அறிஞரையும், அவர் மனைவியையும் அழ வைத்த வியாழக்கிழமை


         இமாம் இப்றாஹீம் அந்நஹஈ (ரஹ்) அவர்கள் வியாழக்கிழமை அன்று தன் மனைவியைப் பார்த்து அழக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர் மனைவியும் அவரைப் பார்த்து அழக்கூடியவர்களாக இருந்தார்கள். *“இன்றைய நாளில், எமது செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன!”*என்று இமாமவர்கள் கூறிக்கொள்வார்கள்.

{ நூல்: 'லதாஇபுfல் மஆரிப்f ' , பக்கம் : 127 }


             كان الإمام إبراهيم النخعي رحمه الله تعالى يبكي إلى امرأته يوم الخميس، وتبكي إليه! ويقول: *[ اليوم تعرض أعمالنا على الله عز وجل! ]*

{ لطائف المعارف، ص - ١٢٧ }

➖➖➖👇👇👇👇➖➖➖

👉🏿 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் மனிதர்களின் செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகி்ன்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணை வைக்காத ஒவ்வொரு மனிதனுக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கும் தமது சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. அப்போது, “இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும் வரை இவர்களை விட்டு வையுங்கள்; இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும் வரை இவர்களை விட்டு வையுங்கள்!” என்று கூறப்படுகிறது.

{ நூல்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம்: 5014 }

➖➖➖➖➖➖➖➖➖➖

               ✍தமிழில்✍

                அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

             

🍁🍁🍁💫🍀🍀💫🍁🍁🍁

أحدث أقدم