🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“நன்மை செய்வோருக்கு (நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக!”* (அல்குர்ஆன், 22:37)
அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வசனத்தை இவ்வாறு விளக்கப்படுத்துகின்றார்கள்:-
“வணக்க வழிபாட்டை அல்லாஹ்வுக்கு நிறைவேற்றுவதுகொண்டு நன்மை செய்வோருக்கு (நபியே) நீங்கள் நன்மாராயம் கூறுங்கள்! அந்த வணக்கத்தை அவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பது போல நிறைவேற்றுவார்கள்; அந்நிலைக்கு அவர்கள் செல்லவில்லை என்றால், தமது வணக்கத்தை நிறைவேற்றும் நேரத்தில் அல்லாஹ்வின் கண்காணிப்பும் அவனது பார்வையும் இருந்துகொண்டிருக்கிறது என்று உறுதிகொண்டவர்களாக அவனை அவர்கள் வணங்குவார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்மை செய்வோராகவும் அவர்கள் இருப்பார்கள். பணம் மற்றும் பொருளுதவி, அல்லது கல்வி, அல்லது பட்டம் பதவி, அல்லது உபதேசம், அல்லது நன்மையை ஏவுதல், அல்லது தீமையைத் தடுத்தல், அல்லது அழகிய வார்த்தை போன்ற அனைத்து வகையான நன்மைகளையும் அவர்கள் செய்வார்கள்.
நன்மை செய்வோருக்கு அல்லாஹ்விடமிருந்து ஈருலக நற்பாக்கியம் கிடைக்கின்றது. அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டிலும், அவனுடைய அடியார்கள் விடயத்திலும் அவர்கள் நன்மை செய்ததுபோல் அல்லாஹ்வும் அவர்களுக்கு (அதற்கான கூலியைக் கொடுத்து) உபகாரம் செய்வான். அல்லாஹ் கூறுகிறான்: *“நன்மைக்குக் கூலி நன்மையேயன்றி வேறென்னதான் இருக்கிறது?!”* (அல்குர்ஆன், 55:60).
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: *“நன்மை செய்தோருக்கு அழகான கூலியும், மேலதிகமும் இருக்கின்றது”*. (அல்குர்ஆன், 10:26)
🎯 قال الله تبارك وتعالى: *«وبشّر المحسنين»* (سورة الحج، الآية : ٣٧ )
قال العلاّمة المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:-
{ *« وبشّر المحسنين »* بعبادة الله بأن يعبدوا الله كأنهم يرونه، فإن لم يصلوا إلى هذه الدرجة فليعبدوه معتقدين وقت عبادتهم اطّلاعه عليهم، ورؤيته إيّاهم.
والمحسنين لعباد الله بجميع وجوه الإحسان من نفع مال، أو علم، أو جاه، أو نصح، أو أمر بمعروف، أو نهي عن منكر، أو كلمة طيبة ونحو ذلك.
فالمحسنون لهم البشارة من الله بسعادة الدنيا والآخرة، وسيحسن الله إليهم كما أحسنوا في عبادته ولعباده، قال الله تعالى: *« هل جزاء الإحسان إلا الإحسان »* - سورة الرحمن، الآية: ٦٠ - *« للذين أحسنوا الحسنى وزيادة »* - سورة يونس، الآية: ٢٦ - }
[ المصدر: ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان' للسعدي، ص - ٤٨٨ ]
🎁➖➖➖➖➖➖➖➖🎁
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா