யாருடனும் பகைமை கொள்ளாத மனிதனுக்கு கிடைக்கும் பாக்கியம்.


"சுவனத்தின் வாயல்கள் ஒவ்வொரு திங்களும், வியாழனும் திறக்கப்படுகின்றன. 

அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; 

தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர. அப்போது 'இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்." என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், (முஸ்லிம்: 6709)

நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.  ஆயிஷா(ரலி) 745, திர்மிதி, அஹ்மத்,  இப்னுமாஜா

மேலும் “ஒவ்வொரு வியாழன் மற்றும், திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – அபுஹூரைரா(ரலி) அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா

*விளக்கம்:*

அல்லாஹ் பல சந்தர்ப்பங்களில் நிபந்தனைகள் அடிப்படையில் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கிறான். அப்படியான ஓர் சந்தர்ப்பம் தான் இதுவும். சுவனத்தின் வாயால்கள் திறக்கப்படும் இந்த நாட்களில் அல்லாஹ் தன் அடியார்களில் அவனுக்கு எதையும் இணை கற்பிக்காத யாருடனும் பகைமை கொள்ளாத அடியார்களின் பாவங்களை மன்னிக்கின்றான். இந்த நாட்களில்  யாரெல்லாம் பகைமையுடன் இருக்கின்றார்களோ அவர்கள் ஒற்றுமையாகும் வரை இந்த பாக்கியம் அவர்களுக்கு கிடைக்காது. அமற்கள் இறைவனிடம் சமர்பிக்கப்படும் இன்நாட்களில் நாம் நோன்பு நோற்றவராக இருக்க முயற்சிக்க வேண்டும். நபிகாளார் ஸல் அவர்கள் ஒவ்வொரு திங்களும்,  வியாழனும் நோன்பு நோற்றுள்ளார்கள். எனவே  அடுத்தவர்களுடன் குரோதம் கொள்ளாது நல்ல முறையில் நடந்து கொண்டு இந்த பாக்கியத்தை பெறும்  மக்களாக மாற நாம் முயற்சிக்க வேண்டும்.  

*நட்புடன்:*
_அல் ஹாபில் இன்திகாப் உமரீ_
இலங்கை
Previous Post Next Post