🎯 *“(நபியே!) எது மிகச் சிறந்ததோ அதைக்கொண்டே தீமையை நீங்கள் தடுங்கள்!”* (அல்குர்ஆன், 23: 96)
அல்குர்ஆன் விரிவுரையாளர், அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“அழகிய பண்புகளைக் கடைப்பிடிக்குமாறு தனது தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டவற்றில் இதுவும் ஒன்றாகும். 'அதாவது, தீங்கிழைத்தவனுக்கு அவன் இழைத்த தீங்கின் அளவுக்கு தண்டனை கொடுப்பது ஆகுமானதாக இருந்தாலும் உமது எதிரிகள் உமக்கு சொல்லாலோ, செயலாலோ தீங்கிழைத்துவிட்டால் அவர்களை நீங்கள் தீங்கிழைத்தல் மூலம் எதிர்கொண்டு விடாதீர்கள். மாறாக, அவர்கள் உமக்கிழைத்த தீங்கை நீங்கள் அவர்களுக்குச் செய்யும் நன்மை மூலம் தடுத்து விடுங்கள். இதுதான், தீங்கிழைத்தவனுக்கு உங்களிடமிருந்து கிடைக்கின்ற சிறப்பும் கண்ணியமுமாகும்'! என்பதுதான் இதன் அர்த்தமாகும்.
மன்னிப்பதால் விளையும் நலவுகள் வருமாறு:-
🎯 மன்னிக்கின்ற அந்நேரத்திலும், எதிர்வருகின்ற காலத்திலும் உம்மை விட்டும் தீங்கு குறைக்கப்படுகின்றது.
🎯 தீங்கிழைத்தவனை சத்தியத்தின் பக்கம் கொண்டு வருவதற்கான பெரியதோர் தூண்டு காரணியாக இது இருக்கின்றது.
🎯 தீங்கிழைத்தவனை அவன் செய்த பாவத்திற்காக கைசேதப்பட்டு, கவலைப்பட வைக்கிறது.
🎯 தீங்கு செய்வதிலிருந்து தீங்கிழைத்தவனைத் தடுத்து, பாவமன்னிப்பின் மூலம் அவனை நல்வழிக்கு மீண்டு வர வைக்கிறது.
எனவே, மன்னிப்பவர் இந்நல்ல பண்பைக் கடைப்பிடித்துக் கொள்ளட்டும்; இதன்மூலம் தனது எதிரியான ஷைத்தானை அவர் அடக்கியொடுக்கட்டும்; (இதற்காக) அல்லாஹ்விடம் நற்கூலியைப் பெற்றுக்கொள்கின்ற தகுதியை அவர் அடைந்துகொள்ளட்டும். அல்லாஹ் கூறுகிறான்: *“தீமைக்குக் கூலி அதைப்போன்ற தீமையைச் செய்வதேயாகும். எனினும் எவர் மன்னித்து, (உறவை) சீர்செய்து கொள்கிறாரோ அவருடைய கூலி அல்லாஹ்விடமே இருக்கின்றது”.* (அல்குர்ஆன், 42: 40)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: *“நன்மையும் தீமையும் சமமாகமாட்டாது. எது மிகச் சிறந்ததோ அதைக்கொண்டே (தீமையை) நீர் தடுப்பீராக. அப்போது, எவருக்கும் உமக்குமிடையில் பகைமை இருக்குமோ அவர் உற்ற நண்பரைப்போல் ஆகிவிடுவார்.🔅பொறுமையாக இருப்போரைத் தவிர வேறு எவருக்கும் இ(ப்பண்பான)து கொடுக்கப்படமாட்டாது. மேலும், மகத்தான பாக்கியமுடையோரைத் தவிர வேறு எவருக்கும் இது கொடுக்கப்படமாட்டாது”.* (அல்குர்ஆன், 41: 34,35)
{ நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான் fபீ தfப்சீரி கலாமில் மன்னான்', 01/558 }
🌄➖➖➖➖➖➖➖➖🌄
قال العلّامة المفسّر عبدالرحمن بن ناصر السّعدي رحمه الله تعالى :-
{ هذا من مكارم الأخلاق التي أمر الله رسوله صلّى الله عليه وسلم بها فقال: *« إدفع بالتي هي أحسن السيّئة »* (سورة المؤمنون، الآية - ٩٦). أي: إذا أساء إليك أعداؤك بالقول والفعل فلا تقابلهم بالإساءة، مع أنه يجوز معاقبة المسيئ بمثل إساءته، ولكن إدفع إساءتهم إليك بالإحسان منك إليهم، فإن ذلك فضل منك على المسيئ.
ومن مصالح ذلك: أنه تخف الإساءة عنك في الحال وفي المستقبل، وأنه أدعى لجلب المسيئ إلى الحق، وأقرب إلى ندمه وأسفه، ورجوعه بالتوبة عمّا فعل.
وليتّصف العافي بصفة الإحسان، ويقهر بذلك عدوّه الشيطان، وليستوجب الثواب من الرّبّ، قال تعالى: *« فمن عفا وأصلح فأجره على الله »* (سورة الشورى، الآية - ٤٠)، وقال تعالى: *« ولا تستوي الحسنة ولا السّيّئة إدفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه وليّ حميم🔅 وما يلقّاها إلاّ الذين صبروا وما يلقّاها إلاّ ذو حظّ عظيم »* } (سورة حم السجدة، الآية - ٣٤،٣٥)
{ تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان، ١/٥٥٨ }
🌄➖➖➖➖➖➖➖➖🌄
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா