயீ 146
138. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள்.
அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள்.
அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை.
திர்மிதீ 1083
139. நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறைவிஷயத்தில் கருத்து வேறுபாடுகள் கொள்வதும்,
முதல் நாள் பிறையை பார்த்து இரண்டாம் நாள் பிறை என்று கூறுவதும்,
பள்ளிவாசல்களை பாதைகளாக ஆக்கிக் கொள்வதும்,
திடீர் மரணங்கள் அதிகமாக நிகழ்வதும் மறுமைநாளின் அடையாளங்களாகும்.
நூல் : தப்ரானீ, அல்முஃஜமுல் அவ்ஸத், அல்முஃஜமுல் ஸஙீர், அல்முஃஜமுல் கபீர்
140. அபுல் ஹவ்ரா ஸஅதீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்:
நான் ஹஸன் இப்னு அலீ (ரழி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் எதை மனனம் செய்துள்ளீர்கள்' என்று கேட்டேன்.
அதற்கு அவர் 'உனக்கு சந்தேகம் அளிக்கின்ற விசயத்தை விட்டுவிட்டு சந்தேகம் அளிக்காதவற்றின் பக்கம் கவனம் செலுத்து' என்று நபியவர்கள் சொன்னதை நான் மனனம் செய்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.
நூல் : திர்மிதீ 2518,
நூல் : ஸஹீஹ் ஜாமிஃ 3378
141. அல்லாஹ்வின் தூதர் [ஸல்] கூறியதாக அபூஹுரைரா அறிவிக்கிறார்:
مِنْ حُسْنِ إِسْلَامِ المَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ
ஒருவர் வீணானவற்றை விட்டுவிடுவது அவருடைய இஸ்லாம் சிறப்பாக இருக்கின்றது என்பதற்கான அடையாளமாகும்.'
நூல் : திர்மிதீ 2317,
ஸஹீஹ் ஜாமிஃ 5911
142. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தன் உயிருக்கு பாதுகாப்பும்,
தன் உடலுக்கு ஆரோக்கியமும் பெற்று.
அன்றைய தினத்திற்கு வேண்டிய உணவு தம்மிடம் இருக்க காலைப்பொழுதை அடைபவர் இவ்வுலகை ஒருசேர வழங்கப்பட்டவரைப் போலாவார்.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் இப்னு மிஹ்ஸன் (ரழி)
நூல்: திர்மிதி 2346
143. அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரவில் எழுந்து தொழுது விட்டு.
பின்னர் தன் மனைவியை எழுப்பி,
அவள் எழ மறுக்கையில் அவளின் முகத்தில் தண்ணீரை தெளித்து (எழுப்பிய) கணவருக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!
(மேலும்) இரவில் எழுந்து தொழுது விட்டு,
பின்னர் தன் கனவரை எழுப்பி,
அவன் எழ மறுக்கையில் அவனின் முகத்தில் தண்ணீரை தெளித்து (எழுப்பிய) மனைவிக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!
நூல் : அபூதாவூத்:1308
144. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் துஆவை விட கண்ணியமான ஒன்று எதுவும் இல்லை
நூல்: அல் அதபுல் முஃப்ரது
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنِ النَّبِيَّ صلى الله عليه وسلم
قَالَ لَيْسَ شَيْءٍ أَكْرَمَ عَلَى اللَّهِ مِنَ الدُّعَاءِ
145. அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
பெண்களில் சிறந்தவர் யார்?' என்று நபி அவர்களிடம் வினவப்பட்டது.
'கணவன் அவளைக் கண்டால் அவனைச் சந்தோஷப்படுத்துவாள்;
அவன் உத்தரவிட்டால் அவனுக்குக் கீழ்ப்படிவாள்;
தன் உயிரிலும் தன் பொருளிலும் அவனுக்குப் பிடிக்காததைச் செய்து மாறுசெய்யமாட்டாள்' என்பதாக நபியவர்கள் கூறினார்கள்.
நூல் : நஸாயீ 3231, ஸஹீஹா 1838
146. ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
أَعْظَمُ النِّسَاءِ بَرَكَةً أَيْسَرُهُنَّ مَشُونَةً
பெண்களில் பரக்கத் நிறைந்தவர்கள் சிக்கனமாகச் செலவு செய்பவர்கள்
நூல் : அஹ்மது 25119
ஷுஐபு அல்அர்னாவூத்: ளயீஃப்
147. இஸ்பஹான் நாட்டு யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான்.
மதீனாவை நெருங்கி அதன் எல்லையில் இறங்குவான்.
அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும்.
ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள்.
அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) கெட்ட மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள்.
ஷாம் நாட்டில் உள்ள பாலஸ்தீன் நகரின் லுத்' எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான்.
அங்கே ஈஸா அலைஹி வஸல்லம் இறங்கி அவனைக் கொல்வார்கள்.
அதன் பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா அலைஹி வஸல்லம் இப்பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிமானாக வாழ்வார்கள்.
என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா.
நூல் : அஹ்மத் 23327. தரம் : ஸஹீஹ்.
148. மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருப்பின் காலுறையின் அடிப்பாகமே அதன் மேல்ப்பாகத்தை விட மஸஹ் செய்வதற்குத் தகுதியானதாகும்.
ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தனது காலுறைகளின் மேல்பாகத்தின் மீதே மஸஹ் செய்யக்கண்டுள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்து கைர் (ரலி)
நூல் : ஸுனன் அபூதாவுத் - 162
தரம் : ஸஹீஹ்.